கேளுங்கள் சொல்கிறேன்!

பேராசிரியர் தில்லைராஜன் எழுதிய ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் தொடர் கடந்த இதழுடன் முடிவடைந்தது. இந்த இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் பேராசிரியர் தில்லைராஜன்.

எம்.கார்த்திகேயன், ஈரோடு.

நான் வெல்டிங் தொழில் செய்கிறேன். இந்த தொழிலை சிறப்பாக நடத்த என்ன வழி என்று சொல்லுங்கள்.

''சிறப்பாக தொழில் நடத்த இரண்டு வழி உண்டு. ஒன்று, குறைந்த விலையில் உங்கள் சேவைகளை அளிப்பது; இரண்டாவது, வித்தியாசப்படுத்துவது. இதில் முதல் விஷயத்திற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. ஆனால், இரண்டாவது விஷயத்தைப் பொறுத்தவரை சிறு விளக்கம் தேவை. வித்தியாசம் என்பது ஏதேனும் ஒரு பரிமாணத்தில் புது வகையான சேவைகளை அளிப்பதிலேயோ, துரித நேரத்தில் வேலைகளை முடித்துக் கொடுப்பதிலேயோ, மிக உயரிய தரத்தில் பொருட்கள் வழங்குவதிலேயோ இருக்கலாம்.

. எத்தகைய உத்தியை நீங்கள் பின்பற்றுவதாக இருந்தாலும், உங்களைப் போன்ற முதிர்ச்சியான தொழில் அனுபவம் கொண்டவர்கள் மார்க்கெட்டிங்கில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் மிகச் சிறந்த விளம்பரமும், விற்பனையாளரும் உங்களின் சேவையில் திருப்தி அடைந்திருக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களே. ஆர்டர் முடித்து காசு வாங்கின கையுடன் அவர்கள் தொடர்பு முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். புது வருடப் பிறப்பு, பண்டிகை தினங்கள் போன்ற நாட்களில் வாழ்த்து தெரிவிப்பது தொடர்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு எளிய வழியாகும். இத்தகைய சின்னச் சின்ன செயல்கள் வருங்காலத்தில் உங்கள் பிஸினஸ் வளர நல்ல வழி வகுக்கும்..
எம்.ரெங்கநாதன், பழனி.

நான் முதல் தலைமுறை பிஸினஸ்மேன். கிஃப்ட் பொருட்களை விற்பது தொடர்பான தொழிலை செய்யத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்; இதை எப்படி தொடங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

''கிஃப்ட் தொழில் என்று கூறி இருக்கிறீர் கள். கிஃப்ட் பொருட்கள் தயாரிக்கும் தொழில், கிஃப்ட் பொருட்கள் விற்பனை என்று இதில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தேவையும் வெவ்வேறாக இருக்கும். அன்பளிப்புப் பொருட்கள் விற்கும் கடை தொடங்க இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மற்ற சில்லறை கடைகளுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசுப் பொருள் விற்கும் வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மளிகைக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலையில் கருத்தாக இருப்பார்கள். ஆனால், அன்பளிப்பு கடைகளிலோ, குறைந்த விலையைவிட, பொருளுக்கு தகுந்த விலையைதான் பலரும் எதிர்பார்ப்பார்கள்.

அன்பளிப்பு கடைகளில் விற்கும் பொருட்கள் புதுமையாகவும் காலத்திற்கேற்பவும் இருக்க வேண்டும். அன்பளிப்பு கடைகளில் பெரும்பாலான முதலீடு சரக்கு மற்றும் கையிருப்பிற்குதான் தேவைப்படும். இதுபோன்ற முதலீட்டிற்கு பெரும்பாலும் வங்கிகளில் இருந்து கடன் கிடைப்பது கஷ்டம். நீங்கள் உங்கள் முதலீட்டிலிருந்துதான் பணம் போட வேண்டும்; அல்லது முறை சாராத வழிகளிலிருந்து (உதா. வட்டிக்கு கடன் வாங்குவது) திரட்ட வேண்டும்.

கடையில் உள்ள பொருட்களின் அதிகபட்ச வரம்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகை பொருளும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம்; ஆனால், வரம்பிற்கு குறைவிருக்கக்கூடாது. கடையில் இருக்கும் பொருட்கள் பழசாவதற்குள் அதை விற்றுவிட கற்றுக் கொள்ளுங்கள். சற்றே தேங்கி இருக்கும் பொருட்களை விற்க அவ்வப்போது காட்சியளிக்கும் விதத்தை மாற்றிக் கொண்டே இருங்கள்.

மேலை நாடுகள் போன்று அன்பளிப்பு கலாசாரம் இன்று நம் சமூகத்திலும் நன்கு வேரூன்றிவிட்டது. மக்கள் பலரும் நடமாடுகிற ஒரு இடத்தில், போட்டியாளர்கள் யாரும் அருகில் இல்லாத ஒரு இடத்தில் கடையைத் தொடங்கி, அதை சிறந்த முறையில் மேலாண்மை செய்து வந்தால், உங்களுக்கு வெற்றி நிச்சயம்.