இன்றைக்கு பிஸினஸில் மட்டுமல்ல, அரசியலிலும் பிற துறைகளிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆச்சரியமான இந்த வளர்ச்சியைக் கண்டு தமிழகத்தில் இருக்கும் பிற சமூகத்தினர் மட்டுமின்றி, இந்தியா முழுக்க உள்ள பல சமூகத்தினரும் நாடார் மக்களை உற்று கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

. ப.ல நூறு ஆண்டுகளாகவே படித்து, சமூகத்தில் பல நிலைகளில் அங்கீகாரமும் அதிகாரமும் பெற்ற ஒரு சமூகம் இன்றைக்கு பிஸினஸ் உலகில் தலைசிறந்து விளங்குகிறது எனில் அதில் ஆச்சரியப் படுவதற்கு பெரிய காரணம் எதுவுமில்லை..
ஆனால், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் படிக்கத் தொடங்கி, தான் யார் என்பதை உணர்ந்து, தன் திறமைகள் என்ன என்பதை அறிந்து, சமூகத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு ஒரு சமூகம் வளர்ந்திருக்கிறது என்றால், அது நிச்சயம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயமே. நாடார் சமூகத்தினரின் பிஸினஸ் வளர்ச்சி அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்கு கட்டாயம் உட்படத் தகுந்ததே.

நாடார் சமூகத்தினரின் முக்கியமான இருப்பிடம் தமிழகத்தின் தெற்குப் பகுதி தான். இந்தப் பகுதியின் ஆதி குடிமக்கள் இவர்கள். என்றாலும், இன்றைக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், கரூர், ஈரோடு, கோவை, சேலம், சென்னை என தமிழகம் முழுக்கவே நாடார் சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள்.

இந்த சமூகத்தினரின் குலத் தொழில் என்று பார்த்தால், பனை மரம் தொடர்பானது தான். தமிழகத்தின் தென் பகுதியில் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த பனை மரங்களில் ஏறி, வெல்லம் தயாரிப்பது உள்பட அத்தனை விஷயங்களையும் செய்தனர் இந்த சமூகத்து மக்கள்.

இந்த சமூகத்தினர் அடிப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பிற சமூகத்தினரால் புறக்கணிக்கப் பட்டே வந்தனர். கோயில் மற்றும் சமூக நற்காரியங்களில் இந்த மக்கள் கலந்து கொள்ள முடியாதபடிக்கு ஒதுக்கப்பட்டு வந்தனர். இதனால் பிற சமூகத்து மக்கள் போல, படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமலே போனது.

ஆனால், கால வளர்ச்சிக் கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறமை மிக்கவர்கள் இந்த சமூகத்து மக்கள் என்பதால், தமிழகத்தில் வணிகம் வளர வளர, இவர்கள் அதில் பங்கெடுக்கத் தொடங்கினர்.

தூத்துக்குடி போன்ற துறைமுக நகரத்தில் இந்த சமூகத்து வணிகர்கள் ஆதிக்கம் செலுத்துகிற அளவுக்கு முன்னேறி இருந்தனர். இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து முக்கிய பொருட்களை எடுத்துச் சென்றும், அங்கிருந்து பல்வேறு பொருட்களை இங்கு கொண்டு வந்து தருவதுமான வேலைகளைப் பெரிய அளவில் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த பொருளாதார வளர்ச்சி சமூகத்தை ஒன்றிணைக்கும் கருவியாகவும் மாறியது. சாணார் என்றும் கிராமணி என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த மக்கள், நாடார் என்கிற ஒரே பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தனர்.

பொருளாதார வளர்ச்சி தந்த முக்கியத்துவத்தின் காரணமாக, தங்களுக்கென தனியாக ஒரு வங்கி தேவைப்படுவதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உணர்ந்தனர் நாடார் சமூகத்து மக்கள். 1910-ல் தஞ்சையில் உள்ள பொறையாரில் நடந்த கூட்டத்தில் தங்களுக்கென தனியாக ஒரு வங்கி தேவை என்பதை உணர்ந்து, அதற்கான தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் விளைவாக, 1921-ல் தூத்துக்குடியில் நாடார் வங்கியைத் தொடங்கினர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கழித்து, இந்த வங்கிதான் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1920-க்குப் பிறகு இந்த சமூகத்து மக்களின் வளர்ச்சி இன்னும் வேகமெடுத்தது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டனர். இதன் விளைவாக, புதிய புதிய தொழில்களை இந்த சமூகத்து மக்கள் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இருந்தது அரசியல் சூழ்நிலை. இந்த சமூகத்தைச் சேர்ந்த காமராஜர் தமிழகத்தின் முதல்வரானபோது, இந்த சமூகத்து மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விழிப்பு உணர்வு இன்னும் அதிகமானது.

மார்வாடி சமூகத்தினர் பிஸினஸில் முன்னேற விரும்பும் தங்கள் சமூகத்தினருக்கு நிதி உதவி உள்பட பல்வேறு உதவி களை செய்கிற மாதிரி, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செய்ய ஆரம்பித்ததை முக்கிய மான விஷயமாக எடுத்துச் சொல்லலாம்.

உறவின்முறை, மகமை என்கிற கருத்தாக்கம் தமிழகத் தின் மற்ற சமூகத்தினரிடம் இல்லாத ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள், ஆலோசனைகள் என்பதோடு நில்லாமல் முடிந்தவரை நிதி உதவியும் செய்து, ஆர்வமும் திறமையும் கொண்ட தன் சமூகத்தினர் முன்னேற பெரும் நன்மை செய்வதாக இருந்தது இந்த உறவின்முறை கருத்தாக்கம்.

பொது காரியங்களுக்குத் தேவையான நிதியை உருவாக்க அடிப்படையாக இருந்தது மகமை. இந்த பொது நிதி மூலம் கோயில் கட்டுவது, திருமண மண்டபம் கட்டுவது, பள்ளிக்கூடம் அமைப்பது போன்ற முக்கியமான காரியங் களை செய்து வந்தனர் இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள்.

மூன்று கொள்கைகள்!

கூரியர் பிஸினஸில் உலக அளவில் முக்கியமான நிறுவனம் ஃபெடக்ஸ் (திமீபீமீஜ்) கம்பெனி. வருட வருமானம் 4,000 கோடி டாலர்கள் (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்). நிறுவனத் தலைவர் ஃப்ரெட் ஸ்மித் சொல்கிறார்:

'1. எங்கள் முக்கிய நிர்வாகக் கொள்கைகள் மூன்றுதான். கஸ்டமர்களோடு நேரடித் தொடர்பு வைத்திருக்கும் அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும்.

2. பிறருக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்;

3. தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்யும்போது, எல்லோருடைய முன்னிலையிலும் அவர்களைப் பாராட்ட வேண்டும்.'

இந்த மூன்று நிர்வாகக் கொள்கைகளும் அநேகமாக எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்துமே!

- அத்வைத்

தவிர, தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் பிஸினஸில் நுழைய விரும்பும் பட்சத்தில் அவருக்கு உதவி செய்வதற்காக பல ஊர்களின் பெயர்களில் சங்கம் அமைத்து இந்த சமூகத்து மக்கள் செயல்பட்டதும் பிற சமூகங்களில் இல்லாத விஷயம். விருதுநகர் நாடார் சங்கம், தூத்துக்குடி நாடார் சங்கம், சிவகாசி நாடார் சங்கம், திருச்செந்தூர் நாடார் சங்கம் என பல ஊர்களைச் சேர்ந்த இந்த சமூகத்து மக்கள் தங்களது ஊர்ப் பெயரில் சங்கம் அமைத்து, இந்த சமூகத்தைச் சேர்ந்த மற்றவர் களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துத் தந்தது அற்புதமான பிஸினஸ் உதவி என்றே பலரும் கருதுகிறார்கள்.

திட்டமிட்ட இந்த வளர்ச்சி யால் 1950-க்குப் பிறகு பல துறைகளில் நுழைந்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர் நாடார் சமூகத்து மக்கள். இன்றைக்கு மளிகைக் கடை வியாபாரத்தில் பெரும் பகுதி இந்த சமூகத்து மக்களிடம் இருக்கிறது. எஃப்.எம்.சி.ஜி. மார்க்கெட்டில் இந்த சமூகத் தினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

எண்ணெய், பாக்கு, மிளகாய், காபி போன்றவற்றை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பதில் முக்கிய பங்கு வகித்தனர். கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட், ரீடெய்ல் துறைகளில் இந்த சமூகத்தினர் சமீபத்தில் நுழைந்து பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தின் பிஸினஸ் உலகில் மிகப் பெரிய பங்காற்றிய இந்த சமூகத்தின் முக்கிய பிஸினஸ்மேன்களைப் பற்றி அடுத்த இதழ் தொடங்கி பார்க்க ஆரம்பிப்போம்.

(அறிவோம்)