Published:Updated:

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

Published:Updated:
கமாடிட்டி!

பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதித்த பின் அது எப்படி வர்த்தகமாகிறது? இனி பருத்தியை வாங்கலாமா? என்பதைச் சொல்கிறார் அம்பாலால் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் ரிசர்ச் மேனேஜர் விஜயபாபு.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ப
ருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி தரும் முன் என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் 20 கிலோ கபாஸ் 750 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், அனுமதி தந்தபிறகு 1,112 ரூபாய்க்கு வர்த்தகமானது. தற்போது 990 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. பருத்தி ஏற்றுமதியை தடை செய்வது, பிறகு அனுமதிப்பது என மாற்றி மாற்றி செய்யும்போது விவசாயிகளைவிட வர்த்தகர் களே அதிகம் பயனடைய வாய்ப்புண்டு.

இவ்வருடம் இந்தியாவின் பருத்திக்கான தேவை 367 லட்சம் பேல்களாக (ஒரு பேல் என்பது 170 கிலோ) இருக்கிறது. ஆனால், சப்ளை 392 லட்சம் பேல்களாக இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த வருடத் தில் பருத்தி விலை குறைவாகப் போனதால் இந்தாண்டில் பருத்தியை பயிரிட விவசாயிகள் விரும்ப வில்லை. இதனால் 10% விளைச்சல் குறையும் எனவும் சொல்லப் படுகிறது.

கமாடிட்டி!

சர்வதேச சந்தை யில் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. இன்னும் ஒன்றிரண்டு வாரங் களுக்கு 990 ரூபாயிலிருந்து பத்து ரூபாய் அதிகரித்தோ அல்லது குறைந்தோதான் வர்த்தகமாகும்."

மஞ்சள்!

கமாடிட்டி!

கடந்த சில மாதங்களாக விலை குறைந்து வந்த மஞ்சள் கடந்த இரண்டு வாரங்களாக விலை அதிகரித்து வருகிறது. சென்ற வருடத்தில் அதிக விலை போனதால் மஞ்சளை அதிகளவில் விளைவித்த விவசாயிகள், இந்த வருடம் விலை குறைந்ததைத் தொடர்ந்து மற்ற பயிர்களுக்கு மாறினார்கள். இதனால்     மஞ்சள் வரத்து குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு சந்தையில் சென்ற வாரத்தில் ஒரு நாளைக்கு 13,500 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வந்தன. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் 12,000 முதல் 15,000 பைகள் வந்தன. இப்போது அது 6,000-8,000 பைகளாக குறைந்துவிட்டன. ஏற்றுமதி காரணத்திற்காக வர்த்தகர்கள் தரமான மஞ்சளுக்கு நல்ல விலை கொடுக்க தயாராக இருந்தனர்.

வரும் வாரத்தில் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் மே மாத கான்ட்ராக்ட் 3,850 ரூபாய்க்கு மே 18-ம் தேதி மாலை வர்த்தகமானது.

கமாடிட்டி!

மிளகு!

கமாடிட்டி!

கடந்த வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தக மானது. மற்ற நாட்டு மிளகுடன் இந்திய மிளகை ஒப்பிடும்போது, இந்திய மிளகின் விலை அதிகமாக இருந்ததால், ஏற்றுமதிக்கு விலை குறைந்த மிளகையே வர்த்தகர்கள் நாடினர். இதுமட்டுமில்லாமல் மிளகை அதிகளவில் விளைவிக்கும் வியட்நாம் நாட்டிலிருந்து அதிகப்படியான வரத்து காணப்படுகிறது. கடந்தாண்டு 1.10 லட்சம் டன்னாக இருந்த விளைச்சல் 1.40 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டன் இந்திய மிளகு 7,425 டாலருக்கு சென்ற வாரத்தில் விலை போனது.

சில விவசாய விளை பொருட்களுக்கு கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகள் புதிய விதிமுறைகள் விதித்துள்ளதால், மிளகை வாங்கும் மற்றும் விற்கும் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டவில்லை. சிறிய விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்து உடனே பணத்தை எடுக்க விரும்பு கிறார்கள். வட இந்தியாவில் தேவை இருந்தாலும், மார்க்கெட் சென்டிமென்ட் காரணமாக வரும் வாரத்திலும் விலை குறைய வாய்ப்புண்டு.  என்.சி.டி.இ.எக்ஸ். ஒரு குவிண்டால் மிளகு மே மாத கான்ட்ராக்ட் 38,100 ரூபாய்க்கு மே 18-ம் தேதி மாலை வர்த்தகமானது.

கமாடிட்டி!

கச்சா எண்ணெய்!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமானது. என்பிரிட்ஜ் மற்றும் என்டர்பிரைஸ் புராடக்ட் பார்ட்னர்ஸ் ஆகிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணிகளை முடிக்கவுள்ளது. இதனால் 500 மைல் பைப்லைன் மூலம் 1,50,000 பேரல் கச்சா எண்ணெய் பெற முடியும். இதனால் 2013-ம் வருடம் முதல் காலாண்டில் 4,00,000 பேரல் கச்சா எண்ணெய் கூடுதலாகக் கிடைக்கும். சர்வதேச நிலவரப்படி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் விலை வரும் வாரத்தில் குறையும். ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் உள்நாட்டிலும் விலை குறைந்தே வர்த்தகமாகும். எம்.சி.எக்ஸ். ஒரு பேரல் கச்சா எண்ணெய் மே மாத கான்ட்ராக்ட் 5,048 ரூபாய்க்கு மே 18-ம் தேதி மாலை வர்த்தகமானது.

-பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism