குடும்பத் தலைவிகளான பெண்கள் நினைத்தால், பத்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தாலும், அதில் பத்து சதவிகிதத்தை எளிதாகச் சேமித்துவிடுவார்கள். அதேபோல, அவர்கள் செலவு செய்ய நினைத்தால் லட்ச ரூபாய் இருந்தாலும் காணாது. குறைந்த வருமானமாக இருந்தபோதும், தன் திறமையான நிர்வாகத்தால் இன்றைக்கு தன் குடும்பத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார் பெரம்பலூர் துறைமங்கலத்தைச் சேர்ந்த ஜெயந்தி பாலமுரளிதரன். இந்த வார திருமதி எஃப்.எம். ஆன அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?

. ''பெ.ரும்பாலான பெண்களைப் போலவே நிதி நிர்வாகத் திற்கான பாலபாடம் எனக்கு என் பிறந்த வீட்டில்தான் கிடைச்சது. பிழைப்புக்காக சென்னையில் செட்டிலான குடும்பம் எங்களுடையது. பத்தாவது பரிட்சை லீவிலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அப்பாவும் அந்த வேலை தொடர்பான டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டார். இப்படி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில 300 ரூபாய்க்கு ஆரம்பிச்ச என்னோட சம்பளம் சீக்கிரத் திலேயே 3,000 ரூபாயைத் தாண்டிடுச்சு..
கூடவேலை பார்க்கிற பெண்களும் தங்களோட குடிகாரக் கணவர்களிடம் இருந்து காப்பாத்திக்க, தங்களோட சேமிப்பை யெல்லாம் எங்கிட்டயே கொடுத்து வைச்சிருந்தாங்க. கிட்டத்தட்ட ஒரு மொபைல் பேங்க் மாதிரி உலாவந்த அந்த தருணங்கள், காசு பத்தின பல பாடங்களை எனக்கு கத்து தந்துச்சு.

வேலைக்குப் போய் சம்பாதிச்ச என்னோட சேமிப்பிலேர்ந்துதான் என் திருமணத்துக்கான நகை, சீர்வரிசைன்னு பெரும்பங்கை வாங்கினேன்.

ஆனால், திருமணத்துக்கு அப்புறம் சேமிப்பதற்கான வாய்ப்பில்லாமப் போயிடுச்சு. என் கணவர் நிறைய படிச்சிருந் தாலும், எந்த வேலையிலேயும் நிரந்தரமா இருக்க முடியாம கஷ்டப்பட்டார். மாமனார், மாமியார்தான் எல்லாச் செலவுகளையும் பார்த்து கொண்டிருந்தாங்க. பணம் கையில இருக்கும் போது கிடைக்கிற படிப்பினை களைவிட, இழுபறியா தவிக்கிற காலம் தர்ற படிப்பினைகள் தனித்துவமானதுதான்.

அந்த நேரத்துலதான் சில திட்டங்களைப் போட ஆரம்பிச்சேன். டாஸ்மாக்-ல சூப்பர்வைசரா என் கணவருக்கு வேலை கிடைச்சதும், நான் நகர் மத்தியில லேடிஸ் டெய்லரிங் கடை போட்டிருக்கேன். என் நகைகள் மற்றும் வங்கிக் கடன் உதவியோட ஆரம்பிச்ச கடை கொஞ்சம் தடுமாறினாலும், இப்ப மாதம் 4,000 ரூபாய் லாபம் தருது.

சொந்தக்கால்ல நிற்க ஆரம்பிச்சதும் தனிக்குடித்தனம் போனோம். கஷ்டப்பட்ட காலத்துல யோசிச்சு வச்சிருந்த திட்டங்கள் ஒவ்வொண்ணா நடைமுறைப்படுத்தினேன். முதல்ல, மளிகை பர்ச்சேஸை இரண்டு மாதத்துக்கு ஒருமுறையா மாத்தினேன். இதனால கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு ஓட்ட வேண்டியிருக்கும். ஆனாலும், ஒரு மாச மளிகை பட்ஜெட் சுளையா சேமிப்புக்கு போயிடுமே!

அதேமாதிரி, வீட்டுக்குத் தேவையான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாத்தையும் தவணைல வாங்க என் கணவர் விரும்பினார். எனக்கும் ஆசைதான். ஆனால், அந்த ஆசையை இரண்டு வருஷத்துக்கு ஒத்தி வச்சுட்டு, மாசாமாசம் என்னோட டெய்லரிங் கடை வருமானத்துல பெரும்பகுதியை தனியா ஒதுக்கி, சேமிக்க ஆரம்பிச்சேன். எந்தவொரு கடன் நெருக்கடியும் இல்லாம சொந்தக்காசுல வீட்டுக்கான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கினதோட அவருக்கு புது பைக்கும் வாங்கி தந்தேன்.

என் குழந்தைகளுக்கான கல்விச் செலவைக்கூட முடிந்த வரை குறைவா செலவழிக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன். பெரம்பலூர்ல கேந்திரிய வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி வந்தப்ப அவரோட அரசு பணிக்கான முன்னுரிமைல சின்ன பையன் கிரிநாத்தை அங்கே சேர்த்தோம். பெரியவன் கிருஷ்ணகாந்துக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு செலவில படிக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சதும் அது பத்தி விசாரிச்சு முட்டி மோதி இந்த வருஷம் அவனை கிருஷ்ணகிரியில சேர்த்து விட்டுட்டோம்.

இந்த வகையில, பசங்களின் வழக்கமான வருடாந்திர படிப்புச் செலவு கால்வாசியா குறைஞ்சிருக்கு. இப்படி மிச்சமாகும் பணத்தை பிள்ளை களின் மேற்கல்வி திட்டத்துக் காக இப்பவே சேமிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அதேபோல, மருத்துவச் செலவு விஷயத்திலேயும் கொஞ்சம் விழிப்போட இருந்ததால பெரிய செலவிலே இருந்து தப்பிச்சேன். என் வீட்டுக் காரருக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறைல ஒரு கால் வீங்கிப் போய் ஆபரேஷன் வரைக்கும் போனது. ஆரம்ப பரிசோதனைகளை மட்டும் பக்கத்துல அவசரத்துக்குப் பார்த்திட்டு, நாங்க நேரா அரசு மருத்துவமனைக்கு போயிட்டோம். தகுந்த சிகிச்சை கிடைச்சதோட போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து வேறு விரயம் எதுலேயும் நாங்க சிக்கலை. ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் என் கணவர் கணக்குப் போட்டு பார்த்துட்டு, அடடே ஐந்து லட்சம் ரூபாய் வரைக்கும் மிச்சமாகியிருக்கேன்னு என்னைப் புகழ்ந்தார்.

எங்களுக்கு இரண்டுமே பசங்க அப்படிங்கிறதால தங்க நகை சேமிப்புல ஆர்வம் வரலை. இப்பதான் டெய்லர் கடை தொடங்குவதற்கு அடமானம் வைத்த நகை களை ஒவ்வொண்ணா மீட்டு வர்றோம். தங்கத்தோட எகிறும் விலையைப் பார்த்திட்டு, அதுலேயும் கொஞ்சம் கொஞ்சமா சீட்டு போட்டு சேமிக்கலாம்னு நினைக்கிறேன். அவரோட பேர்லயும் என்னோட பேர்லயும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துட்டேன். என் மாமனார் கட்டின தனி போர்ஷன் எங்களுக்கு இருந்தாலும், எங்க குழந்தைகளுக்காக தனி வீடு கட்ட இடம் பார்த்திருக்கோம்.

எதுக்குமே கடன்ல போய் சிக்குறதா இல்ல. ஏன்னா, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் கடன் இம்சைக்கு வழி காட்டும். சொந்த சேமிப்பு தரும் சந்தோஷத்தின் அருமையை நல்லாவே உணர்ந்திருக்கேன்' என்று முடித்தார் ஜெயந்தி.

- எஸ்.கே.நிலா