ஒரே தேவை, நிறைய பொறுமை!

வெள்ளிக்கிழமை மதியம் மார்க்கெட் முடியவும் ஷேர்லக்கின் பைக் நம் அலுவலக காம்பவுண்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. அன்று பெரிய அளவில் சந்தை இறங்கவில்லை என்கிற நிம்மதியோடு நாம் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென நமக்கெதிரே வந்து உட்கார்ந்தார் ஷேர்லக். வந்ததும் வராததுமாக சந்தையின் லேட்டஸ்ட் மூவ் பற்றி கேட்டோம்.

''கடந்த வாரம் முழுக்க சந்தை மேலும் கீழும் ஏறியிறங்கி 100 புள்ளிகள் முன்னேறியது. இது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், சந்தை மேற்கொண்டு இறங்காமல் இதோடு மட்டுப்பட்டு நின்றதே என்று நினைத்து நாம் நிம்மதி அடையலாம். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரங்களில் எஃப்.ஐ.ஐ.கள் கணிசமான முதலீட்டைத் திரும்ப பெற்றனர். ஆனால், கடந்த வாரத்தில் அப்படி ஒரு நிலைமையைப் பார்க்க முடியவில்லை. தவிர, மூன்றாம் காலாண்டில் பல நிறுவனங்களின் ரிசல்ட்டுகள் நன்றாகவே இருப்பதால் சந்தை மேலும் கீழே விழுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 28.14% உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து போயிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.''

''வங்கிப் பங்குகள் இனி இறங்குமா? என பல வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். உங்கள் பதில் என்ன?'' என்று கேட்டோம், ஒரு தட்டில் கொஞ்சம் மிக்சரை வைத்துக் கொடுத்தபடி.

. ''பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்ததால், வங்கிப் பங்கிலிருந்து பலரும் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர். ஆனால், இப்போது பணவீக்கம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருப்பதால் வட்டி விகிதம் பெரிய அளவில் உயர்த்தப்படாது என்கிற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வர, மீண்டும் வங்கிப் பங்கில் நுழைய ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் எஸ்.பி.ஐ., கனரா, எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்பட பல்வேறு பங்குகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, நமது பொருளாதாரத்தின் அடிப்படை ஸ்ட்ராங்காக இருப்பதால், வங்கிப் பங்குகள் நல்ல ரிட்டர்ன் கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒரே தேவை, நிறைய பொறுமை.''.
''ஜில்லென்று கொஞ்சம் தண்ணீரைக் கொடும்'' என்று கேட்டு வாங்கிக் குடித்தவர், அடுத்த டாப்பிக்கிற்கு போனார்.

''எஸ்.கே.எஸ். நிறுவனத்தின் பங்கு விலை திடீரென உயர்ந்திருக்கிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் துறை பற்றி விசாரணை நடத்த அமைக் கப்பட்ட மலேகம் சப்-கமிட்டி 'பாசிட்டிவ்’-ஆன ரிப்போர்ட் ஒன்றைக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து இந்தப் பங்கின் விலை ஒரே நாளில் 10% மேல் ஏறி 'அப்பர் பிரீஸ்’ ஆனது. அடுத்து வரும் நாட்களிலும் இந்தத் துடிப்பு அந்தப் பங்கில் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. இதுவரை இந்தப் பங்கை வாங்காதவர்கள் இனியும் வாங்காமல் தவிர்ப்பதே நல்லது'' என்றவர், அடுத்து நிறுவனச் செய்திகள் பக்கம் தாவினார்.

''டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ வெளியீடு 5.9 மடங்கு அதிகமான முதலீட்டைப் பெற்று பெரும் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால், ரீடெய்ல் முதலீட்டாளர் களின் பங்கேற்பு இதில் அவ்வளவு உற்சாகமாக இல்லை.

பினானி சிமென்ட் நிறுவனம் சந்தையிலிருந்து டீலிஸ்ட் செய்யப் போவதாக அறிவித் திருக்கிறது. என்ன விலைக்கு பங்குகளைத் திரும்ப வாங்குவது என அந்த நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், இப்போதைக்கு 'ஃப்ளோர் பிரைஸ்’-ஆன 82 ரூபாயை விலையாக நிர்ணயம் செய்திருக் கிறது. இதன் புரமோட்டர்கள் 69.9 அளவுக்கு பங்குகளை வைத்திருக்கின்றனர்.இந்தியன் வங்கி வருகிற ஜூன் - ஜூலை மாதத்தில் எஃப்.பி.ஓ. வரலாம் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் 1,500 கோடி ரூபாயைத் திரட்டப் போகிறதாம் அந்த வங்கி. அது மட்டுமல்ல, கர்நாடக வங்கி உரிமைப் பங்கு வழங்கவும் செபி அனுமதி கொடுத்திருக்கிறது. ஐந்து பங்கு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு பங்குகள் கொடுக்க முடிவாகி இருக்கிறது.''

பேசிக் கொண்டே போனவரிடம் சூடான டீயைக் கொடுத்து, ''அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும்?'' என்று கேட்டோம்.

''அடுத்த சில மாதங்களுக்கு சந்தை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் 'ரேஞ்ச் பவுண்ட்’-ஆக, அதாவது ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே வர்த்தகமாகும். எனவே தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்'' என்கிறார் 'குளூம் பூம் அண்ட் டூம்’ மார்க் ஃபேபர். அது மட்டுமல்ல, இந்த ஆண்டில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 16000 புள்ளிகள் வரை இறங்கவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை, சந்தை இப்போது ஓரளவு நன்றாகவே இறங்கியிருக்கிறது. வேல்யூவேஷன் என்பது இப்போது கவர்ச்சிகரமாக இருப்பதாக பல நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே, கடந்தமுறை சந்தையின் ஓட்டத்தில் கலந்து கொள்ளத் தவறியவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யத் தொடங்கலாம். இப்போதுள்ள நிலைமையின்படி, நிஃப்டி இன்னும் 150 புள்ளிகள் (அதாவது, 5450) மட்டுமே குறைய வாய்ப்புண்டு. அந்த நிலையை உடைத்துக் கொண்டு கீழே சென்றால் மட்டுமே சந்தை இன்னும் கீழே செல்லும்'' என்றவர் கிளம்பத் தயாரானார்.

''இந்த வாரமாவாவது ஷேர் டிப்ஸ் உண்டா?'' என்று கேட்டோம். ''இந்த வாரம் நிச்சயம் உண்டு'' என்றவர் துண்டுக் காகிதத்தைக் கொடுத்தார். அதில் எழுதி இருந்தது இதுதான்.

டி.சி.எஸ்., எம்பசிஸ், மிர்சா இன்டர்நேஷனல், பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், பஜாஜ் ஆட்டோ. மார்க்கெட் அதிகமாக சரிந்தால் அதிக அளவில் இவற்றை வாங்கலாம். இல்லாவிட்டால் புள்ளிகள் குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவும்.

கலந்தி ரெயில் நிர்மான், டெக் மஹிந்திரா, கார்ப்பரேஷன் வங்கி. இவை நடுத்தர கால முதலீட்டுக்கு ஏற்றவை.