ஒரு திறமைசாலியால் இன்னொரு திறமைசாலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை உண்மை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது சீனா. இதுநாள் வரை நமது எல்லைப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வந்தது, இப்போது நமது பிஸினஸ்மேன்களின் தலையிலும் மிளகாய் அரைக்கத் தொடங்கி இருக்கிறது.

. சீ.னாவின் ஹெனன், ஹெபி மற்றும் தியன்ஜின் பகுதிகளில் உள்ள சீன நிறுவனங் களுடன் பிஸினஸ் செய்ததில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத் தகராறு ஏற்பட்டு, பணம் கிடைக்காமல் போயிருக்கிறது நம்நாட்டினருக்கு. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட பல மடங்கு அதிகம்..
சீனர்கள் பிஸினஸ் பேசுவதில் கில்லாடிகள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் அவர்கள் அமெரிக்கர்களை வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்? எனவே அவர்களுடன் மிக கவனமாகத்தான் நாம் வியாபாரம் பேச வேண்டும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். இதற்கிடையே பீஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகம் சீனாவுடன் வியாபாரம் செய்யும்போது எவையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என பட்டியலிட்டு உஷார் படுத்தியிருக்கிறது. அதில் முக்கியமான சில எச்சரிக்கைகள் உங்கள் பார்வைக்கு...

சீனாவில் எந்த நிறுவனத்துடன் நீங்கள் வியாபாரம் செய்வதாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் 'கிரெடிட் சர்ட்டிஃபிகேஷன்’ சர்ட்டிஃபிகேட்டைக் கேட்டுப் பெற வேண்டும். அந்த கம்பெனி சீனாவின் சர்வதேச வர்த்தக புரமோஷன் கமிட்டியால் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.

அடுத்து பிஸினஸ் டு பிஸினஸ் என்று இருக்கும் சீன இணைய தளங்களை நம்பி ஏற்றுமதி, இறக்குமதி ஆர்டரைக் கொடுக்கக்கூடாது.

நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனம் எதுவாக இருந்தாலும் அது பற்றி ஷாங்காய், குவாங்குவா, ஹாங்காங் போன்ற இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் விசாரித்து விளக்கமான அறிக்கை பெற்று, அதன் அடிப்படையிலேயே பிஸினஸ் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஆர்டர் செய்த பொருள் நீங்கள் கேட்ட தரத்தில்(சர்வதேச ஆய்வு நிறுவனங்களின் சான்றிதழோடு) உங்கள் கைக்குக் கிடைத்த பிறகே பணம் கொடுக்க வேண்டும். முன்பணமாக ஏதாவது கொடுக்கப்படும் பட்சத்தில் அக்கம்பெனியின் நம்பகத்தன்மையை நன்கு அறிந்த பிறகே அனுப்ப வேண்டும்.

சைட் லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று சொல்லப்படுகிற எல்சியை கொடுப்பது நல்லது!

இப்படி முழ நீளத்துக்கு நீள்கிறது அந்த அறிவுரைகளும் எச்சரிக்கைகளும். டிராகன் தேசத்தோடு உஷாராகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் போலிருக்கிறது!