Published:Updated:

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!

கனவு இல்லம்

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!

கனவு இல்லம்

Published:Updated:
படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!


பவர்கட், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வாக மாறி இருக்கின்றன பசுமை வீடுகள். பசுமை வீடுகளா.. அப்படி என்றால்? அதனால் என்ன பயன்? சாதாரண வீடுகளுக்கும் பசுமை வீடுகளுக்கும் என்ன வித்தியாசம்? என்பது பற்றி இ.என்.த்ரீ கன்சல்டன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தீபா சத்யாராமிடம் கேட்டோம்.

இயற்கை வீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சம், மழை நீர் மற்றும் காற்று போன்ற விஷயங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளே பசுமை வீடுகள். சாதாரண வீடுகளைக் காட்டிலும், பசுமை வீடு கட்ட கொஞ்சம் அதிகம் செலவாகும்.  ஆனால், ஓரிரு வருடங்களில் வீடு கட்ட ஆன அதிக செலவை நம்மால் திரும்ப எடுத்துவிட முடியும்''  என்ற தீபா, பசுமை வீடுகள் மூலம் மின்சாரச் செலவும், தண்ணீர் செலவும் எப்படி குறையும் என விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நோ பவர் கட்!

''சூரிய வெளிச்சம், காற்று என இயற்கை நமக்கு அள்ளித் தருவதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஃபேன், ஏ.சி. லைட்னு தேவையில்லாமல் மின்சக்தியை வீணடிக்கிறோம். இப்படி இல்லாமல் சூரிய வெளிச்சம் வீடு முழுக்க கிடைக்கிற மாதிரி வீடுகளைக் கட்ட வேண்டும். வீடு கட்டும்போது எல்லா பக்கமும் சுவர்களால் அடைக்காமல் அதிகமான ஜன்னல்களுடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செங்கல்லுக்கும் நடுவில் இடைவெளி விட்டு கட்டுவதன் மூலம் வீடு குளுகுளுவென்று இருக்கும்.  வெளிச்சமும் வீடு முழுக்க பரவும். இதனால் பகல் நேரங்களில் விளக்கோ, ஃபேனோ மற்றும் ஏ.சி.யோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!


தண்ணீர் பஞ்சமிருக்காது!

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!

இன்றைக்கு தண்ணீருக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கிறோம். பசுமை வீடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மழைநீரை மாடியில் ஒரு தொட்டி கட்டி சேமித்து வைத்து, அதை சுத்தப்படுத்தி குடிக்கவும்,  நம் வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்'' என்றார் தீபா சத்யாராம்.

பசுமை வீடுகளை அமைத்து வரும் கே.எஸ்.எம். கன்சல்டன்ட் ஸ்ரீராமிடம் பேசினோம்.

''நம் முன்னோர்கள் வீட்டுக்குள்ள சூரிய வெளிச்சமும், காத்தும் அதிகம் வர்ற மாதிரி கட்டினாங்க. அந்த காலத்துல மின்சார வசதி இல்லைங்கறதால முற்றம் (வானம் பார்த்தபடி திறந்திருக்கும் வீட்டின் நடுப் பகுதி) வைத்து வீடு கட்டுனாங்க. காற்று பந்தல்  அமைச்சு வானவெளியில இருக்கற காத்த வீட்டுக்குள்ள கொண்டு வந்தாங்க. இப்பவும், அதே முறைகளைப் பயன்படுத்தித்தான் பசுமை வீடுகளை கட்டிட்டு  வர்றோம்'' என்று சொல்லும் ஸ்ரீராம், இதுவரை சென்னையில் மட்டும் ஆறு பசுமை வீடுகள், குடியிருப்புகள், ஓட்டல்களைக் கட்டியிருக்கிறார்.

கரன்ட் பில் ரூ.70

இந்தியா முழுக்க பல பசுமைக் கட்டடங்கள் இருந்தாலும், இரண்டே இரண்டு வீடுகளை மட்டும் பசுமை வீடுகளாக அறிவித்து, சான்றிதழ் அளித்திருக்கிறது ஹைதராபாத்தில் உள்ள 'இந்தியன் கிரீன் கவுன்சில்’. அந்த வீடுகளில் ஒன்று சென்னை, மடிப்பாக்கத்தில் இருக்கிறது. இந்த வீட்டின் சொந்தக்காரரான யூ.வி.கிருஷ்ண மோகன் ராவை சந்தித்தோம்.

''நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த பசுமை வீட்டை கட்டினேன். இரண்டு தளங்களுடன் 3,790 சதுர அடியில இந்த வீட்டை கட்ட 40 லட்சம் ரூபாய் ஆச்சு. வீட்டு மொட்டை மாடியில மழை நீர் சேகரிக்குற 45,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத் தொட்டி, கழிவு நீர் மறு சுழற்சிக்கான தொட்டி, விசால மான காற்றோட்டம் கொண்ட அறைகளுடன் கட்டினேன்.

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!

பகல் நேரங்களில் சூரிய வெளிச்சம் வீடு முழுக்க வரும்ங்கிறதால நாங்க லைட் போட மாட்டோம். அதே மாதிரி வீடு முழுக்க நல்ல காற்றோட்டம் வரும்ங்கிறதால ஃபேனும், ஏ.சி.-யும் போடவே மாட்டோம். இதனால மாசத்துக்கு வெறும் 70 ரூபாய்தான் கரன்ட் பில் வருது.

இந்த வீட்டுக்கு வந்தபிறகு குடிநீரை நான் காசு கொடுத்து வாங்கியதே கிடையாது. மழை காலங்களில் நாங்கள் 45,000 லிட்டர் மழைநீரை சேகரிக்கிறோம். இது எங்களுக்கு 100 நாள் வரை வருகிறது. இது மாதிரி எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்போது தண்ணீர் சேகரித்து வைத்திருப் போம். காற்றோட்டமான, வெளிச்சமான சூழலில் உடம்பும் மனசும் செயல்படுவதால் சோர்வில்லாமல் சுறுசுறுப்பா எங்களால இயங்க முடியுது'' என்றார் பெருமையாக.

இனி வீடு கட்டப் போகிறவர்கள் தங்கள் வீட்டை பசுமை வீடுகளாக அமைக்க யோசிக்கலாமே!

- செ.கார்த்திகேயன்.
படங்கள்: கே.கார்த்திகேயன்.

படுத்தியெடுக்கும் பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism