Published:Updated:

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

கவர் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக அதிக பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியிருக்கிறது கமாடிட்டி சந்தை. பங்குச் சந்தை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது எனில், கமாடிட்டி சந்தை குறுகிய காலத்தில் வாங்கி, விற்கிற மாதிரி டிரேடிங் செய்வதற்கு ஏற்றது. 'அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் 15 - 20% வருமானம் கிடைக்கிற மாதிரி சில முக்கிய கமாடிட்டிகளை எடுத்துச் சொல்ல முடியுமா?’ என எம்கே கம்மோடிரேட் (Emkay Commotrade) நிறுவனத் தின் சி.இ.ஓ. அசோக் மிட்டலிடம் கேட்டோம். நன்கு அலசி ஆராய்ந்து நான்கு கமாடிட்டிகளை மட்டும் சொன்னார். அந்த கமாடிட்டிகள் இனி:

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

பிஸிக்கல் தங்கம் மட்டுமல்ல, கமாடிட்டியிலும் அதிகமானவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது தங்கம்தான். கடந்த இரண்டு மாதங்களாக இன்டெர்நேஷனல் மார்க்கெட்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,600 முதல் 1,730 டாலர் என்ற விலையிலே வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து அதிகமாக ஏறவோ, இறங்கவோ செய்யாமல் ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது.

இந்தியாவில் இறக்குமதி வரியை அதிகரித்த தினாலும், அதிக விலை காரணமாகவும் தேவை கொஞ்சம் குறைந்துள்ளது. ஐரோப்பாவின் மத்திய வங்கி ஏப்ரல் 3-ம் தேதியன்று அடிப்படை வட்டி விகிதம் 1% என்பதில் எந்தவித மாற்றமும் இல்லையென கூறியுள்ளது. இதனால் கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. மேலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராகி, பொருளாதாரச் சூழ்நிலை இன்னும் திருப்திகரமாக இல்லையென தெரிவித்திருப் பதால் தங்கத்தின் விலையில் அதிக மாற்றங்கள் இருக்க நிறைய வாய்ப்புள்ளது.

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

வார வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,600 டாலருக்கு கீழே போனால், மீண்டும் 1,406 டாலருக்குப் போகும். விலை இறங்கி பிறகு மீண்டும் மேலே போக வாய்ப்புள்ளது என்பதால் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கினால், கணிசமான லாபம் பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பும் கைதேர்ந்த டிரேடர்கள் இந்த இறக்கத்தை பயன்படுத்தி, விற்று வாங்குவதன் (ஷார்ட் போவதன்) மூலம் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புண்டு.

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

தொழிற்சாலை பயன்பாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது அலுமினியம். கடந்த மார்ச் மாதத்தில் உலகளவில் அலுமினிய உற்பத்தி குறைந்துள்ளது. 2012 மார்ச் மாதத்தில் சராசரி தின உற்பத்தி சுமார் 1,18,900 டன் இருந்ததாக இன்டெர்நேஷனல் அலுமினியம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

சீனாவின் மெட்டல் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் வெளியிட் டுள்ள தகவல்படி, பிப்ரவரி மாதத்தைவிட மார்ச் மாதத்தில் 1.26 மில்லியன் டன் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதால் தற்போது ஒரு டன் 1,975 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. 1,277 டாலரிலிருந்து 2083 டாலருக்கு உயர்ந்து தற்போதைக்கு 1,975 டாலரில் நிலை பெற்றுள்ளது. இது வாங்குவதற்கான நல்ல தருணம். குறுகிய காலத்தில் 2,350 டாலருக் கும், நடுத்தர காலத்தில் 2,500 டாலருக்கும் விலை போக வாய்ப்பிருக்கிறது. எம்.சி.எக்ஸ். சந்தையில் தற்போதைய விலையில் வாங்கினால்,                    20 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.  

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

சமையலில் அதிகமாக பயன்படும் சென்னாவை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 2011-2012-ம் ஆண்டுக்கான சென்னா உற்பத்தி எஸ்ட்டிமேட் 7.4 மில்லியன் டன்னாக இருக்குமென அரசு கணித்திருந்தது. இது கடந்த வருடத்தின் 8.22 மில்லியன் டன்னைவிட கணிசமான குறைவாகும். அதிகளவில் டிமாண்ட் இருந்தும் குறைவான உற்பத்தி காரணமாக சப்ளை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள்.

மேலும், மே  மற்றும் ஜூன் மாதங்கள் திருமண சீஸன் என்பதால் சென்னாவிற்கான டிமாண்ட் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள். மில் முதலாளிகளை விட வர்த்தகர் களே லாப நோக்கில் தற்போதைய விலையில் அதிக அளவில்  சென்னாவை வாங்கி வைக்கிறார்கள். வரும் வாரங்களில் விலை இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம்.

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் சென்னா 3,999 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 3,700-3,800 ரூபாயில் நல்ல சப்போர்ட் இருப்பதால் அதையே வாங்கும் விலை இலக்காக வைத்துக் கொள்ள லாம்.  குறுகிய காலத்தில் 4,500 ரூபாயும், நீண்ட காலத்தில் 5,000 ரூபாய்க்கும் செல்ல வாய்ப்புள்ளது.

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...
கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

சமையலுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கும் மிளகாயின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. வரத்து அதிகமாக இருப்பதால் விலை இறக்கம் காண ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் மட்டுமின்றி, நாக்பூரிலும் வரத்து அதிகரித்திருப்பதால் ஒரு கிலோ மிளகாய் 35-40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த விலை இறக்கத்திலிருந்து வரும் மாதங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

மிளகாய் பயிரிட விவசாயிகள் அதிக செலவு செய்துள்ளதால் விலை அதிகரித்து விற்க வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. தவிர, மிளகாய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பகுதிகளில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் தற்போது குறைந்திருக்கும் விலை அதிகரிக்கக்கூடும்.

கலக்கலான லாபம் தரும் கமாடிட்டிகள்...

என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஜூன் மாத கான்ட்ராக்ட் 4,800 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. குறுகிய காலத்தில் இது 5,200 ரூபாய்க்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மேலும் சென்றால் 5,600-6,200 ரூபாய் வரை செல்லலாம்.''

நிபுணர் சொன்னதை நிதானமாக யோசித்து லாபம் சம்பாதிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.                                                                          

-தொகுப்பு : பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு