ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 36 வயதான செந்தில்குமாருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. மாதச் சம்பளம் 30,000 ரூபாய். மனைவி கவிதா, இல்லத்தரசி. இவர்களுக்கு இரு குழந்தைகள். மூத்தவன் ஆதித்யா லியானர்டோ டாவின்ஸிக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் அறிவொளிக்கு ஒரு வயதாகிறது.

''இப்போதைக்கு எங்க ளுடைய பூர்வீகச் சொத்தை தவிர வேறு எதுவும் இல்லை. நாணயம் விகடன் தருகிற ஆலோசனையின்படிதான் இனி சேமித்து முதலீடு செய்து எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சம்பளத்தில் குடும்பச் செலவுகளுக்கு 8,500 ரூபாய், வீட்டு வாடகை 4,500 ரூபாய், பெட்ரோல், கல்விச் செலவு, இன்ஷூரன்ஸ் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் 14,750 ரூபாய் செலவாகிவிடுகிறது. மீதி இருக்கும் 12,250 ரூபாயை பயன்படுத்தித்தான் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்'' என்றவர், எதிர்கால தேவைகள் என்ன என்பதைத் தெளிவாகச் சொன்னார்.

''மகனை தேசிய ராணுவ அகாடமி பயிற்சியில் சேர்க்க விரும்புகிறார். அதற்கு இன்றைய நிலையில் 2.5 லட்சம் ரூபாய் தேவை. அதற்கு இன்னும் 10 வருடம் பாக்கி இருக்கிறது என்பதால், இதைவிட இன்னும் கூடுதலாகவே பணம் தேவை. மகனுக்கு 27-வது வயதில் திருமணம் செய்து வைக்க இன்றைய நிலவரப்படி 2 லட்சம் ரூபாய் தேவை. திருமணத்துக்கு இன்னும் 19 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. மகளை எம்.பி.ஏ. வரைக்கும் படிக்க வைக்க (ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால்) இன்றைய நிலவரப்படி 10 லட்சம் ரூபாய் தேவை. இன்னும் 17 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. மகளுக்கு 26 வயதில் திருமணம் செய்து வைக்க இன்றைய நிலவரப்படி ஆறு லட்சம் ரூபாய் தேவை. அதற்கு இன்னும் 25 வருடம் பாக்கி இருக்கிறது.

. ஓய்வுக் காலத்தில் மாதம் 30,000 ரூபாய் வருமானம் வருவதற்கு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். மதுரையில் இடம் வாங்கி வீடு கட்ட 12 லட்சம் ரூபாய் தேவை (நிலம் வாங்க இரண்டு லட்சம் ரூபாய், வீடு கட்ட 10 லட்சம் ரூபாய்). இன்னும் ஆறு மாதத்தில் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். மூன்று வருடங்களில் சொந்தமாகத் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் தேவை. பிற நிறுவனத்துடன் டை-அப் செய்து தொடங்கினால் 15 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்தத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்'' என்றவருக்கு நிதி ஆலோசனை சொல்ல தயாரானார் நிதி ஆலோசகர் ரமேஷ்பட்..
அவசரத் தேவைக்கான தொகை மற்றும் இன்ஷூரன்ஸ்!

''முதலில் இவர் செய்ய வேண்டியது அவசரத் தேவைக்கான பணத்தைச் சேமிப்பதே. இன்றிலிருந்து எதிர்காலத் தேவைக்காக மீதமிருக்கும் தொகையில் 1,400 ரூபாயை எடுத்து வங்கி ஆர்.டி.-யில் முதலீடு செய்து வரவேண்டும். அடுத்தது, குடும்பப் பாதுகாப்பிற்காக இவரது பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் சுமார் 8,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளைம் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது அவசியம். இதற்கு வருட பிரீமியம் சுமார் 6,800 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.

மகனின் கல்வி மற்றும் திருமணம்!

மகனின் கல்விக்கு இன்னும் 10 வருடம் பாக்கி இருப்பதால், அன்றைய நிலவரப்படி குறைந்த பட்சம் 5.50 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். அதற்காக மாதம் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் 5.5 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனுக்கு இளங்கலை கல்வி மற்றும் தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி தரலாம். அவனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க 19 வருடம் கழித்து 8.60 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு மாதம் 700 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

மகளின் கல்வி மற்றும் திருமணம்!

செந்தில்குமார் தனது மகளை ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படிக்க வைக்க ஆசைப்படுவதால், இன்னும் 17 ஆண்டுகள் கழித்து (பணவீக்கம் 8% அடிப்படையில்) குறைந்தபட்சம் 37 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதற்கு மாதம் 4,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 17 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி தன் மகளை எம்.பி.ஏ. வரை படிக்க வைக்க முடியும்.

மகளுக்கு 26 வயதில் திருமணம் செய்து வைக்க இன்றைய நிலையில் இன்னும் 25 வருடம் கழித்து 41 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதற்கு மாதம் 1,300 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 25 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். கிடைக்கும் பணத்தைப் பயன் படுத்தி சிறப்பாக திருமணத்தை நடத்தி முடிக்கலாம்.

வீடு கட்ட..!

மதுரையில் வீடு கட்ட 12 லட்சம் ரூபாய் தேவை என்று சொல்லியிருந்தார். கையில் முதலீடாக வாங்கி வைத்திருக்கும் எட்டு சவரன் தங்க நகையை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை முன்பணமாக பயன்படுத்திக் கொண்டு, மீதி தேவைப்படும் 10 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்வது நல்லது. இதற்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டி வரும். புதிதாகக் கட்டும் இந்த வீட்டை வாடகைக்கு விடுவதாக தீர்மானித்திருக்கிறார் செந்தில்குமார். வாடகை மூலம் மாதம் 8,000 ரூபாய் வருமானம் வரும் என்று உத்தேசித்திருப்பதால் அந்த பணத்தை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.-ஆக செலுத்தி வரலாம். சம்பளம் உயர்ந்தபிறகு இ.எம்.ஐ. தொகையை அதிகரித்து விரைவில் வீட்டுக் கடனை அடைத்துவிடுவது நல்லது.

தொழில் தொடங்க..!

மூன்று ஆண்டுகளில் சொந்த மாகத் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் அல்லது பிற நிறுவனங்களுடன் இணைந்து தொழில் ஆரம்பிக்க 15 லட்சம் ரூபாய் தேவை என்றார். மூன்று ஆண்டுகளில் ஒரு கோடியை புரட்ட நினைப்பது அசாதாரணமான விஷயம். ஆனால், 15 லட்சத்திற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்க்கும்போது, வங்கியில் தொழில் கடனாக 15 லட்சம் ரூபாயை வாங்கி கொள்ளலாம். இதற்காக கட்ட வேண்டியிருக்கும் இ.எம்.ஐ. தொகையை ஆரம்பிக்கப் போகும் சொந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து எடுத்து கட்டி விரைவில் கடனை அடைத்துவிடலாம்.

ஓய்வுக் காலத்திற்கு..!

இவர் கேட்டுக் கொண்டது போல ஓய்வுக் காலத்தில் மாதம் 30,000 ரூபாய் வருமானம் கிடைப்பதற்கு, இவர் கையில் 44.75 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். அதற்காக மாதம் 1,600 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 24 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் 44.75 லட்ச ரூபாயை ரிஸ்க் குறைவான பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம், மாதா மாதம் 30,000 ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கும்.

மகனின் கல்வித் தேவை முடிந்ததும் அதற்காகச் சேமித்து வந்த 2,000 ரூபாயை 14 ஆண்டுகள் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 5.88 லட்சம் ரூபாய். மகனின் திருமணத் தேவை முடிந்ததும் அதற்காக செய்துவந்த முதலீட்டுத் தொகை 700 ரூபாயை ஐந்து ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 62,000 ரூபாய்.

மகளின் கல்வித் தேவை முடிந்ததும், அதற்காகச் செய்து வந்த முதலீட்டுத் தொகை 4,000 ரூபாயை எழு ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 17.79 லட்சம் ரூபாய். ஆக, இவரது ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் எக்ஸ்ட்ரா தொகை 17.79 லட்சம் ரூபாய். இந்த தொகையையும் ஒரு பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் ஓய்வுக் காலத்தில் எதிர்பார்த்த வருமானத்தை விட அதிகமாகவே கிடைக்கும். வாழ்த்துக்கள்!

- செ.கார்த்திகேயன்
படங்கள்: மணிகண்டன்