மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

தங்கம்: இன்னும் விலை குறையும்!

தங்கம்: இன்னும் விலை குறையும்!

தங்கம்: இன்னும் விலை குறையும்!

வானிலை அறிக்கை நிலவரம் போல ஆகிவிட்டது தங்கத்தின் விலை நிலவரம். காலையில் நாளிதழ்களில் தங்கத்தில் விலை சவரனுக்கு 300 ரூபாய் அதிகரிப்பு என செய்தி வருகிறது. ஆனால், அன்று மாலையே 100 ரூபாய் குறைந்துவிட்டதாக டிவி-யில் செய்தி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை இப்படி அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்க என்ன காரணம்?  

என்ன காரணம்?

ஐரோப்பிய கடன் பிரச்னை, டாலரின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரை வாங்கி வைப்பது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள் முதலீட்டாளர்கள். இதனால் டாலரில் முதலீடு செய்வது அமெரிக்காவில் அதிகரித்திருக்கிறது.  

குறைந்த டிமாண்ட்!

தங்கம்: இன்னும் விலை குறையும்!

தற்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட கையில் பணமாக வைத்திருப்பதே சரி என சில முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். தவிர, இந்தாண்டு பருவ மழை குறைவாகவே இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பருவ மழை நன்றாகப் பெய்தால்தான் விவசாயிகளிடம் பணப்புழக்கம் ஏற்பட்டு நகை வாங்குவார்கள். இதனால் தங்கத்தின் டிமாண்ட் குறையும் என அனலிஸ்டுகள் கூறுகிறார்கள். மேலும், தங்கத்தை அதிகளவில் வாங்கும் சீனாவில் இனி அக்டோபர் மாதத்தில்தான் பண்டிகை காலம் என்பதால் அங்கும் தேவை குறையும் என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்குகிறார்களா? என கசானா நகைக் கடையின் டி.ஜி.எம். (மார்க்கெட்டிங்) மோகன் பாபுவிடம் கேட்டோம்.

''தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதை வாங்காமல் இருப்பதுமில்லை; விலை குறைந்துவிட்டது என்பதற்காக உடனே வந்து வாங்கிவிடுவதும் இல்லை. மக்கள் தங்களின் தேவைக்கு மட்டுமே தங்க நகைகளை வாங்குகிறார்கள். அதிக பட்சமாக ஆபரணத் தேவைக்கு மட்டுமே வாங்குகிறார்கள் என்பதால், அவர்கள் விலையை ஒரு பெரிய பொருட்டாக பார்ப்பதில்லை'' என்றார்.

தங்கம்: இன்னும் விலை குறையும்!
##~##
தங்க காயின்களின் விற்பனை எப்படி உள்ளது என அவரிடம் கேட்டோம்.

''இந்தியாவில் முதலீட்டு அடிப்படையில் மக்கள் தங்க நாணயத்தை வாங்குவது குறை வாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு மட்டுமே தங்க நாணயங்கள் விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் வாங்குவதில்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்றும் சொன்னார்.    

தங்கம்: இன்னும் விலை குறையும்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மாதத்தைவிட நூறு டாலர் குறைந்துள்ளது. ஆனால், இந்த விலை வீழ்ச்சி இந்தியாவில் அந்தளவுக்கு பிரதிபலிக்க வில்லை. ரூபாயின் மதிப்பு குறைந்ததே இதற்கு காரணம். ரூபாயின் மதிப்பு அதிகரிக்குமா? தங்கத்தின் விலை வரும் ஒரு மாதத்திற்கு எப்படி இருக்கும்? என மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.

''சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இறங்கிக் கொண்டே வருகிறது. கடந்த காலத்தில் ரூபாயின் மதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வருடத் திற்கு ஆறு சதவிகிதம் மட்டுமே மதிப்பு குறையும். ஆனால், இந்தாண்டு 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி. நம் நாட்டு கரன்சி மட்டுமல்ல, இந்தோனேஷியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பும் குறைந்துள்ளது. மத்திய அரசாங்கம் ரூபாயின் மதிப்பை சரிசெய்ய பல நடவடிக்கை கள் எடுக்கவுள்ளது. அப்படி செய்யும்போது ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். தங்கத்தின் விலையிலும் சில கரெக்ஷன் வந்து விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் பத்து கிராம் 24 காரட் தங்கம் 29,000 முதல் 28,500 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

எப்படியோ தங்கத்தின் விலை குறையும்போது இன்னும் அதிகமாக வாங்கிப் போட வேண்டியதுதானே!

- பானுமதி அருணாசலம்.