Published:Updated:

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

கேள்வி-பதில்

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

கேள்வி-பதில்

Published:Updated:
அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா, ரிலையன்ஸ் குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளேன். இதை அப்படியே மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு மாற்றும் வசதி உள்ளதா?

தியானேஷ், சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
சங்கர்,
நிதி ஆலோசகர்.

''ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலிருந்து மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு முதலீடுகளை மாற்றிக் கொள்ளும் வசதி இல்லை. யூனிட்களை விற்றுவிட்டுதான், அந்தத் தொகையை வேறு நிறுவன ஃபண்டுகளில் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால்,  ஒரே நிறுவனத்தில் உள்ள ஒரு திட்டத்திலிருந்து வேறு ஒரு திட்டத்துக்கு உங்கள் முதலீட்டை மாற்றிக் கொள்ள முடியும்.

இதேபோல் ஒரு ஆப்ஷனிலிருந்து மற்றொரு ஆப்ஷனுக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு, குரோத் ஆப்ஷனிலிருந்து டிவிடெண்ட் ஆப்ஷனுக்கு மாற்றிக் கொள்ளலாம்.''

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

சி.எம்.டி.ஏ. அப்ரூவல் பெற்ற வீட்டை வாங்க அட்வான்ஸ் கொடுத்தோம். அட்வான்ஸ் கொடுத்தப் பின்புதான் பில்டர் பிரீமியம் எஃப்.எஸ்.ஐ.க்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வந்தது. மேலும், திருத்தப்பட்ட புதிய பிளானையும் கொடுக்கத் தயங்குகிறார். திருத்தப்பட்ட பிளான் நகலை சி.எம்.டி.ஏ.வில் நாங்கள் பெற முடியுமா?

ஹரிசுதா, ஜெர்மனி.

மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு பிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

''அப்ரூவல் பெற்ற வீடு என்கிறபோது அதற்குரிய எல்லாவித ஆவணங்களையும் பில்டர் தங்களுக்குக் கொடுக்க வேண்டும். பிரீமியம்  எஃப்.எஸ்.ஐ. (இல்லாத இடத்துக்கு கூடுதல் பணம் கொடுத்து பெறுவது) அனுமதியும் இல்லை, வரைபட நகலையும் கொடுக்கத் தயங்குகிறார் என்கிறபோது அந்த இடத்தை வாங்குவது நல்லதல்ல. திருத்தப்பட்ட பிளான் நகலை நீங்கள் நேரடியாக சி.எம்.டி.ஏ-வில் வாங்க முடியாது.''

தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வங்கிக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மகேஷ், கூடுவாஞ்சேரி.

உன்னி கிருஷ்ணன், இயக்குநர். ஃபெடரேஷன் ஆஃப் எக்ஸ்போர்ட்டர் அசோசியேஷன்.

''ஏற்றுமதிக்குரிய ஆர்டர்  (export order) மூலம் தாராளமாக வங்கிக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஏற்றுமதி ஆர்டரின் மதிப்பில் எழுபத்தைந்து சதவிகிதம் வரை கடன் கிடைக்கும். வங்கிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளில் ஏற்றுமதி தொழிலுக்கென்று தனிச் சலுகை கிடையாது.'  

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

நான் அரசு ஊழியர். எனது அப்பாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்குச் செய்த செலவை என்னுடைய வருமான வரிக் கணக்கில் காட்ட முடியுமா?

திருமூர்த்தி, திண்டுக்கல்.

இளங்குமரன், ஆடிட்டர்.

''குறிப்பிட்ட சில மருத்துவச் செலவினங்கள் தவிர பிற மருத்துவச் செலவுகளுக்கு வரிச் சலுகை அனுமதிக்கப் படுவதில்லை. வருமான வரிச் சட்டம் 80டிடி-யின்படி ஊனமுற்ற குழந்தைகளுக்குச் செய்கிற செலவுகளையும், 80டிடிபி-யின்படி குறிப்பிட்ட சில மரபு சார்ந்த நோய்களுக்குச் செய்யப்படுகிற மருத்துவச் செலவுகளுக்கு நாற்பதாயிரம் ரூபாய் வரையிலும், மூத்த குடிமக்கள் எனில் அறுபதாயிரம் ரூபாய் வரையிலும் வரிச் சலுகை பெற முடியும். இதய அறுவை சிகிச்சைக்கு செய்த செலவுகளை வருமான வரிக் கணக்கில் காட்டி சலுகை பெற வாய்ப்பு இல்லை.''  

எனக்கு வயது 39. மாத வருமானம் பதினைந்தாயிரம் ரூபாய். நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு ஏற்கெனவே ஒரு டேர்ம் பாலிசி எடுத்துள்ளேன். பாலிசிக் காலம் 10 ஆண்டுகள்தான். தொடர்ந்து 60 வயது வரை எனக்கு கவரேஜ் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் வயதுக்கு ஏற்ற டேர்ம் பிளான் என்ன?

இரா.பிரபு, புதுவை.

ஜெய்சங்கர், வெல்த் அட்வைஸர், இந்தியா நிவேஸ்.

''உங்களது வருமானம் மற்றும் வயதுக்கு ஏற்ப கவரேஜ் தொகை போதாது. குறைந்தபட்சம் நீங்கள் இருபது லட்சத்திற்கு கவரேஜ் உடைய பாலிசிக்கு மாறுவது நல்லது. உங்களது வயதின் அடிப்படையில் வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் பிரீமியத்தில் கூட இருபது லட்சத்துக்கான டேர்ம் பிளான்கள் இருக்கின்றன.

நீங்கள் தற்போது கட்டிவரும் பாலிசியின் பிரீமியத் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், வேறு டேர்ம் பிளான்களுக்கு நீங்கள் மாறலாம். ஆன்லைன் மூலமாக டேர்ம் பிளான் எடுக்கும்போது பிரீமியத் தொகை குறைவாக இருக்கும்.''  

அப்பாவின் ஹார்ட் சர்ஜரி செலவு: வரிச் சலுகை உண்டா?

எனது மகளுக்கு ஒன்பது வயது. அவளின் திருமணத்திற்கு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருபது லட்சம் தேவைப்படும். இதற்கு எந்த முதலீட்டுத் திட்டம் சிறப்பாக இருக்கும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

சந்தோஷ் குமார், சிதம்பரம்.

எம்.சேகர், இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''மகள் திருமணம் என்ற திட்ட மிட்ட இலக்கு வைத்திருப்பதால், அதிக ரிஸ்க் எடுக்கிற முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் போன்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும். இவைகளில் தலா மூவாயிரம் வீதம் பத்து வருடங்களுக்கு முதலீடு செய்து வரவும். பத்து வருடங் களுக்குப் பிறகு இந்த முதலீட்டை வைப்பு நிதிகளுக்குக் கொண்டு வந்துவிடவும். ஓரளவு சிறந்த வட்டி விகிதத்துடன் முதலீட்டுக் கும் பாதுகாப்பு கிடைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism