Published:Updated:

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

கேள்வி-பதில்

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

கேள்வி-பதில்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

ரிலையன்ஸ் குரோத், ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி, ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, சுந்தரம் ஷார்ட் டேர்ம் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளேன். நீண்ட கால முதலீடாக இதை தொடரலாமா?

- செந்தில்முருகன், சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
சுவாமிநாதன்,
ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ஸ்.

''இந்த முதலீட்டை அப்படியே தொடருவதைவிட சில மாற்றங்களைச் செய்தால் நீண்ட கால நோக்கில் மேலும் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி மற்றும் டாப் 200 ஃபண்டுகளில் எந்த மாற்றமும் வேண்டாம். ரிலையன்ஸ் குரோத் மிட்கேப் திட்டத்தில் உள்ள  முதலீட்டை ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் - மல்டிகேப் திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளவும். நீண்ட கால முதலீடு என்கிறபோது சுந்தரம் ஷார்ட் டேர்ம் - இன்கம் திட்டத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் அந்த முதலீட்டை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டிற்கு மாற்றிக் கொள்ளவும்''.

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

பி.ஏ.சி.எல். நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், ஆறு வருடங்களில் முதலீட்டை இரண்டு மடங்காக திருப்பித் தருவதாகச் சொல்கிறார்கள். இந்நிறுவனத்தை நம்பி முதலீடு செய்யலாமா?

கவிதா ராஜேந்திரன், சிதம்பரம்.

கே.ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''கம்பெனி பதிவாளரிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அல்லது பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதே நம் பணத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆறு வருடங்களில் முதலீட்டை இரட்டிப்பாகத் தருவது என்றால், சுமார் 12 சதவிகித வட்டி கொடுக்கிறார்கள். எதன் அடிப்படையில் இப்படி அதிக வட்டி கொடுக்கப்படுகிறது, அதற்கான ஆஃபர் டாக்குமென்ட் போன்றவற்றை வாங்கிப் படித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். மேலோட்டமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். இந்நிறுவனத்தின் இணையதளத்தில் நிறுவனப் பதிவு குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.''

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

2001-ல் ரூ.2.5 லட்சத்துக்கு 500 சதுர அடியில் வீடு கட்டினேன். தற்போது அந்த வீட்டுக்கு கட்டட இன்ஷூரன்ஸ் கவரேஜ் எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம்?

ச.அருண்குமார், தஞ்சாவூர்.

ஜி.ரவீந்திரன், உதவி மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்.

''கட்டுமானச் செலவு எவ்வளவு ஆனது என்கிற அடிப்படையில் கட்டட இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கட்டடம் கட்டி எத்தனை வருடம் ஆகிறது, அதன் தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதன் அடிப்படையில் கட்டட இன்ஷூரன்ஸ் பாலிசிகள் கொடுக்கப்படுகின்றன. சந்தை மதிப்பின் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய்க்கு 40 ரூபாய் பிரீமியத் தொகை கட்ட வேண்டியிருக்கும். பிரீமியத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். இதன் மூலம் புயல், மழை போன்ற இயற்கை இடர்களால் கட்டடத் துக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு கிளைம் செய்து கொள்ளலாம். இந்த பாலிசியோடு சேர்த்து பூகம்ப பாதிப்புக்கு என்று ரைடர் பாலிசியும் எடுத்துக் கொள்ளலாம்.''

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

இணைந்து இருந்த காலத்தில் வாங்கிய சொத்தில் விவாகரத்து பெற்ற மனைவி உரிமை கோர முடியுமா?  

ஒரு வாசகர், சென்னை.

ஜெ.ஃபிராங்க்ளின், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''விவாகரத்து பெற்றபிறகு அவர் உங்களது மனைவி என்கிற அந்தஸ்தை இழந்துவிடுகிறார். எனவே, சேர்ந்து வாழ்ந்த காலத்தில் வாங்கிய சொத்து என்றாலும், விவாகரத்து பெற்றபிறகு மனைவி என்கிற அடிப்படையில் உங்கள் சொத்து மீது அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது''.  

இன்ஷூரன்ஸ்: பழைய வீட்டுக்கு எவ்வளவு?

எனது வயது 54, தற்போதைய வீட்டுச் செலவு 25 ஆயிரம். 10 வருடம் கழித்து இதே செலவுகளைச் செய்வதற்கு நான் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

பொன்னையா, மதுரை.

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர்.

''தற்போதைய சூழலில் உங்களது மாதத் தேவை 25 ஆயிரம் ரூபாய் எனில், அடுத்த 10 வருடங்களில் பணவீக்க விகிதம் 8% சதவிகிதம் என கணக்கிட்டால் மாதத்துக்கு                    54 ஆயிரம் தேவைப்படும். பத்து வருடங்களுக்குப் பிறகு மாதாமாதம் இத்தொகை கிடைக்க, தற்போது மாதம் 36 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை, நல்ல வருமானம் கொடுக்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஐந்தில் எஸ்.ஐ.பி. முறையில் பிரித்து முதலீடு செய்யவும். இவற்றிலிருந்து 15 சதவிகித வருமானம் கிடைக்கும் என்றால், உங்களது முதலீடு பத்து வருடங்களில் சுமார் 1 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும். அதை வைப்பு நிதித் திட்டங்களுக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் ரிஸ்கை குறைக்க முடியும். இதற்கு 8% வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் மாதத்துக்கு சராசரியாக 66 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். உங்களது செலவு போக, மீதி தொகை 12 ஆயிரத்தைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்பட்சத்தில், அடுத்த 5 வருடங்களுக்கான பணவீக்க விகிதத்தையும் சமாளிக்கலாம்''.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism