Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

Published:Updated:

வாராவாரம் சிக்கனத் தில் சிகரத்தைத் தொடும் திருமதிகளின் திறமையான நிர்வாகத்தைப் பற்றி பார்த்து வருகிறோம். இவர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக தங்களது வீட்டை நிர்வாகம் செய்கிறார்கள். இந்த வாரம் திருமதி எஃப்.எம். பகுதிக்காக நாம் சந்தித்தது நெய்வேலி தரணி துளசிநாதன். தனது வீட்டு நிர்வாகத்தைப் பற்றி இங்கு மனம் திறந்து சொல்கிறார் தரணி துளசிநாதன்.

திருமதி எஃப்.எம்.

''எனக்கும் என் கணவர் துளசிநாதனுக்கும் சொந்த ஊரு சென்னைதான். அவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துல தலைமை டெக்னீஷி யனா வேலை பார்க்குறார். என் கணவர் இன்ஜினீயர். நான் புவியியல்ல இளங்கலைப் பட்டம் படிச்சிருக்கேன். எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைங்க. மூத்த மகள் நந்தினி தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடிச்சிருக்கா. அடுத்து மேல் படிப்பு படிக்கலாம்னு அவளுக்கு ஆசை இருக்கு. இரண்டாவது பொண்ணு அஸ்வினி,          பன்னிரண்டாவது படிக்கிறா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் கணவர் நிலக்கரி சுரங்கத் துல வேலை பார்க்குறதுனால அரசாங்கக் குடியிருப்புலதான் வசிக்கிறோம். இதுவரைக்கும் கடன்ங்கிற வார்த்தையை என் குடும்பத்துல யாரையும் நான் உச்சரிக்கவிட்டதில்லை. என்ன கஷ்டம் வந்தாலும் என் சொந்தகாரங்ககிட்ட கடன் வாங்கவே கூடாது என்ற பாலிசியோட இருக்கேன்.

நான் படிச்சது புவியியல் னாலும் அபாகஸ்ல எனக்கு ஆர்வம் அதிகம். அதனால அதைக் கற்றுக் கொண்டு வீட்டிலேயே பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கி றேன். அது மட்டுமில்லாம வாரத்துல இரண்டு நாள் எம்பிராய்டரிங் கிளாஸ் நடத்துறேன். எங்கிட்ட எம்பிராய்டரி கற்றுக் கொண்ட நிறைய பொண்ணுங்க இப்ப சுயதொழிலாவே செய்யுறாங்க. எனக்கு இதன் மூலம் மாத வருமானம் 15,000 வரைக்கும் கிடைக்கிறது.

##~##
என்னோட வருமானமே பெரும்பாலும் வீட்டுச் செலவுக்குப் போதும்! என்னோட வருமானத்துல சொந்தமா ஒரு ஸ்கூட்டி வாங்கினேன். அது எனது பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்குப் பயன்படுது.

எந்த ஒரு பொருள் வாங்குவது என்றாலும், முதலில் அதன் விலையை விசாரித்துவிட்டு அன்றிலிருந்து அந்த பொருள் வாங்குவதற்குத் தேவையான தொகையைச் சேமிக்கத் தொடங்குவேன். அப்படி அந்த பொருள் வாங்குவதற்குத் தேவையான பணம் சேர்ந்த பிறகுதான் பொருளை வாங்குவேன். கடன் வாங்கியோ அல்லது இ.எம்.ஐ. மூலமாகவோ வாங்குவது எனக்கு பிடிக்காது. கண்ணுக்குத் தெரியாமல் போகும் வட்டிப் பணத்துக்கு கூடுதலாக இன்னொரு பொருள் வாங்கலாம் என்பது என் கணக்கு.

எங்க கல்யாணத்தின்போது அவருக்குச் சம்பளம் வெறும் 1,200 ரூபாய்தான். அரசாங்கக் குடியிருப்புங்கிறதுனால வாடகை பற்றிய கவலை இல்லை. இருந்தாலும், வருங்காலத்துல அவருடைய ஓய்வுக்கு அப்புறம் எங்களுக்குச் சொந்தமா வீடு தேவைப்படும்ங்கிறதுனால சென்னையில எங்களுக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு வீட்டை கட்ட முடிவு செஞ்சோம். அதற்காக எந்தக் கடனும், வங்கி லோனும் போடாமல் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் கட்டினோம். இது முழுக்க முழுக்க எங்களோட சேமிப்பில் கட்டின வீடு.

திருமதி எஃப்.எம்.

அப்புறம் என்னோட சேமிப்பு எல்லாமே வங்கியைவிட தபால் நிலைய ஆர்.டி.-யிலதான் போடுவேன். வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற தபால் நிலையத்துல எளிதாகப் போய் வரமுடிஞ்சது; வங்கின்னா, கூட்டத்துல முண்டியடிச்சு கஷ்டப்பட வேண்டியிருக்கும். தவிர, வரிப் பிரச்னையும் இல்லை. அப்படியே வங்கியில பணம் போட்டாலும் வட்டியை எக்காரணம் கொண்டும் எடுக்க மாட்டேன். அதை மொத்தமா சேர்த்து வைத்து அதிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைக்கு ஏதாவது உருப்படியான பொருள் அல்லது நிலமாக வாங்குவேன்.

அப்புறம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மாதம் ஒரு முறை வாங்கினாலே லாபம் வரும். இதுவே வருடத்துக்கு ஒருமுறை வாங்கினால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் வருடத்திற்கு ஒருமுறைதான் வாங்குறேன். வருடம் பூராவும் தேவையான மளிகைகளை வாங்க அதிகபட்சமாக 24,000 ரூபாய் ஆகும். அதுக்கு அப்புறம் ஒரு வருடத்திற்கு மளிகை பில் தொந்தரவு எனக்கு இல்லை.

திருமதி எஃப்.எம்.

இவ்வளவு பொருளை வாங்குறியே, எப்படி பராமரிக் கிறேன்னு என்னைப் பார்த்து பலரும் ஆச்சரியமா கேப்பாங்க. எனக்கு அது ஒரு பெரிய விஷயமாவே படலை. கொஞ்சம் அக்கறை எடுத்துச்                           செஞ்சா, யார் வேணுமின்னாலும் வாங்குகிற பொருள் எல்லாத் தையும் நல்லபடியாவே பயன் படுத்திக்கலாம்.

திருமதி எஃப்.எம்.

குடும்பத்தின் முக்கியச் செலவில் அடுத்தது வீட்டுக்குத் தேவையான காய்கறிகள். வீட்டிலேயே தோட்டம் போட்டி ருக்கேன். அதிலிருந்துதான் பெரும்பாலும் சமையலுக்கு காய்கறிகள் பயன்படுத்துவேன். இப்போது வருகிற காய்கறிகள்ல அதிகளவு உரம் சேர்ப்பதால் உடம்புக்கு கெடுதல் என்று வீட்டில் காய்கறி தோட்டம் போட்டேன். ஆனால், விற்கும் விலைவாசியில உடம்புக்கு மட்டுமல்ல, பர்ஸுக்கும் பங்கம் வராம இருக்குது. அவரோட பெயரில் இன்ஷூரன்ஸ் வருடத்துக்கு 3,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறோம்.

தங்க நகைன்னு பார்த்தா, என் இரண்டு பொண்ணுங்களுக்கும் நகைப் பிடிக்காது. முன்பு விலை குறைவாக விற்பனையான நேரத்தில் பணம் சேமித்து இருபது பவுன் வாங்கினேன். ஆனா என் விருப்பம் எல்லாம் பிளாட் வாங்கி போடணும்ங்கிறதுதான். ஏனெனில், பிளாட்ல முதலீடு பண்ணுனாதான் நல்ல லாபம் வரும்ங்கறது நான் பார்த்த அனுபவம். அதனால் என் விருப்பத்துக்கு இணங்க என் கணவர் சென்னையில பிளாட் வாங்க சம்மதிச்சாரு. அதற்காக சேமித்து இப்போ இரண்டு பிளாட் வாங்கியிருக்கோம். இது என் பொண்ணுங்க திருமணத்துக்கு உதவும்.

கார் வாங்குறதுக்கான வசதி எங்களுக்கு இப்பவே இருந்தாலும் நான் அதை செய்ய விரும்பலை. நம்மால அது இல்லாமலே சௌக்கியமா இருக்க முடியும் என்கிறபோது அதை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? என் கணவர் 2019-ல் ரிட்டையர்ட் ஆனதற்குப்பிறகு கார் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போதைக்கு கார் வாங்குவது அநாவசியமான செலவுதான்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, அனுபவிச்சு செய்ததால எனக்கு இதுவரை எந்த பணக் கஷ்டமும் இல்லை!'' என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் தரணி துளசிநாதன்.

-பானுமதி அருணாசலம், ரா.ராபின்மார்லர்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

திருமதி எஃப்.எம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism