பில்டர் ஏமாற்றுகிறார், என்ன செய்வது..?

நான் சமீபத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். அதில் வாசல் பக்கம் சேஃப்டிகேட், பின்புறம் கிரில் கதவு போன்ற பாதுகாப்புகளை ஃப்ளாட் வாங்கியவரே செய்து கொள்ள வேண்டும் என்கிறார் பில்டர். ஆறு ஃப்ளாட்டில் ஒன்றில்தான் கிரில் கேட் போட்டுக் கொடுத்திருக்கிறார். சேஃப்டிகேட் போட்டுத் தரவேண்டியது பில்டரின் வேலைதானே? கேட்டுக்குக் கூடவா ஒப்பந்தத்தில் எழுதி வாங்க வேண்டும்? தவிர, மொட்டை மாடியிலும் சேஃப்டி கேட், துணிகாயப் போட கம்பம் நட்டு, கம்பி போட்டுத் தருகிறேன் என்றவர் இப்போது முடியாது என்கிறார். இந்த சேவைக் குறைபாட்டை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா?

- விஜய் ஆனந்த், மடிப்பாக்கம்.

''இன்றைய தேதியில் ஃப்ளாட் வாங்குவது தொடர்பான பல ஆயிரம் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம், வாங்குபவர் - விற்பவருக்கு இடையே தெளிவான ஒப்பந்தம் இல்லாததே! கேட்டுக்குக் கூடவா ஒப்பந்தத்தில் எழுதி வாங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்... உங்கள் எண்ணம் தவறு! பில்டர் போட்டுத் தரும் கேட்டில் ஏற்கெனவே பெயின்ட் அடிக்கப்பட்டிருக்குமா, இல்லையா என்பது உள்பட அத்தனை விஷயங்களையும் ஒப்பந்தத்தில் எழுதித்தான் ஆக வேண்டும்.

ஃப்ளாட்டோ அல்லது வீடோ வாங்குபவர்கள் முதலில் அதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, பிறகுதான் பேச ஆரம்பிக்கிறார்கள். இந்த நினைப்பு வந்தபிறகு பல விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் பில்டர் செய்து கொடுத்துவிடுவார் என்று அவரை நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். பில்டரைப் பொறுத்தவரை, அவர் நல்ல லாபம் கண்டிருந்தால் கொஞ்சம் காசு பார்க்காமல் சில வசதிகளைச் செய்து கொடுப்பார். அவரே ஃப்ளாட் விற்காமல் நொந்து போயிருந்தால், வாய் வார்த்தையாக ஒப்புக் கொண்ட விஷயங்களைச் செய்து தராமல் டபாய்க்கலாமா என்றுதான் யோசிப்பார். எனவே, நீங்கள் அற்பம் என்று நினைக்கும் சின்ன விஷயத்தைக்கூட ஒப்பந் தத்தில் எழுதி கையெழுத்து போட்டுத் தரச் சொல்லுங்கள். உதாரணமாக, ஃப்ளாட்டில் எந்த மாதிரியான வயரை பில்டர் போட்டுத் தருவார் என்பது ஒப்பந்தத்தில் சொல்லப்பட வேண்டும். மொட்டையாக வயரிங் செய்து தரவேண்டும் என்று இருந்தால், காயலாங்கடையில் இத்துப் போன வயரைக்கூட போட்டுத்தர வாய்ப்புண்டு.

தவிர, எதிர்காலத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்தால், உங்களிடம் உள்ள ஒப்பந்தம்தான் பேசும். ஒப்பந்தத்தில் குறிப்பிடப் படாத ஒரு விஷயம் குறித்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அது நிற்கவும் நிற்காது.

'சார், பில்டர் எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறேங்கிறார். ஆனா, அதை ஒப்பந்தத்துல எழுதிக் குடுக்க மாட்டேன்னு சொல்றார்’ என்றும் என்னிடம் சிலர் சொல்கிறார்கள். எல்லாம் செய்து கொடுக்கிறேன் என்கிறவருக்கு அதை ஒப்பந்தத்தில் எழுதிக் கையெழுத்து போட்டுத் தர என்ன பயம்? நாளைக்கு நிலைமை வேறு மாதிரியானால் அதைச் சமாளிக்கத்தானே இன்றைக்கே வழி தேடுகிறார் அந்த பில்டர். நாம் கேட்கும் அத்தனை விஷயங்களையும் பில்டர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், ஒப்புக் கொள்ளும் விஷயங்களைத்தானே ஒப்பந்தத்தில் குறிக்கச் சொல்கிறோம். எனவே, இதை ஏற்றுக் கொள்ளும் பில்டர்களிடம் மட்டுமே ஃப்ளாட்டை வாங்குங்கள். அப்படி வாங்கினால்தான் எதிர்காலத்திலும் உங்களுக்குப் பிரச்னை வராது.''

சென்னையில் நாங்கள் ஒரு ஃப்ளாட் வாங்கினோம். பில்டர் 'அப்ரூவ்ட் பிளான்’ படி கட்டடம் கட்டாமல் மாற்றிக் கட்டியுள்ளார். 6 ஃப்ளாட்டுக்கு 4 கார் பார்க்கிங்தான் உள்ளது. இது சரியா?

எஸ்.பத்மநாபன், சென்னை-42.

''நீங்கள் சொல்கிற தகவல் சரியானதுதானா என்பதை மீண்டும் சரி பாருங்கள். பில்டர் உங்களிடம் காட்டிய பிளானின் பிரதி உங்களிடம் இருக்கிறதா? உங்களுக்கென தனியாக ஒரு கார் பார்க்கிங் கொடுக்கிறேன் என்பதை ஒப்பந்தத்தில் எழுதித் தந்திருக் கிறாரா? 'ஆம்’ எனில் நீங்கள் தாராளமாக வழக்குத் தொடரலாம். உங்களுக்கான உரிமையை கேட்டுப் பெறலாம். இல்லை என்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரப்பதிவு முடிந்து விட்டதால் இப்போது பணத்தைக் கூட திரும்ப வாங்க முடியாது.''

என் செல்போனிலிலிருந்து என்னைக் கேட்காமலே

15 பிடித்தம் செய்திருக்கிறது முன்னணி செல்போன் நிறுவனம். என் சம்மதம் இல்லாமலேயே, ஒரு குறிப்பிட்ட பாடலை உங்களுக்காக டவுன் லோடு செய்திருக்கிறோம் என்று எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். இதற்கு என்ன நிவாரணம்? யாரிடம் கேட்பது?

சு.கு.மணியன், தூத்துக்குடி.

''உங்கள் அனுமதி இல்லாமலே செல்போன் நிறுவனம் உங்களுக்காக ஒரு பாட்டை டவுன்லோடு கொடுத்திருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இப்போதைக்கு ஒரு பாட்டு வேண்டும் என்பதற்கு இரண்டு பட்டனை அழுத்தித் தெரிவித்தால் மட்டுமே கிடைக்கிறது. காரணம், நீங்கள்தான் அந்தப் பாட்டை வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்பதை ஒன்றுக்கு இருமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. செல்போன் நிறுவனங்கள் இத்தனை விவரமாக இருக்கும் போது உங்களுக்கு எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை. செல்போன் நிறுவனங்கள் இது மாதிரியான விஷயங்களில்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்பதால் முடிந்தவரை செல்போனில் பாட்டு போன்ற சமாசாரங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பதே உத்தமம்.''