Published:Updated:

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

Published:Updated:
10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

ஈடு இணையற்ற இ.எஸ்.ஐ!

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கு தங்களது சம்பளத்தில் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியுமே தவிர, அது எதற்காகப் பிடிக்கிறார்கள், அதனால் என்ன பயன் என்பதெல்லாம் தெரியாது. இ.எஸ்.ஐ. மூலம் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!

இ.எஸ்.ஐ.!

• 15,000 ரூபாய் மற்றும் அதற்குள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு வருக்கும் மொத்த சம்பளத்தில் 1.75% இ.எஸ்.ஐ-யாக பிடித்தம் செய்யப்படுகிறது. பணிபுரியும் நிறுவனம் தன் பங்காக 4.75% தொகையை அந்த ஊழியரின் இ.எஸ்.ஐ. கணக்கில் கட்டும்.

பயன்கள்!

• உடல்நலக் குறைவால் விடுப்பு எடுக்கும்போது நாள் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 70% தொகை கிடைக்கும் (மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டும்).  ஓராண்டில் அதிகபட்சம் 91 நாள் எடுக்கும் மருத்துவ விடுப்பிற்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். அதற்குமேல் எடுக்கப்படும் விடுமுறைக்கு உதவித் தொகை கிடைக்க மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.  

• பெண் ஊழியர்களுக்கு பிரசவ காலங்களில் எடுத்துக் கொள்ளும் விடுமுறைக்கு முழு அடிப்படைச் சம்பளமும் அப்படியே கிடைக்கும்.

##~##
ஊழியர் ஒருவர் இறக்கும்பட்சத்தில், பணியாளர் இறந்துவிட்டார் என நிறுவனம் சான்றிதழ் தந்தால், 10,000 ரூபாய் அந்த ஊழியரின் குடும்பத்துக்கு கிடைக்கும். இத்தொகையை அவரது நாமினி, அருகில் இருக்கும் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் இ.எஸ்.ஐ. கட்டியிருப்பது அவசியம்.

• பணி நேரத்திலோ, பணிக்காக வெளியே செல்லும்போதோ விபத்து ஏற்பட்டு, செயல்பட முடியாமல் போனால் இ.எஸ்.ஐ. உதவித் தொகை மாதம்தோறும் கிடைக்கும். பணி நேரத்தில் மரணம் ஏற்பட்டால் மாதந்தோறும் சுமார் 1,500 ரூபாய் கிடைக்கும். இ.எஸ்.ஐ. பிரிவு மேலாளர் பாதிக்கப்பட்ட பணியாளர் வேலை செய்த  நிறுவனத்துக்கு வந்து அவர் பற்றிய முழு விவரங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உதவித் தொகை கிடைக்கும்.  

• வேலை செய்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டால் இ.எஸ்.ஐ. மாத உதவித் தொகை கிடைக்கும்.

• ஏற்கெனவே உடலில் குறைபாடு உள்ளவர்கள் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலும் இ.எஸ்.ஐ. வரைமுறைக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் இ.எஸ்.ஐ. சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும்.

இ.எஸ்.ஐ. வசதி உள்ளவர்கள்  இனி இந்தியா முழுக்க உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.

- செ.கார்த்திகேயன்

10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism