Published:Updated:

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

Published:Updated:
வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?
வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

பணவீக்க விகிதம் கணிசமாக குறைந்துள்ள நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி எப்போது வேண்டுமானாலும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு. ஆனால், ஆர்.பி.ஐ. அறிவிப்பு வருவதற்கு முன்பே சில வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்க தொடங்கி இருப்பது இன்னும் சந்தோஷமான விஷயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

தற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடன் வளர்ச்சி மிகவும் குறைந்ததே! வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் பலரும் வீடு வாங்குவதைத் தள்ளிப் போடத் தொடங்கினார்கள். இதனோடு ரியல் எஸ்டேட் விலை அதிகரிப்பும் சேர்ந்து கொள்ள, வீட்டுக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2.5% குறைந்துள்ளது.

வட்டி குறைப்பு..!

இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ஆகிய இரு பொதுத் துறை வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25% வரை குறைத்துள்ளன. தவிர, பரிசீலனைக் கட்டணத்தையும் ரத்து செய்திருக்கின்றன. இதை பின்பற்றி மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

##~##
சென்னையின் முன்னணி சொத்து ஆலோசகர் ஒருவருடன் பேசினோம். ''சென்னை மற்றும் தமிழகம் முழுக்க இருக்கும் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள் எந்த விஷயத்தையும் அவசரப்பட்டு செய்வதில்லை. கடனுக்கான வட்டி குறைந்தவுடன், வீட்டின் விலையை உடனே அவர்கள் உயர்த்திவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், ஆர்.பி.ஐ. வட்டிக் குறைப்பு, அதன்பிறகு வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் வட்டியைக் கணிசமாக குறைக்கும் வரையில் காத்திருக்கலாம்'' என்றார்.  

இதற்கு மாறாக விஸ்வநாத் கிருஷ்ணனின் கருத்து இருந்தது. இவர் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் போன்ற முன்னணி வங்கிகளுக்கு வீட்டுக் கடன் நடைமுறைகளை செய்து கொடுக்கும் கன்சார்டியம் அட்வைஸரி சர்வீஸஸ் நிறுவனத்தின் இயக்குநர். அவர் சொன்னார்.

''வருகிற மே மாதத்துக்குள் வீட்டுக் கடனுக்கான வட்டி 0.5% குறைய வாய்ப்பு இருக்கிறது. வட்டி குறைந்துவிட்டால், ரியல் எஸ்டேட் துறை சுறுசுறுப்பாகிவிடும். அப்போது வீடு மற்றும் அடுக்குமாடிகளின் விலை தானாகவே கூடிவிடும். அந்த வகையில் வட்டி குறையும் வரை காத்திருக்காமல் இப்போதே கடனில் வீடு வாங்குவதுதான் புத்திசாலித்தனம். தவிர, தற்போதைய விலையில் பேரம் பேசி கணிசமாகக் குறைக்க முடியும்.

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்திருக்கும் பட்சத்தில் வட்டி குறையும்போது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் வட்டியைக் குறைக்கும். அப்படி குறைக்காதப் பட்சத்தில் நீங்கள் கடிதம் எழுதி கொடுத்தால் வட்டியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள். தவிர, இனிவரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதால், ஃபிக்ஸட் வட்டி விகிதத்துக்குப் பதில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்வது லாபகரமாக அமையும்'' என்றார்.

தற்போது சென்னை, அதன் புறநகர்கள், மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் பல புதிய புராஜெக்ட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வீட்டுக் கடன் மூலம் வாங்குபவர்கள், ப்ரீ இ.எம்.ஐ என்கிற கட்டுமானக் காலத்தில் வட்டி மட்டும் செலுத்தும் முறையை தேர்வு செய்வது நல்லது. காரணம், இந்த முறையில் வட்டிக்கான செலவு குறைவதோடு, கடனும் சீக்கிரம் முடிந்து, வீடும் உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

இது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் புரியும். ஒருவர் 40 லட்ச ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். வங்கி இந்தக் கடனை கட்டுமானப் பணிக்கு ஏற்ப, ஆறு மாதத்துக்கு ஒரு முறை நான்கு தவணைகளில் தலா 10 லட்ச ரூபாய் மூலம் இரண்டு ஆண்டுகளில் கொடுக்கிறது. இந்நிலையில், கட்டுமானக் காலத்தில் அதாவது, இரண்டு ஆண்டுகள் வட்டி மட்டும் கட்டுவதற்குப் பதில் முழுத் தவணையும் கட்டி வரும்போது, அசல் தொகை வேகமாக குறையும்.

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

கடனுக்கான வட்டி 10%, கடனை திரும்பக் கட்டும் காலம் 20 ஆண்டுகள் என்கிற பட்சத்தில் கட்டுமானக் காலத்தில் வட்டியை மட்டும் கட்டி வந்தால் இந்த 40 லட்ச ரூபாய் கடன் முடிய 20 ஆண்டுகளுக்கு பதில் 22 ஆண்டுகள் ஆகும். இதுவே முழு இ.எம்.ஐ. தொகையையும் ஆரம்பம் முதல் கட்டி வந்தால் கடன், 20 ஆண்டுகளுக்கு பதில் சுமார் 16 ஆண்டுகளில் முடிந்துவிடும். கூடவே, முழு மாதத் தவணையையும் கட்டுமானக் காலத்தில் கட்டி வருவதால் கடனுக்கான மொத்த வட்டியில் கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாய் மிச்சமாகும்.

வீட்டுக் கடன் வாங்க... சரியான நேரமா இது?

கட்டுமானக் காலத்தில் முழு இ.எம்.ஐ. கட்டும் வசதியை பல வங்கிகள் வெளிப்படையாக சொல்வதில்லை. அதை நீங்கள்தான் கேட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல், குடியிருக்க வீடு வாங்கும்போது இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் பட்சத்தில் இருவர் பெயரிலும் கூட்டாக வீட்டுக் கடன் வாங்குவது நல்லது.

அப்படி வாங்கும் பட்சத்தில் மொத்தத் தவணையில் தம்பதிகள் இருவருக்கும் தனித்தனியாக அசலில் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் (80 சி பிரிவு) வரிச் சலுகை இருக்கிறது. மேலும், வட்டியில் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரை தனியே வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையையும் இருவரும் தனித் தனியாக தங்களுடைய சொத்து உரிமை விகிதாசாரப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.  

ஆக, வீட்டுக் கடன் வாங்குவதற்கும், வீடு வாங்குவதற்கும் இது சரியான நேரம் என்பதில் சந்தேகமே இல்லை. என்ன, வீட்டுக் கடன் வாங்குறதுக்கு கிளம்பியாச்சா?

- சி.சரவணன்

வட்டி குறைப்பு எவ்வளவு?

பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, ஐந்தாண்டுகளில் திரும்பக் கட்டும் ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியை அதன் அடிப்படை வட்டி விகிதமான 10.60 சதவிகிதத்துக்கு குறைத்துள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 25 ஆண்டுகளில் திரும்பக் கட்டும் கடனுக்கு ரூ.30 லட்சம் வரையான வீட்டுக் கடனுக்கான வட்டியை 11% லிருந்து 10.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறது.

இரு வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தை ரத்து செய்துள்ளன.

வரும் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வகையான வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தையும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்துள்ள நிலையில், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ரூ.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் பரிசீலனைக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism