Published:Updated:

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

வரிச் சேமிப்பு

பிரீமியம் ஸ்டோரி
டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

வழக்கமாக நம்மவர்கள் வருமான வரியை மிச்சப்படுத்த கடைசி மூன்று மாதங்களில்தான் மெனக்கெடுவார்கள். அவசரகதியில் அப்படி செய்யும்போது மோசமான முதலீட்டுத் திட்டங்களில் மாட்டிக் கொள்பவர்கள் பலர். இந்த சிக்கலைத் தவிர்க்க இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே திட்டமிடுவது நல்லது.  

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

ரிச் சேமிப்புக்காக முதலீடு செய்யும்போது எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்று சொன்னார், சென்னையின் முன்னணி ஆடிட்டர் என்.எஸ்.ஸ்ரீனிவாசன்.  

''இந்த நிதி ஆண்டில் உங்கள் சம்பளத்தில் பிராவிடெண்ட் ஃபண்டுக்காக தோராயமாகப் பிடிக்கப்படும் தொகை, பிள்ளைகளின் படிப்புச் செலவு, வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அசலுக்கு கட்டும் தொகை, ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் போன்றவற்றுக்கு மொத்தம் எவ்வளவு பணம் போகிறது என்பதை முதலில் கணக்கிடுங்கள். இத்தொகை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டால், நீங்கள் புதிய முதலீட்டை பற்றி யோசிக்கத் தேவையில்லை. ஒரு லட்ச ரூபாய்க்குள் இருந்தால் மீதித் தொகைக்கு முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம்'' என்றவர், அதற்குப் பொருத்தமான திட்டங்களைச்  சொன்னார்.  

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!
##~##
''வாலண்டரி பி.எஃப்.-ல் பணம் போடுவது சிறந்த வழி. இதில் செய்யப்படும் முதலீடு, முதலீட்டினால் கிடைக்கும் வருமானம், முதிர்வுத் தொகை என மூன்று நிலைகளிலும் வரிச் சலுகை கிடைக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார்; ஆனால், லாக் இன் பிரீயட் குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் ஏற்றவை.  

சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள், எதிர்காலச் செலவுக்காக பி.பி.எஃப். கணக்கில் சேமித்து வரலாம். இதற்கான வட்டி இப்போது 8.8 சதவிகிதமாகவும்,  வரிச் சலுகைக்கான முதலீட்டு வரம்பு 70,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இவர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால் தபால் அலுவலக வரிச் சேமிப்புத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம்'' என்றார் ஆடிட்டர் ஸ்ரீனிவாசன்.

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

வரித் திட்டமிடும்போது  ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் இதோ:

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

• லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆண்டு பிரீமியத்தைப் போல 10 மடங்குக்கு மேல் கவரேஜ் இருப்பது அவசியம்.  

• இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும்போது ஓராண்டுக்கு மட்டும் தேர்வு செய்யவும். அடுத்த வருடம் அமலுக்கு வரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டத்தில் (டி.டி.சி.) இந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.  

• மெடிக்ளைம் பாலிசிக்கான பிரீமியத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ.15,000 மற்றும் பெற்றோருக்கு ரூ.15,000 ரூபாய்க்கு (பெற்றோர் மூத்தக் குடிமக்கள் என்றால் 20,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. தற்போது முன்எச்சரிக்கையாகச் செய்து கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைக்கு ரூ.5,000 வரை வரிச் சலுகை உண்டு என்று அறிவித்திருக்கிறது அரசு.

• இன்ஃப்ரா ஃபாண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு 20,000 ரூபாய் வரை 80 சி.சி.எஃப். பிரிவின் கீழ் வரிச் சலுகை இந்த ஆண்டில் இல்லை.

டாக்ஸ் பிளானிங்: திட்டமிட்டு வரியைக் கட்டுங்கள்!

• 2012-13-ல் முதல் முறையாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் 50,000 ரூபாய் முதலீடு செய்தால் அதில் பாதி, அதாவது 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை கிடைக்கும் என சொல்லி இருக்கிறது மத்திய அரசு. இந்த பணத்தை மூன்றாண்டுக்கு எடுக்க முடியாது.

• வரிச் சலுகைக்காக இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்.) பி.பி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்ய இப்போது அனுமதியில்லை. அவர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வரிச் சலுகை பெறலாம்.

இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து  திட்டமிட்டால் எந்த அலுப்பும் இல்லாமல் வரி கட்டலாம். வரி கட்டுவது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. அதை தவிர்க்கக்கூடாது என்பதை  புரிந்துகொண்டு, இன்றே வரித் திட்டமிடலைச் செய்வோம்.

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு