Published:Updated:

பி.எஃப். பணம்: இனி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!

டெக்னாலஜி

பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப். பணம்: இனி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!

இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 4 கோடி பேருக்கு சம்பளத்தில் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்.) பிடிக்கப்படுகிறது. பல நிறுவனங்களில் பி.எஃப். பிடிக்கப்பட்டாலும் ஆண்டுதோறும் அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதற்கான பி.எஃப். ரசீதை சில நிறுவனங்கள் தருவதில்லை. இதனால், தங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

##~##
ந்த குறையைப் போக்கும் விதமாக, நம் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ள வழி செய்து கொடுத்திருக்கிறது பி.எஃப். அலுவலகம்.

இந்த வசதியை நீங்கள் பெற செய்ய வேண்டியதெல்லாம் கீழே உள்ள இ.பி.எஃப்.ஓ. (எம்ப்ளாயீஸ் பிராவிடெண்ட் ஃபண்ட் ஆர்க்கனைசேஷன்) அமைப்பின் இணையத்தள இணைப்பை கிளிக் செய்து உள்ளே போக வேண்டியதுதான். http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

இந்த இணையதளத்தின் உள்ளே சென்று அதன் அடியில் உள்ள 'கிளிக் ஹியர்’ என்கிற பகுதியை கிளிக் செய்து உள்ளே போனால், அதில் உங்கள் மாநிலம், நகரத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்கள் நிறுவனத்தின் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பி.எஃப். எண், உங்கள் பெயர் (பி.எஃப். கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். அடுத்த சில நிமிடங் களில் உங்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்து சேரும்.

இப்போதைய நிலையில் 2010, மார்ச் வரையில் உங்கள் பி.எஃப். கணக்கில் சேர்ந்திருக்கும் பணம் எஸ்.எம்.எஸ்.

மூலம் வந்து சேருகிறது. கூடிய விரைவில் 2011 மார்ச் மாதத்துக்கான விவரமும் 'அப்டேட்’ செய்யப்படும் என்கிறார்கள் பி.எஃப். அலுவலக அதிகாரிகள்.

அட, இது நல்ல வளர்ச்சிதான்!

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு