Published:Updated:

காலணியில் 2.5 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்!

காலணியில் 2.5 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்!
காலணியில் 2.5 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்!
காலணியில் 2.5 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்!

திருச்சி: காலணியில் வைத்து மலேசியாவில் இருந்து 2.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.

மலேசியாவில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தது.

அப்போது, வழக்கம் போல் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பயணி ஒருவரின் நடையை பார்த்து சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர் போட்டிருந்த காலணியை சோதனை செய்தனர்.

##~~##
அப்போது, காலணியில் 2.5 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.