பிரீமியம் ஸ்டோரி
மை டியர் மணி!

''தீப்பெட்டி ஆபீஸில் கூலித் தொழிலாளியாக இருந்த என் அப்பா இறந்தபிறகு தாத்தா, பாட்டி அரவணைப்பில் வாழ்ந்ததால் சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியத்தை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. நான் சிறுகச் சிறுக சேமித்த தொகைதான் முப்பத்தி மூன்று வயதில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க எனக்கு ஆதாரமாக இருந்தது.  

##~##
ணத்தைக் கையாளுவதில் தாராளமும் இருக்கக் கூடாது, கட்டுபெட்டித்தனமும் இருக்கக் கூடாது. அவசியமான செலவினங்களை சீராக செய்துகொண்டே இருக்க வேண்டும். பணம் இல்லை என்று புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதோ அல்லது சோர்ந்து போவதோ நம் வளர்ச்சிக்கு நாமே போட்டுக் கொள்ளும் முட்டுக்கட்டை.

மாஃபாய் நிறுவனம் தொடங்கிய காலங்களில் என் பள்ளி, கல்லூரி நண்பர்கள் என்னை தாங்கினார்கள். தீப்பெட்டி நிறுவனங்களில் கூலி வேலை பார்க்கும் நண்பன் உட்பட பலரும் என் நிறுவனத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள். பகிர்ந்து கொள்ளும்போது நமது துயரங்கள் பாதியாகிவிடுகிறது என்பது பண விஷயத்தில் நூறு சதவிகிதம் உண்மை.

அது போலவே, பணம் நம்மைவிட்டு போய்விடக் கூடாது என்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கக் கூடாது. பூனைக்குட்டிகளை கைகளிலேயே வைத்திருந் தால் 'புடிகுட்டி’ ஆகிவிடும், இறக்கிவிட்டு வளர்க்க வேண்டும் என்பார்கள். பண விஷயங்களிலும் இந்த கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

என் நிறுவனத்தை நிலைநிறுத்த செலவிட்ட தொகைகள்தான் இன்று உலகம் முழுக்க 4,000 நிறுவனங்களை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. வருடத்துக்கு 20 சதவிகித டிவிடெண்ட் கொடுக்கிறது. எங்களை நம்பி பணம் போட்டவர்களுக்கு 33 மடங்கு லாபம் சம்பாதித்து தந்திருக்கிறது.

பணத்தைச் செலவழிக்கிற கவலை எனக்கில்லை. காரணம், என் மனைவியே ஒரு ஆடிட்டர் என்பதால் நயா பைசா தவறாது. ஆக, நான் பணத்துக்கு அதிக மதிப்பு தருகிறேன் என்றும் சொல்ல முடியாது; தரவில்லை என்றும் சொல்லவும் முடியாது. தரவேண்டிய அளவுக்கு மட்டுமே தருவதால் பணம் எனக்கொரு பிரச்னையே இல்லை!

- நீரை.மகேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு