பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி
##~##
டந்த வாரத்தில் விலை இறங்கிய பருத்தி, வரும் வாரத்தில் எப்படி வர்த்தகமாகும் என அம்பலால் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் ரிசர்ச் மேனேஜர் விஜயபாபு கூறுகிறார்.

''சென்ற வாரத்தில் பருத்தி 21% விலை குறைந்தது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி 35.2 மில்லியன் பேல்கள் (ஒரு பேல் என்பது 170 கிலோ) இருக்குமென அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு பருத்தி உற்பத்தி இருந்ததில்லை என்பதால் சந்தையில் விலை குறைந்தது.  கடந்த மார்ச் மாதம் முதல் பருத்தியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. எனினும், இந்த அதிகப்படியான உற்பத்தி காரணமாக ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி வாங்க ஏப்ரல் 23-ம் தேதி பிரதமரை சந்திக்க இருக்கிறார் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் சரத்பவார்.

பருத்தியை ஏற்றுமதி செய்ய பிரதமர் ஒப்புதல் கொடுத்துவிட்டால் வரும் வாரத்தில் விலை ஏறும். ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. எனவே, என்.சி.டி.இ.எக்ஸ்.-ல் கபாஸ் என சொல்லும் இருபது கிலோ பருத்தியை 775 ரூபாய் சப்போர்ட் விலையாக கொண்டு வாங்கலாம். இதிலிருந்து ஒரு வாரத்தில் 790 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது''.

கமாடிட்டி


மிளகு!

கடந்த வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. தின வரத்தாக சந்தைக்கு 11 டன் மிளகு வந்தது. என்.சி.டி.இ.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில், ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் (நூறு கிலோ மிளகு) வெள்ளிக்கிழமை மாலை 38,200 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்தியாவைவிட வியட்நாம் அதிகளவில் மிளகை ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் முழுவதும் இந்தியா ஏற்றுமதி செய்த மிளகை, இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதத்திலே ஏற்றுமதி செய்து முடித்துவிட்டது.

வியட்நாம் 1,21,935 டன் மிளகை கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்தது. அதேநேரத்தில் இந்தியாவோ 25,500 டன் மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. மிளகு விளையும் பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் இந்தாண்டில் விளைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமாண்ட் அதிகமாக இருந்தும் விளைச்சல் குறைவாக இருப்பதால், வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

கமாடிட்டி


ஜீரா!

அதிகரித்து வரும் ஏற்றுமதித் தேவை காரணமாக ஜீரா நல்ல விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ஜீராவின் விலை மற்ற ஜீராவைவிட விலை குறைவாக இருப்பதால், உலகச் சந்தையில் இந்திய ஜீராவுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. உலகச் சந்தை யில் இந்திய ஜீரா ஒரு டன் 2,500 டாலருக்கும், சிரியா வகை ஜீரா 3,300 டாலருக்கும் விற்பனையானது. ஜீரா உற்பத்தியும் அதிகளவில் இருப்பதால் தேவைக்கு ஈடுகொடுத்து வருகிறது.

கடந்த வருடத்தில் 28 லட்சம்  பைகள் விளைச்சல் இருந்தது. இதுவே இந்த வருடம் 33 லட்சம் பைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்தாலும் ஏற்றுமதி ஆர்டர் அதிகளவில் வருவதால் அடுத்த வாரத்தில் ஜீரா நல்ல விலையில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கமாடிட்டி


மஞ்சள்! 
 

சமீப காலமாக விலை இறங்கி வந்த மஞ்சள் சென்ற வாரத்தில் சற்று விலை அதிகரித்து வர்த்தகமானது. தின வரத்து 10,000 பைகளாகவும், நூறு கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்தும் சென்ற வாரத்தில் விற்பனையானது. சென்ற வருடத்தில் அதிக விலை போனதால் அதை நம்பி அதிகளவில் மஞ்சளை பயிரிட்ட விவசாயிகள், இந்த வருடம் விலை குறைந்ததை அடுத்து வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனால், இனிமேல் வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 20-ம் தேதி மாலை என்.சி.டி.இ.எக்ஸ்.    எக்ஸ்சேஞ்சில் நூறு கிலோ 3,470 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து 100, 200 ரூபாய் வரும் வாரத்தில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கமாடிட்டி


காப்பர்!

ஐரோப்பா, ஸ்பெயின் நாடுகளின் பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்லாமல் போர்ச்சுக்கல் நாட்டிலும் பிரச்னை வரும் என்கிற எதிர்பார்ப் பாலும், சீனாவின் உற்பத்தி வளர்ச்சி குறையும் என்ற எதிர்பார்ப்பினாலும் கடந்த இரண்டரை மாதம் இல்லாத அளவுக்கு சென்ற வாரத்தில் விலை குறைந்தது.

எனினும், உலகச் சந்தையில் காப்பரின் விலை குறைந்தளவிற்கு இந்தியாவில் குறையவில்லை. காரணம், ரூபாய் மதிப்பு சரிந்ததே. உலகளவில் சப்ளை கம்மியாக இருந்தாலும் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் காப்பரை வாங்கும் நேரமிது. சுமார் ஒருமாத காலத்திற்கு வாங்கி வைத்து விற்கலாம். ஏப்ரல் 20-ம் தேதி மாலை எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் ஒரு கிலோ காப்பர் 419 ரூபாய்க்கு வர்த்தமானது. 402, 404 ரூபாய் சப்போட் விலையாக கொண்டும், 430, 440 ரூபாயை இலக்கு விலையாகக் கொண்டும் வாங்கலாம்.

- பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு