Published:Updated:

வரிச் சேமிப்பில் எது லாபம்?

சேமிப்பு கணக்கு Vs வைப்பு நிதி

பிரீமியம் ஸ்டோரி
வரிச் சேமிப்பில் எது லாபம்?

சேமிப்பு கணக்கின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை இனி வரி இல்லை என கடந்த பட்ஜெட் தாக்கலின்போது சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. சேமிப்பு கணக்கில் அதிக தொகையைப் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி!  

வரிச் சேமிப்பில் எது லாபம்?

தனைத் தொடர்ந்து மக்கள் பலரும் அதிக வட்டி மற்றும் வரிச் சேமிப்புக்காக வங்கிக் கணக்கில் அதிக தொகையைப் போட்டு வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேநேரத்தில், டெபாசிட் களுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் வங்கிகள் ஓராண்டு டெபாசிட்களுக்கு சுமார் 8.5% வட்டி வழங்கி வருகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் - சேமிப்பு கணக்கு, இந்த இரண்டில் எது லாபமாக இருக்கும்? வரியைச் சேமிக்க சிறந்த வழியாக இருக்கும்? என நிதி ஆலோசகர் முத்து கிருஷ்ணனிடம் பேசினோம்.

''சேமிப்பு கணக்கின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத் திற்கு வரி இல்லை என்றாலும், இதை வரிச் சேமிப்புக்கான சிறந்த வழியாகச் சொல்ல முடியாது. சேமிப்பு கணக்கில் வருடத்துக்கு சராசரியாக நான்கு சதவிகித வருமானம் என்கிற அடிப்படையில், 2.5 லட்சம் ரூபாய் வைத்திருக்கும் போதுதான் பத்தாயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும்.

வரிச் சேமிப்பில் எது லாபம்?
##~##
அதேசமயம், வங்கி வைப்பு நிதிகள் மூலம் வரும் வட்டி விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இதே ஒரு வருட கால இடைவெளியில் 8% வருமானம் என்று வைத்துக் கொண்டாலும் சேமிப்புக் கணக்கு தரும் வருமானத்தைவிட அதிகமாக கிடைக்கும். ஆனால், வைப்பு நிதிகளை அவசரத் துக்குப் பயன்படுத்த முடியாது.

குறிப்பிட்ட காலத்திற்கு இடை யில் எடுக்கிறோம் என்றால், வட்டி வருமானத்தில் 1.5 முதல் 2% வரை பணம் பிடிக்கப் படும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்' என்ற முத்து கிருஷ்ணன், சேமிப்பு கணக்கா - ஃபிக்ஸட் டெபாசிட்டா, எது பெஸ்ட் என்பதை உதாரணத்துடன் விளக்கிச் சொன்னார்.

வரிச் சேமிப்பில் எது லாபம்?

''உதாரணமாக, 10 சதவிகித வரி வரம்புக்குள் உள்ள ஒருவர் 2.5 லட்சத்தை 8.5 சதவிகித வைப்பு நிதியில் போடுகிறார் என்றால், வரிப் பிடித்தம் போக ஆண்டுக்கு 19,061 வட்டி பெறுவார். 20 சதவிகித வரம்புக்கு இதே தொகைக்கு 16,872 ரூபாயும், 30 சதவிகித வரம்புக்குள் இருப்பவருக்கு 14,684 ரூபாயும் பெறுகிறார். இதே கணக்குபடி சேமிப்புக் கணக்கில் பார்த்தால், இதே தொகைக்கு அதிகபட்சம் 7 சதவிகித வட்டி என கணக் கிட்டால் 10 சதவிகித வரித் திட்டத்தில் உள்ளவருக்கு வரி கட்டியதுபோல் 16,728 ரூபாய்  கிடைக்கும். 20 சதவிகிதம் வரி கட்டுபவர் என்றால் 15,955 ரூபாயும், 30 சதவிகித திட்டத்தில் உள்ளவருக்கு 15,183 ரூபாயும் கிடைக்கும். ஆக, 10% மற்றும் 20% வரி வரம்புக்குள் உள்ளவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் லாபகரமாக இருக்கும். அதேநேரத்தில், 30% வரி வரம்பில் வருபவர்களுக்கு வங்கிச் சேமிப்பு கணக்கில் 7% வட்டிக்குப் போட்டு வைத் திருப்பது லாபமாக இருக்கும்.

அதேநேரத்தில், 1.5 லட்சம் ரூபாயை சேமிப்பு கணக்கு (7% வட்டி) மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (8.5%) போடுவது என்றால், 10% வரி வரம்பிலிருந்தால் ஃபிக்ஸட் டெபாசிட் லாபமாக இருக்கும். 20% மற்றும் 30% இருப்பவர்களுக்குச் சேமிப்பு வங்கி மூலமே லாபகரமானதாக இருக்கும்'' என்றார்.

வரியை மிச்சப்படுத்த வட்டியை மட்டும் பார்க்காமல் கூடவே நீங்கள் எந்த வரி வரம்புக்குள் வருகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்..! -

- நீரை.மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு