பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக் ஹோம்ஸ்

''கத்திரி வெயிலோடு சென்னை குடிநீரின் கடுமையான பாதிப்பினால் வீட்டில்தான் இருக்கிறேன். எனவே, வீட்டிற்கு வந்தால் நலம்!'' என்று ஷேர்லக் நம்மை அழைக்க, நாம் அவர் வீட்டிற்கு போனபோது சோபாவில் சோர்வாக உட்கார்ந்திருந்தார். ''சந்தை இப்படி திடீரென சறுக்கிவிட்டதே!'' என்று ஆரம்பித்தோம்.

##~##
''எ
ல்லாம் பெரிய கைகளின் திருவிளையாடல் தான். 'ஜெனரல் ஆன்டி அவாய்டன்ஸ் ரூல்’ (நிகிகிஸி) தொடர்பான கொள்கை முடிவு திங்களன்று அறிவிக்கப்படலாம். இந்த கொள்கை முடிவு வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதகமில்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு விடுக்கப்பட்ட ஒரு சிறு எச்சரிக்கைதான் வெள்ளிக்கிழமை அன்று நிஃப்டி நூறு புள்ளிகள் இறங்கியது. இந்த கொள்கை முடிவால் வெளிநாட்டு முதலீட்டிற்கு பாதிப்பு வராத வகையில் பல மாற்றங்களை மத்திய அரசாங்கம் செய்துவிட்டதாகப் பேச்சு. ஒருவேளை அப்படி இல்லை என்றால் சந்தை இன்னும்கூட சரிய வாய்ப்புண்டு. எனவே, முதலீட்டாளர்கள் அன்றைக்கு சந்தையை கையைக் கட்டிக் கொண்டு கவனித்தாலே போதும்'' என்றவர், சந்தையில் உலவும் ஒரு எஸ்.எம்.எஸ். பற்றி யும் சொன்னார்.

''மே மாதம் டேஞ்சரஸ் மாதம் போல. கடந்த இரட்டைப்படை வருடங்களில் மே மாதத்தில் சந்தை கடுமையாக சரிந்திருக் கிறது.

2000 மே - 6.5% சரிவு; 2002 மே 7.5% சரிவு; 2004 மே 15.9% சரிவு; 2006 மே 14% சரிவு; 2008 மே 6.5% சரிவு; 2010 மே 3.5 சரிவு; 2012 மே ???'' - இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். சந்தையில் பலமாக உலவி வருகிறது. டெக்னிக்கல்களும் இதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. சந்தை மூன்று முறை சரிய முயற்சித்து தோற்று, நான்காவது முறை சரிய ஆரம்பித்தால் வீழ்ச்சி பெரிதாக இருக்கும் என்கிறார்கள். அதாவது, ஏற்றம், இறக்கம் எல்லாமே மூன்று முறைதான் நடக்கும். நான்காவது முறை வேறு மாதிரியாக இருக்கும் என்பது பொதுவான நியதி. இந்த மாதம் முடிந்தபிறகுதான் மொத்தம் எவ்வளவு குறையும் என்பதை சரியாக சொல்ல முடியும்'' என்று நம் வயிற்றில் புளியை கரைத்தார்.

''சந்தையின் ஜாம்பவான் ரிலையன்ஸ் மீது மத்திய அரசாங்கம் 6,600 கோடி ரூபாய் அபராதம் போட்டுவிட்டதே! என்ன காரணம்?'' என்று இழுத்தோம்.

''கே.ஜி. பேசினில் இயற்கை எரிவாயு உற்பத்தியைக் குறைத்த தற்காகவே இந்த அபராதம். இந்த மாதிரி ஒரு நடவடிக்கை எப்போதோ எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், முடிந்தவரை தள்ளிப்போட்டு இப்போது வேறு வழி இல்லாமல் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது காட்டும் லாபம் தொழிலினால் வந்ததல்ல. பணத்தை வைத்து விளையாடு வதால் வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் அதற்கு கிடைக்கும் லாபம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் சொல் கிறார்கள். இந்த களேபரத்தில் ரிலையன்ஸைவிட டி.சி.எஸ். நிறுவனம் மதிப்பு மிகுந்த நிறுவனமாக மாறியது இன்னொரு அடி!'' என்றவர், கொஞ்சம் சில்லென்ற தண்ணீரை குடித்துவிட்டு, ரிலையன்ஸ் பற்றி இன்னொரு செய்தியும் சொன்னார்.

''ரிலையன்ஸ் தனது பங்கு களை கடந்த சில மாதங் களாகவே பைபேக் செய்து வருகிறது. என்றாலும்கூட, பைபேக் செய்வதற்காக ஒதுக்கி இருக்கும் தொகையில் (சுமார் 10,000 கோடி ரூபாய்) ஐந்து சதவிகிதம் அளவுக்குக்கூட பணத்தைச் செலவழிக்க வில்லையாம். இதுவரை சுமார் 540 கோடி ரூபாய் மதிப்புள்ள 71.92 லட்சம் பங்குகளை வாங்கி இருக்கிறதாம். பங்கொன்றுக்கு சராசரியாக 748.80-க்கு வாங்கப் பட்டிருப்பதாக தகவல். இப்போது நெகட்டிவ் நியூஸ் வருவதால் இன்னும்கூட விலை குறையும். 650 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.''  

''பிர்லா குரூப்-க்கு என்ன ஆச்சு, ஃபியூச்சர் குரூப்பில் இருக்கும் பான்டலூனில் போய் 1,600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறார்களே! இதன் காரணமாகத்தான் அந்த பங்கு விலை குறைந்ததா?'' என்று கேட்டோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''உம் அனுமானம் சரிதான். ஆனால், நீண்ட காலத்தில் இது சரியான முடிவு என்றுதான் சொல்கிறார்கள். காரணம், பிர்லா குரூப்பிடம் லூயி பிலிப், வான் ஹூசேன், பீட்டர் இங்லேண்ட், ஆலன் சோலி போன்ற முக்கியமான பிராண்ட்கள் இருக்கிறது. ஆனால், பிர்லா குரூப்பிடம் கடைகள் இல்லை. இப்போது பான்டலூனில் முதலீடு செய்யும்போது, இந்தியா முழுக்க இருக்கும் பான்டலூன் கடைகளில் முதலீடு செய்ய முடியும். இந்த பங்கை சரியும்போது வாங்கிப் போட்டால் அடுத்த இரண்டு, மூன்று காலாண்டில் நல்ல லாபம் பார்க்கலாம்.

இப்போதைக்கு வாங்குவதற்குத் தோதான சில பங்குகளை சொல்கிறேன். பி.ஹெச்.இ.எல். பங்கு இப்போது 2008-ம் ஆண்டில் வர்த்தகமான விலையில் கிடைக்கிறது. பொதுவாக, கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் சரி இல்லை. மேலும், இந்நிறுவனத்தின் 5,000 கோடிக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கேன்சல் ஆகிவிட்டது. ஆனாலும் 190 ரூபாய் கீழே செல்லும்போது இந்த பங்கில் முதலீடு செய்யலாம். எதற்கும் அடிப்படையை கவனிக்காமல் வாங்காதீர்கள்.

ஷேர்லக் ஹோம்ஸ்

அது மட்டுமல்ல, சந்தை சரியும்பட்சத்தில் பார்மா பங்குகளையும் கொஞ்சம் கவனிக்கலாம். கடந்த வாரம் முழுக்க பார்மா பங்குகள் நன்றாக உயர்ந்து வந்திருக்கிறது. வலிமையான வருமானம் மற்றும் லாப வளர்ச்சியில் இருக்கும் கே.பி.ஐ.டி. கும்மின்ஸ் பங்குகள் நீண்ட காலத்தில் நல்ல லாபம் தர வாய்ப்பு இருக்கிறது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வாங்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்ததால், பெரும்பாலான சர்க்கரை நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவால் தென்னிந்தியா மற்றும் மகாராஷ்ட்ராவில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்துவரும்  ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நல்ல லாபம் அடைய வாய்ப்பிருக்கிறது'' என்றவரிடம், ''செபியின் சென்னை அலுவலகம் சொந்த கட்டடத்திற்கு மாறப் போகிறதாமே!'' என்று காதை கடித்தோம்.

''உண்மைதான். சென்னை ஆழ்வார்பேட்டை யில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த செபி அலுவலகம், இனி அண்ணா சாலையில் ஐ.ஓ.பி. தலைமை அலுவலகம் அருகே சொந்தக் கட்டடத்தில் இயங்கப் போகிறது. இதற்கான கிரஹப்பிரவேசம் திங்கட்கிழமை அன்று நடக்கிறது. இதனையட்டி செபியின் தலைவர் யூ.கே.சின்ஹா, என்.எஸ்.இ.யின் தலைவர் ரவி நாராயண் உள்பட பலர் சென்னைக்கு வருகிறார்கள். விழாவுக்கு போய்வந்தபிறகு அங்கு நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்த வாரம் சொல்கிறேன்'' என்றார்.

''அடுத்த ஜனாதிபதியாக பிரணாப் ஆகிவிட்டால், நிதி அமைச்சராக யார் வருவார்?'' என்று கேட்டோம்.

''தலால் ஸ்டீரிட் முழுக்க இந்த கேள்விதான். திட்ட கமிஷன் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, பிரதமரின் ஆலோசகர் சி.ரங்கராஜனின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது'' என்றவரிடம், அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்று கேட்டோம்.

''இன்று மார்க்கெட் இப்படித்தான் விளம்பரத்தில் போட்டிருக்கும் போன் நம்பருக்கு உம் வாசகர்களை போன் செய்யச் சொல்லும். மார்க்கெட் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். மார்க்கெட் வீக்காக இருப்பதால் இந்த வாரம் ஷேர் டிப்ஸ் கிடையாது'' என்றவருக்கு சலாம் அடித்துவிட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு