Published:Updated:

மை டியர் மணி!

மை டியர் மணி!

மை டியர் மணி!

மை டியர் மணி!

Published:Updated:
மை டியர் மணி!

பணம் புழக்கத்திற்கு வந்தபோதே சேமிப்பு பழக்கத்திற்கு வந்தது. பணம் பூஜிக்கத் தகுந்ததுமல்ல; தூஷிக்கத் தகுந்ததுமல்ல. ஆனால், நேசிக்கத் தகுந்தது. துதிக்கத் தகுந்ததுமல்ல; மிதிக்கத் தகுந்ததுமல்ல. ஆனால், மதிக்கத் தகுந்ததுதான்.  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சி
ன்ன வயதிலிருந்தே தேவையற்ற செலவுகளைக் குறைப்பதில் தெளிவாக இருந்தேன். அதிகப் பணம் எப்போதும் என் இலக்கு அல்ல. இயந்திரத்தின் முன் அமர்ந்து அதிக பணத்திற்காக என்னால் வேலை பார்க்க முடியாது. மக்களிடம் பணியாற்றவே விரும்பினேன்.

தொடக்கத்தில் அடிப்படைச் செலவுகளுக்கான அளவுதான் எங்கள் ஊதியம் இருந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் கணிசமான ஊதிய உயர்வு. இச்சூழலில் நேர்மையாக நடந்து தாராளமாக சேமிக்கவும் இயலும். எந்தக் கட்டத்திலும் பணத் தட்டுப்பாட்டால் நான் தடுமாறியதில்லை. காரணம், சிக்கனம். பணம் அவசியம். பிடித்த புத்தகம் படிக்க, இனிய இசையை ரசிக்க, நண்பர்களோடு உணவருந்த, இல்லத்தோடு சுற்றுலாச் செல்ல...இப்படி எல்லாவற்றுக்கும் திரவியம் தேவை. ஆனால், அதுவே நோக்கமாக இருக்கக்கூடாது.

எதிர்பாராத செலவுகள் அடங்கியதே வாழ்க்கை. பணமும், மழையும் எல்லா நேரங்களிலும் வருவதில்லை. மழைநீர் சேகரிப்பை போலவே பணம், காசு சேமிப்பும் கடைப்பிடிக்க வேண்டிய  காப்பீடு. நெறியோடு சேமிப்பவனுக்கு நேர்மை பிறழ வேண்டிய நிர்ப்பந்தம் நேர்வதில்லை. அவன் யாருக்கும் துண்டுச்சீட்டுக் கொடுத்து அடிமையாக வேண்டிய அவசியமும் இல்லை. தீய பழக்கங்களில் தோய்ந்து விடாமல் தற்காத்துக் கொள்பவன் அவசரத்திற்காக அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய இழிநிலை ஏற்படுவதில்லை.  

நான் அதிகம் செலவிடுவது புத்தகங்களுக் காகத்தான். அவையே என் மூளையின் முதலீடுகள். எளிமையான வாழ்க்கை, இயல்பான உணவு, அவா இல்லா பக்குவம் ஆகியவற்றால் பணக்காரனாக இல்லாவிட்டாலும் மனக்காரனாக வாழ்கிறேன். பெரிய இல்லத்தைவிட பரந்த உள்ளமே உயர்ந்த செல்வம் என்பதை அறிவேன். அதிகம் பணம் இருப்பவனைவிட குறைவான தேவைகள் இருப்பவனே செல்வந்தன் என்பது என் கொள்கை.

நீரை.மகேந்திரன்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism