Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

பிரீமியம் ஸ்டோரி
திருமதி எஃப்.எம்.

டெல்லிக்கு ராஜான்னாலும் வீட்டில் மனைவியின் நிர்வாகத்தை அனுசரித்துப் போகும் கணவனாக இருந்தால் மட்டுமே குடும்பம் என்ற வண்டியை சிறப்பாக ஓட்ட முடியும் என சொல்கிறார் இந்த வார திருமதி எஃப்.எம். சரளாதேவி.

##~##
''எ
னக்கு சொந்த ஊரு பரமக்குடி . எம்.எஸ்.சி., எம்.எட். படிச்சிருக்கேன். என் கணவருக்குச் சொந்த ஊர் மதுரை. அவர் பி.பி.ஏ., எம்.ஏ. முடிச்சிருக்காரு. முதலில் தனியார் நிறுவனத்துல வேலைக்குப் போனாரு. அதன் பிறகு அரசாங்க வேலை வேணும்னு எஸ்.ஐ.-க்கு முயற்சி செஞ்சு தேர்வானாரு. இப்ப திருக்கோவிலூர்ல மதுவிலக்கு ஆய்வாளராகப் பணியில் இருக்காரு. எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணு மூணாம் வகுப்பும், பையன் ஒண்ணாம் வகுப்பும் படிக்கிறாங்க. நான் திருமணத்துக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பள்ளியின் கல்லூரி முதல்வரா இருந்தேன்.
திருமதி எஃப்.எம்.

திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்ததால வேலைக்குப் போக முடியலை. இப்ப குழந்தைங்க வளர்ந்துட்டாங்க; அதனால வேலைக்குப் போக முயற்சி செய்துட்டு இருக்கேன்.

என் கணவருக்கு மாதம் 34,000 ரூபாய் சம்பளம். பிடித்தம் போக, கையில் 23,000 ரூபாய் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பாரு. என் கணவர் காவல் துறையில் பணியாற்று வதால் குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள அவருக்கு நேரம் இருப்பதில்லை. அதனால முழு குடும்பப் பொறுப்பையும் என்னிடம் கொடுத்துட்டாரு. அவரு என் மேல வைத்திருக்கும் நம்பிக்கையைச் சரியா செய்து கொடுப்பதுதானே ஒரு குடும்பத் தலைவியான என்னோட பொறுப்பு.

நாங்க இப்ப விழுப்புரத்தில் குடியிருக்கும் வீடு வாடகை வீடுதான். அதுக்கு வாடகை 3,000 ரூபாய், எங்க ரெண்டு பேரோட போன் பில் 1,500 ரூபாய், எங்க ரெண்டு பேருக்கும் பெட்ரோல் செலவு 1,700 ரூபாய், மளிகை பொருட்கள் 3,000 ரூபாய், வாரத்துக்கு காய்கறிகள், பழங்கள் 300 ரூபாய், குழந்தைங்க ஆட்டோ கட்டணம் 1,000 ரூபாய், ஸ்கூல் பீஸ் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரெண்டு குழந்தை களுக்கும் 17,000 ரூபாய் என இதுதான் எங்களுடைய மாதச் செலவுகள். இது போக திடீர் மருத்துவச் செலவுகள், இதரச் செலவுகள் போக மீதமுள்ள பணம் சேமிப்புக்கு தான்.

எங்க நான்கு பேர் பெயரிலும் இன்ஷூரன்ஸ் போட்டிருக்கோம். எங்க இரண்டு குழந்தைங்க பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கியிருக்கோம். மாதா மாதம் ரெண்டு கணக்கிலும் தலா ஆயிரம் ரூபாய் போட்டு வர்றேன். இதை எந்தச் செலவுகள் வந்தாலும் நிறுத்துவது கிடையாது.

மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளின் சந்தோஷத்துக் காக ஓட்டலுக்குப் போவோம். ஏ.சி., வாஷிங் மெஷின் என எலெக்ட்ரானிக் பொருட்களை மாதத் தவணையில்தான் வாங்கினோம். ஒரு இ.எம்.ஐ. முடிந்த பிறகுதான் அடுத்த பொருள் வாங்குவேன். பெட்ரோல், போன் என எந்தச் செலவையும் எல்லை தாண்ட விடமாட்டேன். என் கணக்குக்கு மீறி செலவு ஆகிட்டா அது எதனாலன்னு பார்த்து குறைக்க முடிந்தால் குறைத்துக் கொள்வோம்.

திருமதி எஃப்.எம்.

பண விஷயங்களைப் பொறுத்தவரை, எப்பவுமே என் கணவர் என்னிடம் கலந்து ஆலோசித்துத்தான் செய்வாரு. அவருக்கு டிரெஸ் எடுக்கிறதா இருந்தாக்கூட அவரா வாங்க மாட்டாரு. என்னைதான் போகச் சொல்வாரு. அந்தளவுக்கு என் நிர்வாகத்து மேல அவருக்கு நம்பிக்கை.  

சீட்டு எனக்குப் பிடித்தமான விஷயம். சீட்டுப் போட்டு வந்த பணத்தோட கொஞ்சம் கடன் வாங்கி மதுரையில் இடம் ஒண்ணு வாங்கினோம்.  இப்ப அந்த கடனையும் கட்டி முடிச்சிட்டோம். அடுத்ததா, இந்த இடத்தில வீடு கட்ட ணும். கொஞ்சம் சேமிப்பு பணத்தோட, வீட்டுக் கடன் வாங்கி கட்டலாம்னு நினைக்கிறோம்.

ஆடம்பரத்துக்காக அதிக விலையில் டிரெஸ் வாங்கிப் போடுவது எனக்குப் பிடிக்காது. தேவைக்கு ஏத்த மாதிரி சிம்பிளாக வாங்கிப்போம். குழந்தைகளுக்கும் அது மாதிரிதான். இப்ப நாம கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு பழக்கமும்தானே குழந்தைங்க எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

திருமதி எஃப்.எம்.


மாத்தி யோசி!

திருமதி எஃப்.எம்.

வெற்றிகரமான தொழில் முனைவராக என்ன தகுதிகள் முக்கியமானவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பைர்ன் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து வருகிறார். புத்திசாலித்தனம், தொலைநோக்குப் பார்வை, கடும் உழைப்பு என ஒவ்வொரு தொழில் முனைவரிடமும் ஒரு குணநலம் இருக்கிறது. ஆனால், எல்லோரிடமும் இருக்கும் ஒரே குணம் என்ன தெரியுமா? எல்லோருமே மாத்தி யோசிப்பவர்கள்!

- அத்வைத்

ஏலச் சீட்டு போட்டுதான் ஒவ்வொரு பொருளும் வாங்கு வேன். நகைகள்கூட சீட்டு போட்டுதான் வாங்குவேன். நம்மளோட மாதச் செலவுகள் லிஸ்ட்ல சேமிப்பையும் கண்டிப்பாச் சேர்த்துக்கணும். செலவுகள் என்பது ஏதாவது ஒரு ரூபத்துல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமா வந்துக்கிட்டுதான் இருக்கும். அதனால சேமிப்பைக் கட்டாயமாக்கிட்டா, அந்தச் செலவுகளை கையிருப்புக்கு ஏத்த மாதிரி சமாளித்து விடலாம்'' என்று முடித்தார்.

வந்தால் வரவு போனால் செலவு என மனம் போன படி இல்லாமல், இப்படித்தான் திட்டமிட்டு வாழவேண்டும் என நாம் தீர்மானித்துக் கொண்டால் இன்று மட்டுமல்ல... எதிர்காலமும் பிரகாசிக்கும்!

-பானுமதி அருணாசலம்,
ரா.ராபின்மார்லர்.
படங்கள்: ரா.ராபின்மார்லர்

திருமதி எஃப்.எம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு