பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

சென்ற வாரமும் மஞ்சள் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. ஈரோடு சந்தைக்கு தினம் 2,218 பைகள் விற்பனைக்கு வந்ததில் 1,009 பைகள் மட்டுமே வர்த்தகமானது. மொத்த வரத்தில் 40% மட்டுமே விற்பனையானது. சந்தைக்கு வரும் மஞ்சளை மசாலா நிறுவனங்கள் மட்டுமே சென்ற வாரத்தில் வாங்கின.

##~##
ஞ்சள் தொடர்ந்து 3,500 ரூபாய் என்ற நிலையி லேயே வர்த்தகமாகி வருகிறது. அடுத்து ஒரு மாதத்துக்கு விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தெரிவித்து உள்ளார்.

எனினும், ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ள ஏற்றுமதி புள்ளிகள் விலை இன்னும் கீழே போகாமல் தாக்குப் பிடித்து நிற்க வைத்துள் ளது. அதாவது, 2011 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 62,000 டன் மஞ்சளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே, கடந்த வருடத்தில் 37,400 டன்னாக இருந்தது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் 66% ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கமாடிட்டி

விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 3,890 - 4,100 ரூபாய்க்கு வர்த்தகமானது. சாதாரண மஞ்சள் 3,131-3,441 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்னும் ஒரு மாதத்துக்கு விலையில் முன்னேற்றம் ஏதும் இருக்காது என்பதால் கவனம் தேவை.

கமாடிட்டி


ஏலக்காய்!

ஏலக்காய் அதிகம் பயிரிடும் பகுதிகளில் கோடை மழை பொழிவதால் விளைச்சல் குறையும் என கூறப்படுகிறது. ஸ்பைசஸ் போர்டு தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஏலக்காய் 2011-2012 ஏப்ரல் முதல் ஜனவரி வரை 3,900 டன்னாக இருந்ததாக கூறியுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் ஏற்றுமதியின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்ற வாரத்தில் ஏலக்காய் விற்பனை செய்யும் முக்கிய சந்தைகளில் தின வரத்து 35 டன்னாக இருந்தது. இது முந்தைய வாரங்களைவிட குறை வாகும். ஏற்றுமதி தேவை மற்றும் பயிர் பாதிப்பு காரணமாக வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.

கமாடிட்டி


கச்சா எண்ணெய்!

அமெரிக்காவின் சாதகமற்ற பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காரணமாக டாலரின் மதிப்பு அதிகரிக்க, இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. எம்.சி.எக்ஸ். கச்சா எண்ணெய் 1.3%, நிமிக்ஸ் கச்சா எண்ணெய் 2.5%  ஏப்ரல் மூன்றாம் தேதியன்று குறைந்தது. 27 நாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை தொடர்ந்திருப்பதால் விலை இன்னும் மந்தநிலையிலேயே காணப்படுகிறது.

கமாடிட்டி

- பானுமதி அருணாசலம்

கமாடிட்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு