Published:Updated:

வரிவிலக்கு: 3 லட்ச ரூபாய்க்கு சாத்தியமா?

டாக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
வரிவிலக்கு: 3 லட்ச ரூபாய்க்கு சாத்தியமா?

மத்திய நிதி அமைச்சகத்தின் நிலைக் குழு, 3 லட்ச ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை அமலானால், தனிநபர் ஒருவர் ஓராண்டில் 6.20 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது என்பது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இனிப்பான செய்தி.

வரிவிலக்கு: 3 லட்ச ரூபாய்க்கு சாத்தியமா?

து மட்டுமல்ல, நீண்ட கால முதலீடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், பிள்ளைகள் படிப்புச் செலவு போன்றவற்றுக்கு 3.2 லட்ச ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை தரலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. தவிர, ஆண் - பெண் பேதம் இல்லாமல் அனைவருக்கும் ஒரேவிதமான வரி விலக்கு வரம்பு சொல்லப்பட்டிருக் கிறது.

இந்த பரிந்துரை கள் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் சாத்தியம்தானா? என சென்னை யின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான சத்திய நாராயணனிடம் கேட்டோம்.

''மத்திய அரசு மனது வைத்தால் இது எல்லாம் சாத்தியம்தான். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பு மூலமே நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும். அந்த வகையில் உயர் கல்விக்கு தனியே 50,000 ரூபாய் வரிச்சலுகை கொடுக்க பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத் தக்கதே.

காரணம், கல்விக் கட்டணம் இப்போது லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது. வெளிநாடு சென்று படிக்க வேண்டும் எனில், ஓராண்டுக்கே பல லட்ச ரூபாய் செலவாகிறது. அந்த வகையில், சில லட்ச ரூபாயாவது வரிச் சலுகை கொடுத்தால்தான் நல்லது.

இதேபோல், தாத்தா- பாட்டிக்கு கட்டும் மெடிக்ளைம் பிரீமியத்துக்கு வரிச்சலுகை கொண்டு வர பரிந்துரைப்பதும் வரவேற்கத்தக்கதே'' என்றவர், சில பாதகமான அம்சத்தையும் எடுத்துச் சொன்னார்.

வரிவிலக்கு: 3 லட்ச ரூபாய்க்கு சாத்தியமா?
##~##
''வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 12% ஆக இருக்கிறது. புறநகர்களில் வீடு வாங்க வேண்டும் எனில் குறைந்தது 30 முதல் 50 லட்ச ரூபாய் தேவை. அப்படி இருக்கும்போது ஓராண்டில் வட்டிக்கு மட்டுமே 3 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். அந்த வகையில் வட்டிக்கான வரிச் சலுகையை இப்போதுள்ள நிலையிலிருந்து இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

தவிர, புதிய நேரடி வரி விதிப்பில் வீட்டுக் கடனுக்கான அசலை திரும்பக் கட்டும்போது வரிச்சலுகை உண்டா, இல்லையா? என்பது தெளிவுபடுத்தப்படாமலே இருக்கிறது.  அத்தியாவசிய தேவையான வீட்டுக் கடனை வாங்கும்போது, முழு இ.எம்.ஐ-க்கும் வரிச்சலுகை கிடைத்தால்தான் பலரும் பலன் அடைவார்கள்'' என்றார்.

கூடுதல் வரிவிலக்கும், கூடவே கூடுதல் வரிச்சலுகையும் வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது. இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தால்தான் உறுதி..!

- சேனா சரவணன்

இது புதுசு!

எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் அன்யூட்டி ப்ளஸ்!

ய்வுகாலத்தில் பென்ஷன் கிடைத்தால் டென்ஷனே இல்லை. ஆனால், பென்ஷன் புண்ணியம் வாய்க்கப் பெறாத தனியார் நிறுவன ஊழியர்கள், பென்ஷனுக்காக புதிதாக ஏதாவது ஒரு பாலிசியை எடுக்கத் தயார் எனில், எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் அன்யூட்டி ப்ளஸ் பாலிசியை தாராளமாகப் பரிசீலிக்கலாம்.

பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பாலிசியில், பணம் செலுத்திய 30 நாட்களுக்குள் பென்ஷன் கிடைக்கத் தொடங்கும்.  

பாலிசி எடுக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரரில் யாராவது ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கும். இப்படி பென்ஷன் பெறுகிறவர் கணவன், மனைவி மட்டுமல்லாமல் தனது அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதரி, மாமனார், மாமியார், மருமகன், மருமகள் என இவர்களில் யாரை வேண்டுமானாலும் இரண்டாவது பென்ஷன்தாரராக சேர்த்துக் கொள்ளலாம். அவரது காலத்திற்குப் பிறகு, மொத்த பணமும் நாமினிக்குச் செல்லும்.

முதலீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ளும்போது பென்ஷன் தொகையும் அதிகரிக்கும்.

பாலிசியில் போட்ட பணத்திலிருந்து 30 சதவிகிதத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப எடுக்கலாம்.

40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் எடுக்கக்கூடிய இந்த பாலிசி மூலம் 7.51% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதம் 31.3.2012 வரை மட்டுமே பொருந்தும் என்பது முக்கியமான விஷயம்.

குறைந்தபட்சம் மாதம் 200 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த பாலிசி மூலம் பென்ஷன் பெறலாம்.

- பானு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு