பிரீமியம் ஸ்டோரி
மை டியர் மணி!

''பணத்தை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்கொண்டு அது நம்மோடுதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பணத்தை சுதந்திரமாகச் செயல்பட விடவேண்டும். அப்போதுதான் அது நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மை விட்டு எங்கும் போய்விடக்கூடாது என்று கட்டுப்பெட்டித்தனமாக இருப்பவர்கள் வளர மாட்டார்கள் என்பது என் அனுபவம்.

##~##
ருவரிடம் பணம் இல்லாமல்கூட இருக்கலாம்; ஆனால், பணத்தை வரவழைப்பதற்கான ஐடியா இருக்க வேண்டும். இதுதான் பணம் பண்ணுகிற கான்செப்ட். இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால் பணம் எப்போதும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும். சம்பாதித்ததைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு ஒரு ரிஸ்க்கும் எடுக்காதவர்கள் பணத்தின் ருசியை ஒருபோதும் அனுபவிக்க மாட்டார்கள்.  விதைத்தால்தான் அறுக்க முடியும், இறைத்தால்தான் பொறுக்க முடியும். ரிஸ்க் எடுத்து பணத்தைப் போட்டால்தான் அது பல மடங்காக வளர்க்க முடியும்.

பண விஷயத்தில் நாணயம் தவறாமல் இருப்பதும் முக்கியம். கடன் வாங்குவது தவறல்ல. வாங்கிய கடனை சொன்ன நேரத்தில் திருப்பித் தரவேண்டும். முடியவில்லை எனில் அதை சொல்லிவிட வேண்டும். அதை விடுத்து இன்னொரு இடத்தில் கடன் வாங்கி அதை சரி செய்யக்கூடாது. ஒரு வங்கியில் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல், அடுத்த வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பிக்கிறவர்களால் ஒருபோதும் வெற்றிகரமாக பிஸினஸ் செய்ய முடியாது.  

வளர்ச்சிக்கு என்ன அடிப்படை தேவை என்பதை அறிந்து அதற்கான செலவுகளைச் செய்யாமல், தங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள செலவு செய்பவர்கள் முன்னேறாமல் தேங்கிப் போவார்கள். பணத்தின் செயல்பாடுகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அகலக்கால் வைப்பது ஆபத்தானது. பணத்திற்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தால் அது ஒன்றுக்குப் பத்தாக திரும்பவரும். மரியாதை தராத பணம் நம் வீட்டு வாசலை மிதிக்காது.

 - நீரை.மகேந்திரன்,
படம்: என்.விவேக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு