''அப்பப்பா, என்ன வெயில், என்ன வெயில்!'' என்று வியர்வை வழிய நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவருக்கு குளிர்ச்சியைத் தர நம் ஏசியின் மீட்டரை கொஞ்சம் ஏற்றினோம். ஒரு நிமிடம் ஏசியின் சுகத்தை அனுபவித்தவர், உற்சாகமாகி செய்திகளை கொட்டத் தயாரானார்.

''எஸ். அண்ட் பி இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு நெகட்டிவ் குறியீடு கொடுத்ததை, சந்தை பெரிய அளவில் கண்டுக்கவில்லை. அதை 'நீஜெர்க்’காக மட்டும் எடுத்துக் கொண்ட சந்தை பிற்பாடு சுதாரித்து எழுந்தது. என்றாலும், இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என நாணயம் விகடன் ஃபேஸ்புக்கில் ஏ.கே.பிரபாகர் சொல்லி இருக்கிறார். (விரும்புகிறவர்கள் http://www.facebook.com/#!/pages/Nanayam-Vikatan/204945246245336 என்கிற லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்). எஸ் அண்ட் பி.யின் இந்த ரிப்போர்ட்டைத் தொடர்ந்து இன்னொரு தகவல் கசிய ஆரம்பித் திருக்கிறது. அது, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேறி இந்தோனேஷியா வருவதற்கு வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

''காலாண்டு முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே!'' என்றோம்.

''இதுவரை 200 நிறுவனங் களின் நிதிநிலை அறிக்கைகள் வந்திருக்கிறது. இவற்றில் சராசரியாக 18% விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆனால், நிகர லாபம் 1.5% அளவுக்கு சரிந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, மூலப் பொருட்களின் விலை உயர்வு, இரண்டாவது, வட்டி விகிதம் உயர்ந்திருப்பது. இப்போது வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதால் வரும் காலாண்டில் நிகர லாபம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது'' என்றவருக்கு சில்லென்று ஐஸ்கிரீமை ஒரு கப் நிறைய தந்தோம். ஆசையாக அதை சாப்பிட்டவர், அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

. ''நாட்டின் இரு பெரும் பங்குச் சந்தைகளாக விளங்கும் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் இடையே ஒரேவிதமான விதிமுறைகளை கொண்டுவர செபி படாதபாடுபட்டு வருகிறது. பி.எஸ்.இ.யை பொறுத்தவரை, ஒரு நிறுவனம் நிதிநிலை முடிவுகளை நான்கு காலாண்டுகளாகத் தொடர்ந்து அளிக்கவில்லை என்றால் அந்த பங்கை டீலிஸ்ட் செய்கிறது..
ஆனால், எஸ்.எஸ்.இ. ஒரு காலாண்டில் நிதிநிலை அறிக்கை தரவில்லை என்றாலும்கூட டீலிஸ்ட் செய்து வருகிறது. இதுபோன்ற வேறுபாடுகள் இல்லாமல், அனைத்துப் பங்குச் சந்தைகளும் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டத்தை செபி செயல் இயக்குநர்கள் உஷா நாராயணன், எஸ்.ரமணன் ஆகியோர் அண்மையில் கூட்டி விவாதித்திருக்கிறார்கள்'' என்றவரிடம், ''யெஸ் பேங்க் பற்றி அடிக்கடி செய்தி அடிபடுகிறதே!'' என்றோம்.

''ராபோபேங்க், யெஸ் பேங்கில் முதலீடு செய்திருந்த பங்குகளில் 1.26 கோடி பங்கு களை (3.6%) பங்கு ஒன்றுக்கு 357.03 ரூபாய்க்கு விற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 453 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது. அதே நேரத்தில் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் மற்றும் சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் (மொரீஷியஸ்) முறையே 25.21 லட்சம் மற்றும் 22 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றை ரூ.357 ரூபாய்க்கு வாங்கியுள்ளன.

மூடி ரேட்டிங் நிறுவனம் பல இந்திய வங்கிகளுக்கான தரக் குறியீட்டை குறைக்க இருப்பதால் நடுத்தர காலத்தில் வங்கிப் பங்குகளுக்குப் பாதிப்பு இருக்கவே செய்யும். அதே நேரத்தில், வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள யெஸ் பேங்க் மாதிரியான வங்கிகளின் பங்குகளும் கொஞ்சம் வீழ்ச்சி அடையவே செய்யும். அப்போது அதை வாங்கிச் சேர்ப்பது லாபகரமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்'' என்று பதில் சொல்லிவிட்டு, மீண்டும் ஐஸ்கிரீம் சாப்பிட்டார்.

''பங்குச் சந்தை ஜாம்பவான் ராகேஷ் என்ன செய்கிறார்?'' என்று இழுத்தோம்.

''ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தன்னுடைய ரிஸ்க்கை குறைப்பதற்கான நடவடிக்கை யில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருக்கிறார். இப்போதைக்கு 20 பங்குகளில் முதலீட்டை வைத்திருக்கு ஜுன்ஜுன்வாலா பங்குகளின் எண்ணிக்கையை ஏழாக குறைக்கப் போகிறாராம்!'' என்றவர், மிச்சமிருக்கும் ஐஸ்கிரீமையும் சாப்பிட்டு முடித்தார்.

''பொதுத்துறை நிறுவனங் களின் தலைமை சரியில்லை. அதில் நிறைய மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிறார்களே..!'' என்றோம்.

''உண்மைதான். அண்மைக் காலமாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவற்றின் மீது முதலீட்டாளர்கள் வைத்தி ருக்கும் நம்பிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசுதான். எம்.எம்.டி.சி, நேஷனல் ஃபெர்டிலைஸர்ஸ் உள்ளிட்ட 25 பொதுத்துறை நிறுவனங்கள் தலைமை அதிகாரிகள் இல்லாமலே இயங்கி வருகின்றன.

கேப்டன்கள் இருக்கும் கப்பல்களே திசை மாறி போகும்போது, கேப்டனே இல்லாத கப்பல்கள் எத்திசை யில் பயணிக்கும் என்று யாருக்கு தெரியும்? இந்த முக்கியமான விஷயத்தைகூட மத்திய அரசு சரியாகச் செய்யாததால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த இழிநிலை!'' என்று கொதித்தார்.

''சிக்கலில் இருக்கும் விமானத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா என மத்திய அமைச்சர் அஜித் சிங் முக்கிய தலைவர்களுடன் ஒரு ரவுண்ட் பேசிப் பார்த்தாராம். சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ''இப்போதைக்கு அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எடுக்க முடியும்'' என்று அறிவித்திருக்கிறார். இதுமாதிரி ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் பிழைத்துக் கொள்ளலாமே என்று ஏங்கித் தவித்த பல விமான நிறுவனங்கள் நொந்து நூலாகி இருக்கின்றன.

ஆனால், இதில் ஒரு வேடிக்கை, நம்மவர்கள் சீண்டுவதற்கே பயப்படும் கிங்ஃபிஷர் நிறுவனப் பங்குகளில் எஃப்.ஐ.ஐ.க்கள் தைரியமாக முதலீடு செய்கிறார்களாம்.

கடந்த காலாண்டில் இந் நிறுவனத்தில் எஃப்.ஐ.ஐ.களின் பங்கு 0.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எஃப்.ஐ.ஐ.க்களின் முதலீடு 1.3% உயர்ந்துள்ளது இன்னும் ஆச்சரியம்'' என்றவரிடம், ''அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும்?'' என்று கேட்டோம்.

''சந்தை நிலவரம் இன்னும் முற்றிலும் பாசிட்டிவ் மூடுக்குத் திரும்பவில்லை. ஸ்பெயின் பிரச்னை அந்நாட்டை முழுமையாக பாதிக்கவில்லை என்றாலும், அதன் வங்கிகளை பாதிக்கும் அளவுக்கு இருக்கிறது. அப்படி பாதிக்கும் பட்சத்தில் யூரோ மதிப்பு குறையும். டாலர் மதிப்பு உயரக்கூடும். தவிர, எஸ் அண்ட் பி அறிவிப்புக்குப் பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் யூரோ, டாலர் மதிப்பை கவனித்து முதலீடு செய்வது நல்லது'' என்றவர், ''இந்தாரும் ஷேர் டிப்ஸ்'' என்று ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார்.