முதலியார் சமூகத்திற்கு தனியாக எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ்ச் சமூக வரலாற்றில் முதலியார் சமூகத்திற்கு தனிப் பெருமை உண்டு. விவசாயத்தையும் நெசவையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டது இந்த சமூகம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டு விளங்கிய சமூகம் என்பதால் கலை பல வளர்த்து, ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியது.

. ஆ.ழமான சைவப் பற்றுக் கொண்ட இந்த சமூகத்தைச் சேர்ந்த வர்கள் தமிழ்ச் சமூக வளர்ச்சியிலும், அரசியலிலும் பெரும் மாற்றங்களை கடந்த இருநூறு ஆண்டுகளாகக் கொண்டு வந்தார்கள். பச்சையப்ப முதலியார் கல்வி நிலையங்களை நிறுவி, தமிழ் மக்களின் கண்களைத் திறக்க தன் சொத்துக்கள் அனைத்தை யும் தந்தார். செங்கல்வராய முதலியார், சர் ராமசாமி முதலியார் போன்ற பலர் கல்வி வளர்ச்சிக்கு நிறைய பாடுபட்டார்கள். நீதிக் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார் கள். தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அண்ணாதுரை இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்..
அரசியலிலும் சமூக வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கும் இந்த சமூகம், பிஸினஸிலும் தன் முத்திரையை பதிக்கவே செய்திருக்கிறது. அந்த வகையில் பிஸினஸ் ஜாம்பவான்களாக விளங்கிய இந்த சமூகத்தைச் சேர்ந்த சிலரைப் பற்றி பார்ப்போம். முதலில், சேலத்தில் ஒரு சினிமா ஸ்டுடியோவை தொடங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட படங் களை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தை முதலில் பார்ப்போம்.

முதலியார் சமூகத்தினர் தமிழகம் முழுக்க பரவி இருக்கிறார்கள் என்றாலும் சென்னை தொடங்கி வேலூர், திருச்செங்கோடு, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கவே செய்கின்றனர். 1907-ம் ஆண்டில் திருச்செங்கோட்டில் பிறந்தார் சுந்தரம். இவரது அப்பா ராம லிங்கம், திருச்செங்கோட்டில் மிகப் பெரிய நிலச்சுவான்தார். பெரும் பணக்காரரான இவர், தன் மகன் சுந்தரத்தை நன்றாகப் படிக்க வைத்தார். சென்னையில் பி.ஏ. படித்து முடித்த சுந்தரம், டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். படித்து முடித்தபிறகு இங்கிலாந்து பெண்மணி ஒருவரையே திருமணம் செய்து கொண்டு இந்தியா திரும்பினார்.

டி.ஆர்.சுந்தரம் படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்ப வும் தமிழ்நாட்டில் சினிமா தொழில் சூடுபிடிக்கவும் சரியாக இருந்தது. அப்போது சேலத்தைச் சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவர் ஏஞ்சல் பிலிம்ஸ் என்கிற பெயரில் சினிமா படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ண லீலை, திரௌபதி வஸ்திராபரணம், நல்லதங்காள் என பல படங்களை எடுத்து வந்தது இந்த ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மேற்சொன்ன இந்த படங்கள் அனைத்தும் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது. காரணம், அந்த நேரத்தில் கொல்கத்தாவில்தான் சினிமா ஸ்டுடியோ இருந்தது.

ஏஞ்சல் பிலிம்ஸ் வேலாயுதம் பிள்ளைக்கு பல பார்ட்னர்கள். அவர்களில் ஒருவராக சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்தார் டி.ஆர்.சுந்தரம். ஏஞ்சல் பிலிம்ஸ் தயாரித்த படங்கள் அத்தனையும் நல்ல வசூலைத் தந்தன. இதன் விளைவாக, தனியாக படத் தயாரிப்பு வேலையில் இறங்க முடிவு செய்தார் அவர். தவிர, அவர் மனைவி கிளாடீஸ் நல்ல கலாரசிகையாக இருந்தார். தன் கணவர் படத் தயாரிப்பு வேலையில் இறங்க அவரும் உற்சாகப்படுத்தவே, 1935-ல் தனியாக படம் தயாரிக்கும் வேலையில் இறங்கினார் டி.ஆர்.சுந்தரம்.

தொடக்கத்தில் ஆங்கிலப் படங்களையே எடுத்தார். மாடர்ன் கேர்ள், பேண்டிட் ஆஃப் த ஏர், கன்ட்ரி கேர்ஸ், மாடர்ன் லேடி, மாடர்ன் யூத் என இரண்டு ஆண்டுகளில் ஐந்து படம் எடுத்தார். இதற்காக மும்பை, கொல்கத்தா என பல்வேறு நகரங்களில் இருந்த ஸ்டுடியோக்களுக்குப் போய் வந்தார்.

ஸ்டுடியோக்களுக்கு இப்படியே அலைந்து கொண்டிருப்பதைவிட, தனக் கென தனியாக ஒரு ஸ்டுடியோ இருந்தால்தான், தான் நினைக்கிற படங்களை எடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த சுந்தரம், இந்த ஸ்டுடியோவை எப்படி அமைக்க வேண்டும் என்பதை அமெரிக்காவில் இருந்த வால்ட் டிஸ்னி போன்ற ஸ்டுடியோக்களிலிருந்து கற்றார். அமெரிக்க ஸ்டுடியோக்கள் எப்படி சகல தொழில்நுட்பத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கிற மாதிரி அமைக்கப்படுகின்றன என்பதையும்; அங்கு ஹாலிவுட் படங்கள் எப்படி எடுக்கப் படுகிறது என்பதையும் நன்றாக ஆராய்ந்துவிட்டுதான் ஸ்டுடியோ அமைக்கும் வேலை யில் இறங்கினார்.

அந்த ஸ்டுடியோவை அவர் சென்னையில் அமைக்க வில்லை. சேலத்தில் ஏற்காடு மலையடிவாரத்திற்கு கீழே அமைத்தது அவருக்கு இருந்த துணிச்சலையே காட்டுகிறது. 1937-ல் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது 'சதி அகல்யா’. ஆங்கில மொழியில் படம் எடுக்கிறபோது மலையாள மொழியில் ஏன் படமெடுக்கக் கூடாது என்று நினைத்ததன் விளைவு, பாலன் என்கிற மலையாளப் படத்தை 1938-ல் எடுத்தார்.

தனியாக ஸ்டுடியோ நடத்தியதன் விளைவாக 1938-ல் மட்டும் ஆறு படங்கள், 1939-ல் நான்கு படங்கள், 1940-ல் ஆறு படங்கள் என நிறைய படங்களைத் தயாரித்தார்.

1940-ல் இவர் தயாரித்த உத்தம புத்திரன் படத்தில் பி.யு.சின்னப்பா நடித்தார். ஒரே கதாநாயகன் இரட்டை வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. இந்த படம் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. 1942-ல் மனோன்மணி என்கிற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் தமிழ் சினிமா உலகம் இன்றைக்குகூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களைச் செய்தார். உதாரணமாக, இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என பல லட்சம் பேரிடம் கேட்டு பி.யு. சின்னப்பாவையும், டி.ஆர்.ராஜகுமாரியையும் தேர்வு செய்தார். இதற்காக மட்டுமே அவர் செலவு செய்த தொகை இரண்டு லட்ச ரூபாய். டி.ஆர்.சுந்தரத்தின் பிஸினஸ் வெற்றிக்கு இது ஒரு சான்று.

1950-ல் எம்.ஜி.ஆரை வைத்து மந்திரிகுமாரி படத்தை எடுத்தார் டி.ஆர்.சுந்தரம். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இருபது படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தாலும் மந்திரிகுமாரிதான் அவருக்கு ஒரு திருப்புமுனையைத் தந்த படம். 1951-ல் சர்வாதிகாரி படத்தையும், 1956-ல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தையும் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தார் டி.ஆர்.சுந்தரம். அலிபாபாவில் இன்னொரு புதுமை, அதுதான் தமிழின் முதல் கேவா கலர் படம்.

சென்னையிலிருந்து முன்னூறு கிலோ மீட்டருக்கு மேல் தள்ளியிருக்கிற சேலத்தில் ஒரு ஸ்டுடியோ வைத்து, அதை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்த டி.ஆர்.சுந்தரம் 1963-ல் இறந்தார். அவருக்குப் பிறகு மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர் அவரது மகன் ஆர்.ராம சுந்தரம். தன் தந்தை இறந்தபிறகு படத் தயாரிப்பில் இறங்கிய இவர், ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படங்களை நிறைய எடுத்தார்.

கிட்டத்தட்ட 108 படங்களை எடுத்த மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ இன்றைக்கு செயல்படவில்லை என்றாலும், தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத இடத்தைப் பெறவே செய்திருக்கிறது.

(அறிவோம்)