Published:Updated:

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

பிரீமியம் ஸ்டோரி
பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உகந்த நேரம் எது?, எந்த வகைகளில் முதலீடு செய்யலாம்?

கே.சதீஸ்பாபு, திருப்பத்தூர்.

##~##
ராஜன்
,
இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பொருத்தமான காலச் சூழல் எதுவும் இல்லை. எந்த காலத்திலும் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் எனில், குறைந்தபட்சம் பத்து வருட முதலீடாக இருக்க வேண்டும். குறுகிய கால முதலீடு எனில், எம்.ஐ.பி. அல்லது டெட் ஃபண்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். ஃபண்ட் நிறுவனங்களின் கிளைகள், ஏஜென்டுகள், ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய முடியும். பான் கார்டு இருந்தால் போதும் முதலீட்டை ஆரம்பித்து விட முடியும்.''

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

வங்கியில் இரண்டு வைப்பு நிதித் திட்டங்களில் ஒரு லட்சம் வீதம் முதலீடு செய்துள்ளேன். இதற்கான வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

க.குமரகுரு, தென்காசி.

அ.செந்தில்குமார், ஆடிட்டர், ஏ.ஆர்.கிருஷ்ணா அசோசியேட்ஸ்.

''வங்கி வைப்பு நிதி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. முன்கூட்டியே வங்கியில் படிவம் 15ஜி கொடுத்துவிட்டால் டி.டி.எஸ் பிடித்தமும் இருக்காது. ஆனால், வைப்பு நிதிக்கு வரும் வட்டியோடு சேர்த்து தங்களது இதர வருமானங்களும் வருமான வரி வரம்புக்கு மேற்பட்டு இருந்தால் வரி கட்ட வேண்டும்.''

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

போலியோவால் பாதிக்கப்பட்டு செயற்கைக் கால்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான், ஒரு காப்பீடு நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், பிரீமியத் தொகை வழக்கத்தைவிட 75% அதிகமாக கேட்கிறார்கள். இது சரியா? இதற்கு என்ன அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது?

முத்துலெட்சுமி, காஞ்சிபுரம்.

ஜெய்சங்கர், வெல்த் அட்வைஸர், இந்தியா நிவேஸ்.

''அதிக ரிஸ்க் உடைய பணிகளில் இருப்ப வர்கள், தீவிர நோய் பாதிப்பு மற்றும் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியாத ஊனம் கொண்டவர்கள் என நபர்களுக்கு ஏற்றவாறு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பிரீமியம் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான அளவுகோல் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். பொதுவாக ஆன்லைன் மூலமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் விண்ணப்பிக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும் என்றாலும், ஊனத்தின் தன்மை பொதுவாகவே குறிப்பிடப்படும் என்பதால், அதன் அடிப்படையில் பிரீமியம் அதிகரித்து கேட்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற நிலைமைகளில் பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஊனமுற்றவர்களுக்கு வழங்கும் டேர்ம் பிளான் திட்டங்களையும் பார்க்க வேண்டும். மேலும், நீங்கள் முகவர் மூலம் முயற்சிக்கும்போது ஊனத்தின் தன்மையை குறிப்பிட்டு காட்ட முடியும் என்பதால், ஆன்லைன் மூலமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதைவிட பிரீமியம் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது''.

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். எனக்கு என்.ஆர்.இ. மற்றும் சாதாரண வங்கிக் கணக்கு இருக்கிறது. வெளிநாட்டில் தொடர்ச்சியாக தங்காமல் 28 நாட்கள் வேலை, 28 நாட்கள் விடுமுறை என்றுதான் உள்ளேன். டீமேட் கணக்கை எந்த வங்கிக் கணக்கு மூலம் தொடங்க வேண்டும்?

பாலா, அங்கோலா.

வி.கிரிவாசன். துணைப் பொது மேலாளர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

''என்.ஆர்.இ. கணக்கின் மூலம்கூட டீமேட் கணக்கு தொடங்கலாம் என்றாலும், சாதாரண சேமிப்பு கணக்குகூட இதற்கு போதுமானது.''  

ஒரு தனிநபர் அதிக பட்சமாக எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியும்?

சுந்தரமூர்த்தி, திருச்சி.

ராஜாராமன், காப்பீடு ஆலோசகர்.

''ஆயுள் காப்பீடு பாலிசிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இவ்வளவு தொகைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்கிற வரம்பு இல்லை.  தனிநபரின் வருட வருமானம், சொத்து மற்றும் வயது அடிப்படையில் வழங்கப் படுகிறது. நிறுவனத்திற்கு நிறுவனம் இதில் வேறுபாடுகள் இருக்கும். அதிகபட்ச தொகைக்கு பாலிசி கேட்கும்போது தங்கள் வருமானத்துக்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும்.''

பேங்க் எஃப்.டி-க்கு வரி கட்டணுமா?

எஸ்.ஐ.பி. முறையில் இரண்டு வருடங்களாக டி.எஸ்.பி. பிளாக்ராக் டாக்ஸ் சேவர் மற்றும் டி.எஸ்.பி. பிளாக்ராக் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களில் மாதம் 1,000 ரூபாய் வீதம் முதலீடு செய்து வருகிறேன். இரண்டுமே என்.ஏ.வி. குறைவாக உள்ளது. இதிலிருந்து வெளியேறலாமா அல்லது தொடரலாமா?

எஸ்.அனந்தகுமார், சென்னை.  

முருகன், மண்டல அதிகாரி, புளூசிப் இன்வெஸ்ட்மென்ட் சென்டர்.

''எஸ்.ஐ.பி. முறையில் முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுக்கும்போது, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போதுதான் நல்ல பலன்களைத் தரும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது தொடர்ந்து முதலீடு செய்யவும். சந்தையின் நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி இருக்கும் என்றாலும், டி.எஸ்.பி. பிளாக்ராக் ஃபண்டுகள் நல்ல செயல்பாட்டில் இருப்பதால் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு