ஒரு வீட்டின் குடும்பத் தலைவி நன்றாகப் படித்தவர் என்றால், அவர் வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருப்பார். அப்போது நிறைய வருமானம் வரும். அப்படி வரும் பணத்தில் நாலு காசை சேமிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், அதிகம் படிக்காமலே தனக்கு தெரிந்த ஒரு கைத்தொழில் மூலம் ஓரளவுக்குச் சம்பாதித்து, அதை கச்சிதமாக முதலீடு செய்து, ஒன்றுக்கு இரண்டாக பெருக்குவதுதான் உண்மையான சாமர்த்தியம். விருதுநகரைச் சேர்ந்த தனலெட்சுமி பழனிச்சாமி, அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர். திருமதி எஃப்.எம். பகுதிக்காக அவரைச் சந்தித்தபோது, தன் குடும்ப நிதி நிர்வாகத்தைப் பற்றி புட்டுப் புட்டு வைத்தார்.

. ''எ.ங்களுக்கு கல்யாண மாகி இருபத்தி மூணு வருஷமாகுது. எங்களுக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையன். பொண்ணுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது. பையங்க ரெண்டு பேரும் இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. நானும் என் கணவரும் சின்ன வயசுல குடும்பச் சூழ்நிலையால படிக்க முடியலை. அதனால, எங்க பிள்ளைங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வரக் கூடாதுன்னு நல்லா படிக்க வைச்சுகிட்டு இருக்கோம்..
எங்க கல்யாணம் முடிஞ்சப்ப, எங்களோட சொத்துன்னு பார்த்தா, என் மாமனார் என் கணவருக்கு தந்த வீடு மட்டும்தான். அவரு கொடுத்த வீட்டுலதான் முதல்ல நாங்க குடியிருந்தோம்.

சின்ன வயசுல என் கணவர் மூன்று ரூபாய்க்கு இரும்புப் பட்டறையில வேலைக்குச் சேர்ந்தார். கல்யாணம் முடிஞ்ச பிறகும்கூட அடுத்தவங்க கிட்டதான் வேலைக்குப் போய்ட்டு இருந்தார். அப்புறம் நமக்கு நல்லாத் தெரிஞ்ச தொழிலை நாம் ஏன் பெருசா செய்யக்கூடாதுன்னு என் நகையை கொஞ்சம் அடகு வைத்து கடன் வாங்கி இரும்புப் பட்டறையைச் சொந்தமா ஆரம்பிச்சோம். முன்பெல்லாம் மாசத்துக்கு சராசரியாக 10,000 ரூபாய் லாபம் கிடைச்சுது. இன்னைக்கு மாசம் 30,000 ரூபாய் வரைக்கும் லாபம் வருது. தொழிலை இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்துறதுக்காக ஒரு கல் பட்டறையையும் ஆரம்பிச் சோம். கல் பட்டறை மூலமா மாசம் 10,000 ரூபாய் வருமானம் வருது. ஆக, மொத்தம் என் கணவர் மாசம் 40,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

முதல் வேலையா நகைக் கடனை அடைச்சு நகைகளை மீட்டோம். எனக்கு வீட்டுலயே சும்மா இருக்க பிடிக்கலை. குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்துட்டதால, வீட்டு வேலையை முடிச்சுட்டு, நான் ரொம்ப நேரம் சும்மா இருக்கிற மாதிரி பட்டுது. அதனால தையல் கத்துகிட்டு, ஒரு தையல் மெஷின் வாங்கி னேன். அதன் மூலம் துணிகள் தைச்சுக் குடுத்தேன். இதுல ஓரளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுது. அப்பகூட இன்னும் நேரம் மிச்சம் இருக்கிற மாதிரி பட்டுது. அதனால வீட்டுல சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரம்பிச்சேன். இப்ப தையல் கடை, மளிகைக் கடை மூலமா மாசத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எல்லாருக்கும் செய்யறதுக்கு வேலையும் நேரமும் இருக்கத் தான் செய்யுது. ஆனா, அந்த அவசியத்தைப் பலரும் முக்கியமா நெனைக்கிறதில்லை. அதனாலதான் கிடைக்கிற நேரத்த டிவி முன்னாடி ஒக்காந்து வீணடிச்சுடறாங்க.

நேரத்தைப் பயனுள்ள வழியில செலவழிக்கிற மாதிரி, வீட்டுச் செலவையும் மாசத்துக்கு 8,000 - 10,000 ரூபாய்க்குள்ள அடக்கிடுவேன். மிச்சம் வர்ற பணம் எல்லாமே வங்கிச் சேமிப்புல போட்ருவேன். வீட்டுல முக்கியமான செலவுன்னு பார்த்தா அது மளிகைக் கடை செலவுதான். நானே சொந்தமா மளிகைக் கடை வச்சிருக்கிறதால, மொத்தமா பொருட்களை வாங்கிடுவேன். அதனால எல்லாமே குறைந்த விலையில் கிடைச்சுடும்.

அப்படி சேமிச்ச பணத்துலதான் இந்த வீட்டைக் கட்டினோம். என்ன தான் சொல்லுங்க, நம்ம சம்பாத்தியத்துல சொந்தமாக ஒரு வீடு கட்டி, அதுல நம்ம விருப்பப்படி இருக்கிற திருப்தி வேற எதுலயும் இல்லை. நாங்க சொந்தமா இன்னொரு வீடு கட்டிக்கிட்டு இருக்கோம். என் மாமனார் தந்த வீட்டை வாடகைக்கு விட்டுருக்கோம்.

வீட்டுச் செலவு மட்டும் இல்லே, பொதுவா எல்லா விஷயத்துலயும் நான் சிக்கன மாவே இருப்பேன். எங்க வீட்டுல யாருமே சினிமா, ஓட்டல்னு போய் பணத்தை வீணடிக்க மாட்டோம். நானும் சரி, என் பசங்களும் சரி இதையெல்லாம் விரும்ப மாட்டோம். வர்ற ஆகஸ்ட் மாசம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருக்கோம். கல்யாணத்தை ரொம்ப ஆடம்பரமா பண்ணலாம். ஆனா, எளிமையா கோயில்ல வச்சிருக்கோம். ஆடம்பரத் துக்குச் செலவு பண்றது எனக்குப் பிடிக்காது. அப்படி போற பணத்தை, மகளுக்கு கூடுதலாக நகை போட்டு கொடுக்கலாம். அது அவளுக்கு எதிர்காலத்துல பயன்படும்.

இதுவரைக்கும் வீடு கட்டு றதுலயேயும், பொண்ணுக்கு நகை சேமிக்கிறதுலேயும்தான் அதிக ஆர்வமா இருந்தோம். மகளுக்கு திருமணம் முடிஞ்சதும் பசங்களோட எதிர் காலத்துக்குச் சேமிக்க ஆரம்பிக் கணும். பசங்களுக்கு நிலத்துல முதலீடு செய்யலாம்ங்கிறது என்னோட யோசனை. ஏன்னா தங்கத்தைவிட நிலத்துல செய்யும் முதலீடுதான் அதிக லாபம் கொடுக்கும்ங்கிறது என் அனுபவம்'' என்று சிரித்தபடியே மீண்டும் வேலை செய்யத் தொடங்கினார் திருமதி எஃப்.எம். தனலட்சுமி.

- கட்டுரை மற்றும் படங்கள்:
-ரா.ராபின் மார்லர்

திறமைசாலியை தேர்ந்தெடுங்கள்!

மைக்ரோசாஃப்ட் கம்பெனியை தொடங்கி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் நிற்பவர் பில்கேட்ஸ். 'உங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். பில்கேட்ஸ் சொன்னார். 'உங்களுடைய முக்கிய ஊழியர்கள் உங்கள் முழுநம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கம்பெனியிடம் அர்ப்பணிப்பு உடையவர்களாக, கம்பெனியின் இலக்குகளை எட்டும் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம், அவர்களுடைய தனித்திறமைகள் உங்கள் பலவீனங்களை ஈடுகட்டுபவையாக இருக்க வேண்டும். அவர்கள் ஆமாம் சாமியாக இருக்காமல், உங்களுக்குக் கடிவாளம் போடுபவர்களாக அமைய வேண்டும். இப்படிப்பட்ட திறமைசாலிகளையே நான் தேர்ந்தெடுத்தேன்.''

- அத்வைத்