வெள்ளிக்கிழமை மாலை அந்திசாயும் நேரத்தில் நம்மைத் தேடி வந்தார் ஷேர்லக். ''வழக்கமாக இரவில்தானே வருவீர்கள்? இன்று என்ன சீக்கிரமாகவே வந்துவிட்டீர்கள்'' என்கிற கேள்வியோடு வரவேற்றோம். ''வீட்டில் கரன்ட் இல்லை. அதுதான் உம்மை தேடி வந்துவிட்டேன்'' என்றார்.

. ''மி.ன் தட்டுப்பாட்டால், அரசாங்கம் தொழிற் சாலைகளுக்கு கட்டாய விடுமுறை அளித்திருப்பது பற்றி இண்டஸ்ட்ரியில் என்ன டாக்?'' என்று விசாரித்தோம்..
''இது தொடர்பாக, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்கள் நண்பர்களுடன் பேசிப் பார்த்தேன். ஏறக்குறைய அழுதேவிட்டார்கள். மின்சாரப் பிரச்னை எந்த ஆட்சி வந்தாலும் மோசமாக இருக்கிறதே!'' என்று புலம்பினார்கள்.

இதற்கிடையே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எதிரான வழக்கு ஒன்றில் ஜி.எம்.ஆர். இன்ஃப்ரா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துக்கு 540 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்குமாம்.

ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலிருக்கும் மின்வாரியம் இதையும் எப்படி சமாளிக்குமோ!'' என்றார் கவலையோடு.

''டி.எல்.எஃப். நிறுவனத்தின் கணக்கு மற்றும் பிஸினஸ் மாடலில் சந்தேகம் இருப்பதாக வெரிடாஸ் நிறுவனம் கருத்து சொல்ல, கடந்த வெள்ளியன்று மட்டும் 5 சதவிகிதத்திற்கு மேல் இறக்கம் கண்டது. இந் நிறுவனத்திற்கு இருக்கும் கடன்களை எல்லாம் சீரமைத்தால் பங்கின் விலை 100 ரூபாய்தான் பெறும் என்று வெரிடாஸ் நிறுவனம் புளியைக் கரைத்திருக்கிறது.

வெரிடாஸ் நிறுவனம் இதற்குமுன் ஆர்.ஐ.எல்., ஆர்.காம்., கிங்ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள் மீது பிரச்னையை கிளப்பியது. இதில் இரண்டு நிறுவனங்கள் உறுதியாகிவிட்டது. டி.எல்.எஃப்.-ம் இன்னொரு கிங்ஃபிஷராகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றவர், அடுத்து சொன்ன செய்தி அதிர்ச்சி தருவதாக இருந்தது.

''ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் தேவேஷ்வர் தன்னிடம் இருக்கும் 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 லட்சம் பங்குகளை விற்றுத் தள்ளியிருக்கிறார். தலைவரே தடி எடுத்தால் தளபதிகள் சும்மா இருப்பார்களா? இந்நிறுவனத்தில் உள்ள மற்ற சில இயக்குநர்களும் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்றுத் தீர்த்தார்கள்.

இதற்கு இரண்டு காரணம் சொல்கிறார்கள். ஒன்று, கூடிய சீக்கிரத்தில் நிர்வாகத்தில் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதாம். இரண்டாவது, நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என அவர்கள் நினைக்கிறார்களாம். இதில் எது உண்மையோ, ஐ.டி.சி. பங்குதாரர்கள் உஷாராக இருப்பது நல்லது'' என்றவர், அடுத்து இரண்டு கிசுகிசுகளைச் சொன்னார்.

''முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்துக்கும் செபிக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து, வெல்ஸ்பன் நிறுவனத்திற்குச் சாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறதாம்.

டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் உலகின் முக்கியமான டெலிகாம் கம்பெனியான கேபிள் அண்ட் வயர்லெஸ் நிறுவனத்தை வாங்கப் போகிறதாம். இந்த டீல் சுமூகமாக முடிந்தால் டாடா கம்யூனிகேஷன் பங்கு விலை எங்கோ போய்விடும். ஆனால், இந்த ஒற்றை வரித் தகவல்களை வைத்து இந்த பங்குகளை வாங்குவது கொஞ்சம் ரிஸ்க்தான்!'' என்றார்.

''பட்ஜெட் வரப் போகிறதே, என்ன மாற்றங்கள் வருமாம்?'' என்று அடி போட்டோம்.

''டி.டி.சி. மற்றும் ஜி.எஸ்.டி. வரி பற்றிய அறிக்கை ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அந்த அறிக்கை முடிவை பொறுத்து, அது எப்போது வரும் என்பது முடிவாகலாம்.

கார்களுக்கான தேய்மான வரிச் சலுகை தனிநபர் களுக்கு அளிக்கப்படலாம். அப்படி நடந்தால், சிறிய கார்களை தயாரிக்கும் கார் கம்பெனிகளின் லாபம் கணிசமாக அதிகரிக்கும். கூடவே, அந்த பங்குகளின் விலையும் உயரும்'' என்றார் சூசகமாக.

''ஓ.என்.ஜி.சி. பங்கு ஏல விற்பனை இப்படி ஆகிவிட்டதே!'' என்றோம்.

''இந்த பங்கு விலை எவ்வளவு இருக்க வேண்டும் என டிபார்ட்மென்ட் ஆஃப் டிஸ் இன்வெஸ்ட்மென்ட் நிர்ணயம் செய்த விலைக்கு அதிகமாகவே குரூப் ஆஃப் மினிஸ்ட்டர்கள் வைத்ததன் விளைவுதான், ஏலம் களை கட்டாமல் போனது. முதலீட்டாளர்களை இளிச்சவாயர்களாக நினைத்துவிட்டது அரசாங்கம். நாங்கள் புத்திசாலிகள்தான் என்று நிரூபித்துவிட்டார்கள் இன்வெஸ்டர்கள்'' என்று உணர்ச்சிவசப்பட்டபடி அடுத்த மேட்டருக்கு போனார்.

''ஆர்.பி.ஐ.-ன் அடுத்த நிதி ஆய்வுக் கூட்டம் மார்ச் 15-ல் நடக்கப் போகிறதே..!'' என்றோம்.

''இந்த கூட்டத்தில் சி.ஆர்.ஆர். 0.25 - 0.50% வரை குறைக்கப்படலாம் என்கிறார்கள். ஆர்.பி.ஐ.-யிடமிருந்து வங்கிகள் வாங்கும் ஒருநாள் கடன் புதிய உச்சமாக 1.92 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். அதாவது, ஃபைனான்ஸ் சிஸ்டத்தில் லிக்விடிட்டி சிக்கல் ஏற்பட்டிருப்பதால் சி.ஆர்.ஆரை உடனடியாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஆர்.பி.ஐ.க்கு!''.

''விலையேற வாய்ப்புள்ள சில பங்குகளை சொல்லுங்களேன்''என்றோம். ''மாருதி சுசூகியின் பிப்ரவரி மாத விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்ததும் இந்த நிறுவனத்திற்கு லாபம். 1,190 ரூபாயை ஸ்டாப் லாஸாகக் கொண்டு நடுத்தர காலத்தில் வாங்கலாம்.

முருகப்பா குழுமத்தின் ட்யூப் இன்வெஸ்ட்மென்ட் வணிக சீரமைப்பில் இறங்கி இருப்பதோடு, பிராண்ட் மேம்படுத்துவதிலும் களமிறங்கி இருக்கிறது. இந்த பங்கின் விலை குறுகிய காலத்தில் 5 - 10% உயரலாம். நடுத்தர கால அளவில் முதலீடு செய்பவர்கள் 128 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளலாம்.

கேப்பிட்டல் குட்ஸ் கம்பெனியான பி.ஜி.ஆர். பங்கை 335 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொண்டு வாங்கலாம். நடுத்தர கால அளவில் 450 ரூபாய் வரை செல்ல வாய்ப்புண்டு.

மேட்டர்களைச் சொல்லி முடித்ததும் ஷேர் டிப்ஸ் எழுதிய துண்டுக் காகிதத்தை தந்த ஷேர்லக், ''இன்று மார்க்கெட் இப்படித்தான் நிகழ்ச்சியை பலரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறதே! என் நண்பரின் புரோக்கிங் அலுவலகத்தில் கார்த்திகேயனின் கணிப்பு கச்சிதமாக இருக்கு என்று புகழ்ந்து தள்ளுகிறார்களாம்'' என்று சொல்ல, ''பல ஆயிரம் வாசகர்களின் ஏகோபித்த கோரிக்கை காரணமாக, திங்கள்கிழமை முதல் 9 மணிக்கு பதிலாக 9.15 வரை நிகழ்ச்சியை நீட்டிக்கப் போகிறோம். இதனால் இன்னும் பல ஆயிரம் வாசகர்கள் 044-66808019 என்கிற எண்ணுக்கு போன் செய்து, பயன் பெறலாம்'' என்று சொல்ல, வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் ஷேர்லக்.