பிரீமியம் ஸ்டோரி
மிஸ் பண்ணாதீங்க!

''வாங்கி ஒரு வருஷம்கூட ஆகல, அதுக்குள்ள ஃப்ரிட்ஜ் ரிப்பேர், வண்டி சரியா ஓடல!'' இப்படி பலவிதமான மனக்குறைகள் நமக்கு. பொருட்களை வாங்கும்போது தரப்படும் இலவச சர்வீஸ்களை, அதாவது ஃப்ரீ சர்வீஸ்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டாலே பிற்பாடு ஏற்படும் பெரிய பிரச்னைகளை புத்திசாலித்தனமாக தவிர்த்துவிட முடியும் என்கிறார்கள் விவரம் தெரிந்த சர்வீஸ் இன்ஜினீயர்கள்.

ல வாடிக்கையாளர்கள் இந்த ஃப்ரீ சர்வீஸ்களை சரியாக பயன்படுத்துவதில்லை.  இந்த ஃப்ரீ சர்வீஸ்களை வீணாக்கி விட்டு, பிற்பாடு அநாவசிய செலவு செய்கின்றனர். இதைத் தடுக்க அந்தந்த துறையைச் சேர்ந்த சர்வீஸ் இன்ஜினீயர்கள் அளிக்கும் ஆலோசனைகள் இதோ:  

வீட்டு உபயோகப் பொருட்கள்!

##~##
சங்கர்ராம், சர்வீஸ் மேனேஜர், விஜி சர்வீஸ் சென்டர்.

வீட்டு உபயோகப் பொருட் களான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நிறுவனங்கள் வேறுவேறு விதமான ஃப்ரீ சர்வீஸ்களை வழங்குகின்றன.  

• பொருட்களை வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருடம் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் வரை இலவச சர்வீஸ் தருகின்றன. அல்லது குறிப்பிட்ட மாத இடைவெளியில் மூன்று முதல் நான்குமுறை இலவச சர்வீஸ் தரும்.  

• சர்வீஸ் தேதிகளுக்கேற்ப சர்வீஸ் சென்டர்களுடன் தொடர்பு கொண்டு சர்வீஸ் செய்துதரும்படி ஊழியர்களை நாம்தான் அழைக்க வேண்டும். அவர்களாக நம்மை அழைக்க மாட்டார்கள்.  

மிஸ் பண்ணாதீங்க!

• எந்த முகவரிடமிருந்து பொருட்கள் வாங்கியது, வாங்கிய பில்/ரசீது, சர்வீஸ் அட்டை போன்றவற்றை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அவை இருக்கும் பட்சத்தில்தான் ஃப்ரீ சர்வீஸ் பெறுவதில் சிரமம் இருக்காது.

• ஒரே மாதிரியான ரிப்பேர் அடிக்கடி வரும்பட்சத்தில் பொருளை மாற்றித்தர வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு. எனவே, ஃப்ரீ சர்வீஸ் காலத்தை தவறவிடக்கூடாது.

• ஏ.சி., விலை அதிகமான ஃப்ரிட்ஜ் போன்றவற்றுக்கு வழங்கப்படும் வாரண்டி காலத்தைக் கொஞ்சம் பணம் செலுத்தி நீட்டிக்கப்பட்ட வாரண்டியாக எடுத்துக் கொள்வது நல்லது.

• ஃப்ரீ சர்வீஸ் காலத்தில் பொருட்கள் ரிப்பேரானால், கம்பெனி சர்வீஸ் இன்ஜினீயர்களை மட்டுமே கூப்பிட வேண்டும். நாமே வெளியாட்களை வைத்து சர்வீஸ் செய்தால், அதனால் ஏற்படும் சிக்கல் களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

• அந்த பொருட் களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள/ குறிப்பிடப்பட்டுள்ள பவர் சர்க்யூட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வயர் களை பயன்படுத்தி அதனால் ஏற்படும் ரிப்பேர்களுக்கு ஃப்ரீ சர்வீஸ் கிடைக்காது.

டூ வீலர்!

கிருஷ்ணா, உரிமையாளர், எஸ்.கே.எம்ப்ரைஸர்.

• டூ வீலர் மாடல் மற்றும் சிசி-க்கு ஏற்ப சர்வீஸ் கிடைக்கும். அதாவது, சிசி அதிகமாக இருக்கும் வண்டிக்குத் தரப்படும் சர்வீஸ் அதிகமாகும்.  

• புதிதாக டூ வீலர் வாங்கும்போது மூன்று முதல் ஆறு ஃப்ரீ சர்வீஸ் வரை கொடுக்கப்படுகிறது. இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இந்த ஃப்ரீ சர்வீஸ்களை தவறாமல் பயன் படுத்துவது நல்லது.

• அடிக்கடி தேய்மானம் ஆகும் உதிரிபாகங்களை இலவச சர்வீஸின் போது மாற்றித் தரமாட்டார்கள்.  

மிஸ் பண்ணாதீங்க!


கார்!

ஹாரி, ஏ.ஜி.எம். (சர்வீஸ்),கே.எல்.என் மோட்டார்ஸ்.

• கார்களின் ரகத்திற்கு ஏற்ப ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் கிலோ மீட்டர்களுக்கு என இலவச சர்வீஸ் செய்துகொள்ள வேண்டும்.

• கொடுக்கப்படும் காலம் அல்லது கிலோ மீட்டர் கணக்கை தவறவிட்டால், பிறகு பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

• புது கார் வாங்கி ஆயிரம் கிலோ மீட்டர்களுக்குள் ரன்னிங் செக்கப் செய்ய வேண்டும்.

• எந்தெந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது, உதிரிபாகங்கள் சலுகை, சர்வீஸ் லேபர் கட்டணங்கள் போன்றவற்றைத் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.  

• எத்தனை வருடங்களுக்கு வாரண்டி, கியாரண்டி, அந்தந்த காலத்தில் உதிரிபாகங்களின் விலை போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.

• முதல் சர்வீஸின்போது ரன்னிங் ரிப்பேர் செய்து தருவார்கள். வாகனத்தைப் பயன்படுத்திய வகையில் நீங்கள் குறிப்பிடும் சின்ன பழுதுகளை செய்து தருவார்கள்.  

• இரண்டாவது மற்றும் மூன்றாவது சர்வீஸ்களில் கிளட்ச் ஆயில், பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில் போன்றவற்றை மாற்றித் தருவார்கள்.

-நீரை.மகேந்திரன்.
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ப.சரவணகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு