வெள்ளிக்கிழமை இரவு ஷேர்லக் நம் கேபினுள் நுழையவும், இந்த நாணயம் விகடனின் அட்டை சுடச்சுட அச்சாகி, நம் டேபிள் மீது இருந்தது. ''அட, அட்டையே அமர்க்களம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அட்டையிலேயே கவர் செய்திருக்கிறீரே!'' என்று புகழ்ந்தார். ''புகழ்ந்தது போதும் மேட்டருக்கு வாரும்!'' என்றவுடன் ஒவ்வொரு செய்தியாகச் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்.

. ''அ.மெரிக்காவின் கோல்டுமேன் சாக்ஸ் வங்கி இந்தியாவின் ஜி.டி.பி.யை மேலும் குறைத் திருக்கிறது. 2013, மார்ச் மாதத் துடன் முடியும் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 7.2 சத விகிதமாக இருக்கும் என்று முன்பு சொல்லி இருந்தது கோல்டுமேன் சாக்ஸ். அதை இப்போது 6.6 சதவிகிதமாக குறைத்திருக்கிறது..
ஜி.டி.பி.யை குறைத்ததோடு, ஹோல்சேல் பிரைஸ் இன்ஃப்ளேஷனையும் 5 சத விகிதத்திலிருந்து 6.5 சதவிகித மாக அதிகரித்திருக்கிறது.

மெரில்லிஞ்ச் வங்கியும் இதேபோல நம் ஜி.டி.பி-யை குறைத்திருக்கிறது என்றாலும், இந்தியாவின் உற்பத்தி குறைய வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலம் குறித்து பெரிய அளவில் பயம் வேண்டாம் என்று சொன்னதோடு, சில பல இண்டிகேட்டர்கள் பாசிட்டிவ்-ஆன சிக்னல் தந்ததன் விளைவாக, 'நெகட்டிவ்’ நிலையிலிருந்து 'நியூட்ரல்’ நிலைக்கு வந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறது.

எனவே, எதிர்வரும் காலத்தில் பரந்துபட்ட பொருளாதார நிலையைக் கவனித்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது'' என்றார்.

''பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக இன்னொரு கம்பெனி யையும் வாங்கி இருக்கிறதே!'' என்றோம்.

''ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார மந்தநிலை என எல்லா பிரச்னைகளையும் தாண்டி பார்தி ஏர்டெல் நிறுவனம் வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த நிறுவனம் 922 கோடி ரூபாய் கொடுத்து குவால்காம் ஆசியா பசிபிக் நிறுவனத்தின் இந்தியா பிராட்பான்ட் வயர்லெஸ் வர்த்தகத்தை வாங்கி இருக்கிறது.

டெல்லி, மும்பை, ஹரியானா மற்றும் கேரளாவில் 4ஜி-க்கான லைசென்ஸ் குவால்காம் நிறுவனத்திடம் இருப்பதால் ஏர்டெல் இதை வாங்கி இருக்கிறது. இது தவிர, கொல்கத்தா, கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் 4ஜி-க்கான லைசென்ஸை ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறது. ஆக, ஏர்டெல்லிடம் மொத்தம் 18 நகரங்களுக்கான உரிமம் இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் 22 நகரங்களுக்கான உரிமத்தை ஏற்கெனவே வாங்கி இருக்கிறது.''

''பலே, ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மோதுகிற அளவுக்கு ஏர்டெல் நிறுவனம் வந்துவிட்டதா? நடக்கட்டும், நடக்கட்டும்!'' என்றபடி, ஷேர்லக்கிற்கு சில்லென்று பாதாம் பால் தந்தோம். ஸ்பூனில் சிப் பை சிப்பாக ரசித்து குடித்தவர், அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.

''பங்குச் சந்தையின் விதிமுறைகளை பின்பற்றாத சுமார் 1,405 கம்பெனிகள் சஸ்பென்ட் செய்யப் பட்டிருக்கிறது. இப்படி சஸ்பென்ட் ஆன கம்பெனிகளின் பங்குகளை இனி யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாது.

இந்த பங்குகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த 1.85 லட்சம் கோடி ரூபாய் முடங்கி கிடக்கிறது. இந்தப் பணத்தை, முதலீட்டாளர்களுக்கு மீட்டுத் தரச் சொல்லி டெல்லியை சேர்ந்த அதுல் அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த பணத்துக்கு செபி, பி.எஸ்.இ. மத்திய நிறுவன விவகார அமைச்சகம் போன்றவைதான் பொறுப்பு என இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

பி.எஸ்.இ.யின் மொத்த நிறுவனங்களில் இந்த சஸ்பென்ட் ஆன நிறுவனங்கள் மட்டுமே 16 சதவிகிதம் என்பது அதிர்ச்சியான தகவல். வந்தவரை எல்லாம் மணி அடித்து பங்கு வெளியிடச் செய்ததின் விளைவுதான் இது. இப்பிரச்னை தொடர்பாக பதில் அளிக்க மே 30-ம் தேதி வரை காலஅவகாசம் கேட்டிருக்கின்றன நோட்டீஸ் வாங்கிய அமைப்புகள்.

அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆண்டாண்டு காலமாகப் பாதிக்கப்பட்டு வரும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றமாவது நல்ல தீர்ப்பு சொல்கிறதா என்று பார்ப்போம்'' என்றவர் இன்னும் கொஞ்சம் பாதாம் பாலைக் குடித்தார்.

''இந்திய ஆயில் கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று சொல்லியே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் ஆயிலை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குத்தான் லாபம். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், தன் பங்கு முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 11 ரூபாய் டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

கூடவே ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் போனஸ் பங்குகளை அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் இரு மடங்காக உயர்ந்து 723 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு பக்கம் சாதாரண மக்களின் தலையில் சுமையை ஏற்றி விட்டு, இன்னொரு பக்கம் தனது பெரும்பான்மை முதலீட்டாளரான மத்திய அரசுக்கு வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை'' என்று கொதித்தார்.

''நியாயமான கேள்விதானே'' என்றோம் நாம். தொடர்ந்தார் ஷேர்லக்.

''ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைவது தற்காலிகமாக நின்றிருக்கிறது. 56.40 வரை இறங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு அடுத்து 58 வரை செல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கதாநாயகியின் கற்பைக் காக்க சரியான நேரத்தில் ஹீரோ நுழைகிற மாதிரி, ஆர்.பி.ஐ. சந்தையில் நுழைந்து தன்னிடம் இருக்கும் டாலரை சகட்டுமேனிக்கு விற்க ஆரம்பித்தது. இதனால் சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.

'இப்போதைக்கு இது. தேவைப்பட்டால் மீண்டும் வருவோம்’ என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் சொல்லி இருப்பதால் ரூபாய் மதிப்பு சரிவோடு, பங்குச் சந்தையின் சரிவும் தற்காலிகமாக நின்றி ருக்கிறது. ஆனால், சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் ரூபாய் 60 வரை செல்ல வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருக்கிறது'' என்றார்.

சரி, சந்தை தொடர்ந்து இறங்கியதால் முதலீட்டாளர் கள் சோகமாக இருக்கிறார்களே என்றோம்.

''இந்தியாவின் சிறந்த ஃபண்ட் மேனேஜர்களில் ஒருவரான ஹெச்.டி.எஃப்.சி.யின் பிரசாந்த் ஜெயின் இது வாங்குவதற்கான தருணம் என்று சொல்கிறார். காரணம், சந்தையின் பி.இ. மதிப்பு எப்போதெல்லாம்

10 முதல் 11 வரை இருக்கிறதோ, அப்போதெல்லாம் சந்தை நல்ல வருமானம் தந்திருப்பதாகச் சொல்கிறார்.

அதே சமயம், ஐ.சி.ஐ.சி.ஐ. டைரக்ட் இந்தியாவின் ஃபண்ட் மேனேஜர்களிடம் கருத்து கேட்டது. 17 ஃபண்ட் மேனேஜர்களில் 8 பேர் சந்தை 16800 புள்ளியில் இருந்து 17600 புள்ளிகள் வரையில் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆறு பேர் 17600 புள்ளிகளுக்கு மேல் சந்தை செல்லும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அனைத்து ஃபண்ட் மேனேஜர்களும் பங்குச் சந்தையில் உங்களது முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இது போதாதா நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல!'' என்றவர் புறப்படத் தயாரானார்.

''இப்போது நான் ஷேர்டிப்ஸ் எதுவும் தரப் போவதில்லை. எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி நெருங்கிக் கொண்டிருப்பதால் சந்தை ஹாட்டாக இருக்கிறது. எனவே வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு பறந்தார்.