பிரீமியம் ஸ்டோரி
மை டியர் மணி!

''பணத்தைக் கையாளுகிற விஷயத்தில் என் அம்மாதான் எனக்கு குரு. பைசா தவறாமல் அட்சர சுத்தமாக கணக்கு எழுதி வைத்துவிடுவார் அம்மா. அநாவசிய செலவுகளை தவிர்த்துவிடுவார். ஒவ்வொரு நாள் இரவிலும் எல்லா செலவுகளையும் ஒரு டைரியில் எழுதி வைப்பதைப் பார்த்து, 'அம்மா ஹோம்வொர்க் பண்றாங்க’ என்று நாங்கள் கிண்டல் செய்வோம்.

##~##
ரு சாதாரண கிளார்க்கின் மனைவியான என் அம்மா அன்று செய்த ஹோம்வொர்க்தான் என்னையும், அண்ணனையும் நன்றாகப் படிக்க வைத்தது. என் அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தந்ததற்கும் முக்கிய காரணம் அன்று என் அம்மா செய்த ஹோம்வொர்க்தான். இப்போது அந்த ஹோம்வொர்க்கை நான் செய்கிறேன். என்னை பார்த்துவிட்டு என் குழந்தைகளும் அந்த ஹோம்வொர்க்கை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.  

திட்டமிட்டு செலவு செய்வதோடு, இந்த செலவுக்கு இதற்கு மேல் செலவழிக்கக் கூடாது என்று வரம்புகளும் வைத்துக் கொள்வேன். அதற்கேற்பவே என் குடும்பச் செலவுகளையும் அமைத்துக் கொள்வேன். ஒரு நபர் சம்பாதித்து வருவதை வைத்து திருப்தியாக குடும்பம் நடத்தியது எல்லாம் அந்த காலம். இப்போதும் அது சாத்தியம்தான் என்றாலும், அது வாய்க்கும் வயிற்றுக்குமாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் இருவருமே சம்பாதித்தால்தான் ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்பதற்காக என் கணவர் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சொந்தமாக ஒரு கார் வாங்க முடிந்தது. இப்படி பார்த்து பார்த்து செலவு செய்த அனுபவங்கள் நிறைய. தேவை இல்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனமாகவும் சேமிக்கவும் கற்றுக் கொண்டால், நம் சம்பாத்தியத்தை வைத்தே நேர்மையாக வாழலாம்.

நீரை.மகேந்திரன்,
படம்: என்.ஜி.மணிகண்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு