Published:Updated:

ஜி.ஏ.ஏ.ஆர்.: அந்நிய முதலீட்டுக்கு ஆபத்து!

இரட்டை வரி

பிரீமியம் ஸ்டோரி
ஜி.ஏ.ஏ.ஆர்.: அந்நிய முதலீட்டுக்கு ஆபத்து!

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பங்குச் சந்தை திடீரென 400 புள்ளிகள் வரை சரிந்தது. சந்தை ஏன் இறங்கியது என்று காரணம் தெரியாமல் பலரும் தவிக்க, மத்திய அரசாங்கம் புதிய வரி விதிப்பு முறையான ஜி.ஏ.ஏ.ஆர். (General Anti-Avoidance Rule) கொண்டு வந்ததே இதற்கு காரணம் என்று சொன்னார்கள்.

ஜி.ஏ.ஏ.ஆர்.: அந்நிய முதலீட்டுக்கு ஆபத்து!

டனே மத்திய நிதி அமைச்சர் புகுந்து வாய்மொழியாக, பாதிப்பு இருக்காது என்று விளக்கம் தரவே, அடுத்த நாள் முதல் மீண்டும் சந்தை முன்னேறத் தொடங்கியது. இந்த ஜி.ஏ.ஏ.ஆர்.

என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் இரட்டை வரி விதிப்பு முறை (Double Taxation Avoidance Treaty) என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லை என்பது இந்த ஒப்பந்தம். ஒரு நிறுவனம் தன்னுடைய நாட்டில் வரிச் செலுத்திவிட்டு, பிறகு இந்தியாவிலும் வரி செலுத்தினால் அது அந்த நிறுவனத்திற்குப் பெரும் சுமையாக இருக்கும் என்கிற காரணத்தினால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இச்சலுகையை இந்தியா கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மொரிஷியஸ் நாடும் இருக்கிறது.

##~##
இப்போது பிரச்னை என்னவென்றால், மொரிஷியஸ் நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் அங்கும் வரி செலுத்தத் தேவை இல்லை என்பதே. இந்தியாவிலும் வரிச் செலுத்தாமல், மொரிஷியஸிலும் வரிச் செலுத்தாமல் கிடைக்கும் லாபம் அத்தனையையும் இதுநாள் வரை இஷ்டம்போல அனுபவித்துக் கொண்டிருந்தன பல நிறுவனங்கள். சில நிறுவனங்கள் இந்த சலுகையை பெறுவதற்காகவே மொரிஷியஸில் ஒப்புக்கு ஒரு அலுவலகத்தைப் பதிவு செய்துவிட்டு, முழுக்க முழுக்க இந்தியாவில் இருந்தபடியே பிஸினஸ் செய்து வரிக் கட்டாமல் கொள்ளை லாபம் சம்பாதித்தன.

இதை தடுக்கவே மத்திய அரசாங்கம் இப்போது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டத்தை மட்டும் கொண்டுவந்தால், 'இரட்டை வரிவிதிப்பு முறையை தவிர்க்கும் ஒப்பந்தம்’ ஏறக் குறைய ரத்தாகிவிடும். இதனால், வெளிநாடுகளிலிருந்து நம் பங்குச் சந்தைக்கு வரும் முதலீடு குறையும். கடந்த ஓராண்டில் மட்டும் 47,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு நம் சந்தைக்கு வந்தது. ஆனால், இனிமேல் அப்படி வருமா என்று பயந்தது சந்தை.  

இந்த புதிய சட்டத்தோடு, பங்குச் சந்தைக்குப் பணம் வரும் இன்னொரு வழியையும் மத்திய அரசாங்கம் முடக்க நினைத்தது. இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என பலரும் முதலீடு செய்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடம் (எஃப்.ஐ.ஐ.) அங்கிருக்கும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரிலே இந்தியாவில் முதலீடு செய்வார்கள். அது யாருடைய பணம் என்பதை இந்திய அரசுக்கும் செபி-க்கும் அவர்கள் சொல்ல தேவை இல்லை. இப்படி செய்யும் முதலீட்டிற்கு 'பார்ட்டிஸிபேட்டரி நோட்ஸ்’ என்று பெயர்.

ஜி.ஏ.ஏ.ஆர்.: அந்நிய முதலீட்டுக்கு ஆபத்து!

யாருடைய பணம் என்பது நம் அரசாங்கத்திற்குத் தேவை இல்லை என்பதால் இங்கு இருக்கும் கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யப் படுவதாக மத்திய அரசு நினைக்கிறது. தவிர, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்த பணம் வரும்பட்சத்தில் குறுகிய கால மூலதன ஆதாய வரிகூட அந்நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை.

ஆனால், மத்திய அரசாங்கம் இப்போது கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தில் இந்த வழியையும் அடைத்துவிட்டது. ஆனால், இதில் பி.நோட்ஸ் வராது என்று வெள்ளிக்கிழமை வந்த அறிவிப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

ஜி.ஏ.ஏ.ஆர்.: அந்நிய முதலீட்டுக்கு ஆபத்து!

இதுகுறித்து பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் பேசினோம்.

''ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த சட்டத்தைக் கொண்டு வரப்போகிறார்கள் என்றாலும், பின்தேதியிட்டு கொண்டுவரப் போகிறார்கள். இந்த சட்டத்தில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. வெளிநாடுகளிலும் இதேபோன்ற சட்டம் இருந்தாலும், அங்கு எவ்வளவு வருமான வரிச் செலுத்த

வேண்டும் என்பதை அரசாங்கமே சொல்லிவிடும். ஆனால், நம் அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் புதிய  சட்டத்தின்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை அவர்களே தெரிந்து கட்ட வேண்டும். ஒருவேளை கட்டத் தவறிவிட்டால் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

இது வெறும் வாய்மொழி உத்தரவுதான் என நிதி அமைச்சர் சொல்லி இருந்தாலும் அது நடக்குமா, நடக்காதா என்பது தெரியவில்லை. இந்த சட்டம் பற்றி மத்திய அரசாங்கம் இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். சூழ்நிலைகள் சரியாகவும், சாதகமாகவும் இருந்தால் மட்டுமே சந்தை மேலே செல்லும்'' என்றார் விக்னேஷ்.

குழப்பங்களைத் தீர்க்கும் மந்திரக்கோல் பிரணாப்பின் கையில் இருக்கிறது. அவர் என்ன செய்யப் போகிறாரோ!

-வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு