
சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தபோது கையில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன். அதே சாலைகளில் இன்று நான் காரில் கடந்து போகிறேன். ஒன்றுமில்லை என்பதில் ஆரம்பித்து எல்லாமுண்டு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனால், பணம் சார்ந்த விஷயங்களில் அன்றிருந்த மனநிலை எனக்கு இன்றும் மாறவில்லை; நான் மாற்றிக் கொள்ளவும் இல்லை.
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒருமுறை நானும், எனது நண்பர்களும் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்திலிருந்த மளிகை கடையில் எண்ணூறு ரூபாய்க்கு கடன் வைத்து விட்டோம். வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் வீட்டையே காலி செய்து கொண்டு போனோம். நண்பர்களிடத்தில் தில்லாக கடன் கேட்டு, சொன்ன நேரத்துக்கு அந்த பணத்தைத் தரவில்லை என்றால், உன் பணமே வேண்டாம் என்று பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பவும் செய்திருக்கிறேன். இப்படி என்னோடு விட்டும் தொட்டும் உறவாடிக் கொண்டுதான் இருக்கிறது பணம்.
நாம் வளர வளர பணம் நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். அதை கையாளத் தெரிய வேண்டும். முதல் படம் முடித்தபோது என் சம்பளம் சில லட்சம்தான். இன்று அது பல மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனந்தம் படம் எடுத்தபோது இருந்த மனநிலைதான் வேட்டை வரையிலும் இருக்கிறது. பணத்திற்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், கொண்டாடுவதில்லை.
-நீரை.மகேந்திரன்.