பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி!

இந்த வாரம் நிக்கல் மற்றும் வெள்ளி கமாடிட்டி பற்றி விளக்கமாக கூறுகிறார் வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயகுநர் ரமணன்.

கமாடிட்டி!

''அடிப்படை உலோகங்கள் விலை உயர்ந்தபோதும், நிக்கல் மட்டும் இன்னும் விலை உயராமலே இருக்கிறது. கடந்த வாரம் வரை நிக்கல் இன்வென்டரி புள்ளிவிவரத்தின்படி, அதிகமான ஸ்டாக் இருந்ததாக தகவல்கள் வெளியானது. வார இறுதியில் இந்த ஸ்டாக் அளவு குறைந்துள்ளது.

தற்போது 950 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் நிக்கலை,         994 ரூபாய்க்கு வரும் போது வாங்கலாம். 945-960 ரூபாய் ஸ்டாப்லாஸாக கொண்டும், 1,014-1,045 ரூபாய் இலக்கு விலையாக கொண்டும் வர்த்தகர்கள் வாங்கலாம்.

இதேபோல் தற்போது 102.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் ஜிங்க் 105-106 ரூபாய் வரை விலை வரும் என எதிர்பார்க்கலாம். இந்த விலையை அடைய பத்து, பதினைந்து நாட்கள் ஆகலாம். சற்று மெதுவாக விலை ஏறும் ஜிங்க்.''

வெள்ளி!

##~##
''டெக்னிக்கல்படி நல்ல மூவ்மென்ட் தெரிவதால் வெள்ளியை வாங்கும் நேரமிது.

தங்கம் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிக்கும்போது வெள்ளியின் விலையும் அதிகரிக்கும். தொழிற் சாலைகளில் அதிக பயன்பாடு கொண்ட உலோகம் இது. மார்ச் 9-ம் தேதி மாலை எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் ஒரு கிலோ வெள்ளி 58,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் இது 60,000-61,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது''.

கமாடிட்டி!


இயற்கை ரப்பர்!

கடந்த வாரத்தில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஆசியாவில் அதிகரித்து வரும் கார் விற்பனை காரணமாகவும், உலகளவிலான டிமாண்ட் அதிகரித்துள்ளதாலும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 5.3 சதவிகிதம் உற்பத்தி அதிகரிக்கும் என உலகின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் கார்ப்பரேஷன் தெரிவித் துள்ளது. இந்நிறுவனம் டயர்கள் உற்பத்தி செய்ய                  50 பில்லியன் யென் செலவிடப் போவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பிப்ரவரி மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. உலகளவிலான ரப்பர் உற்பத்தி கடந்த வருடத்தில் 10,450 மில்லியன் டன்னாக இருந்தது. இதுவே, இந்தாண்டு 10,529 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை புள்ளிவிவரங்கள் பாசிட்டிவ்-ஆக இருப்பதால், வரும் வாரத்திலும் ரப்பரின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி!
கமாடிட்டி!


ஜீரா!

தினவரத்து அதிகரித் துள்ளதால் ஜீராவின் விலை கடந்த வாரம் இறங்கியது. சாதகமான சீதோஷ்ண நிலை இருப்பதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 18,000 முதல் 20,000 பைகளாக இருந்த ஜீரா வரத்து, அடுத்த வாரத்தில் 20,000-25,000 பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில்               13 லட்சம் பைகளும், ராஜஸ்தானில் 10 லட்சம் பைகளுமாக, இந்திய அளவில்  இந்தாண்டுக்கான மொத்த ஜீரா உற்பத்தி 35 லட்சம் பைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த வருடத்தைவிட குறைவு என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்தால் மட்டுமே இந்த வாரத்தில் விலை வீழ்ச்சி யில்லாமல் வர்த்தகமாகும்.

கமாடிட்டி!


மிளகு!

கடந்த வாரத்தில் மிளகு விலை 4 சதவிகிதம் அதிகரித்தது. நூறு கிலோ மிளகு 41,600 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் 12 டன் அளவுக்கு வந்த வரத்து, வார இறுதியில் சுமார் 30 டன்னாக உயர்ந்தது என இந்தியன் பெப்பர் மற்றும் ஸ்பைஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இன்னும் விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் மிளகை விற்காமலே வைத்திருக் கிறார்கள். மிளகை நீண்ட காலம் மற்றும் குறுகிய காலத்தில் கான்ட்ராக்ட் வைத்திருக்க 10 சதவிகித மார்ஜின் தொகையை அதிகரித்திருக்கிறது என்.சி.டி.இ.எக்ஸ். இந்த மார்ஜின் தொகை அதிகரிப்பு மார்ச் மாதம் 9-ம் தேதியி லிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதனாலும் கடந்த வார இறுதி யில் விலை சற்று அதிகரித்தது. வரும் வாரத்திலும் இதே நிலை தொடரும்.

கமாடிட்டி!

-பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு