மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

கடந்த சில மாதங்களாக விலை குறைந்து வந்த கச்சா எண்ணெய் அடுத்த வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து சொல்கிறார் ஐ.டி.ஐ. ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் நேகா.

##~##
''ஐ
ரோப்பிய யூனியனில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற சூழ்நிலையால் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு 77 டாலர் வரை சென்ற வாரத்தில் இறங்கியது. 2008-ம் வருட பொருளாதார நெருக்கடி காலத்தில்கூட இந்த வேகத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததில்லை. நிமிக்ஸ் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவிகிதம் வரை குறைந்தது.

ஐரோப்பிய பொருளாதார சிக்கல் பிரச்னை காரணமாக தேவை குறைந்ததும், டாலரின் மதிப்பு அதிகரித்ததும் கச்சா எண்ணெய்க்கு எதிராக உள்ளது. கடந்த வாரத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இன்வென்ட்ரி 0.1 மில்லியன் பேரல் குறைந்து 387.2 மில்லியன் பேரலாக இருந்துள்ளது. மேலும், நார்வேஜியன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றுபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வடக்கு கடல் பகுதியிலிருந்து கிடைக்கும் எண்ணெய் குறைந்தது.

கடந்த வெள்ளியன்று மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் கச்சா எண்ணெய் ஜூலை கான்ட்ராக்ட் ஒரு பேரல் 4,492 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் 4,650 ரூபாயை ரெஸிஸ்டன்ஸாக கொண்டு வர்த்தகம் செய்யலாம்!''.

கமாடிட்டி!


ஏலக்காய்!

ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதையட்டி ஏலக்காயின் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யும் கௌதமாலாவில் உற்பத்தி குறைந்துள்ளதும், இந்தியாவில் அறுவடை செய்வது தாமதமாகி வருவதாலும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. புதிய ஏலக்காய் ஆகஸ்ட் மாதத்தில்தான் சந்தைக்கு வரும் என்பதாலும் விலை அதிகரித்து வருகிறது.

பருவநிலை சரியாக இல்லாததால் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு பயிர் உற்பத்தி குறையுமென விவசாயிகள் சொல்கிறார்கள். 2011-2012-ம் ஆண்டில் சிறிய மற்றும் பெரிய ஏலக்காய் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் எடையின் அடிப்படையில் அதிகரித்துள்ளது. சின்ன ஏலக்காயின் ஏற்றுமதி 296% அதிகரித்துள்ளதாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஜூலை கான்ட்ராக்ட் ஒரு கிலோ ஏலக்காய் 1,331 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. சப்போர்ட் லெவல் 1,250 ரூபாயாக கொள்ளவும்.

கமாடிட்டி!


மிளகாய்!

ஏற்றுமதி தேவை காரணமாக ஒரேநாளில் 2% வரை விலை அதிகரித்தது. மிளகாய் ஏலம் விடப்படும் குண்டூர் சந்தைக்கு குறைந்தளவிலே வரத்து இருந்தது. மிளகாயின் தரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு கிலோ விலை 4,800-5,400 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆந்திராவில் கடந்தாண்டு 625 ஹெக்டேராக இருந்த மிளகாய் விளைச்சல், இந்தாண்டு 2,128 ஹெக்டேராக அதிகரித்தது. சீனா, இலங்கை, பாகிஸ்தான், அரபு நாடுகளில் இந்திய மிளகாய்க்கு நல்ல தேவை ஏற்பட்டுள்ளது. 2011-12ல் மிளகாய் ஏற்றுமதி 2,41,000 டன்னாக இருப்பதாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. பருவமழை தாமதமாவதால் தற்போதைய சீஸனுக்கு வரும் மிளகாய் குறையும் என கூறப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மிளகாய் ஜூலை கான்ட்ராக்ட் குவிண்டால் 4,910 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் 4,900-5,200 ரூபாய்க்குள் வர்த்தக மாகும். இதற்கு சப்போர்ட் லெவல் 4,900-4,850 ரூபாயாக கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

மிளகு!

கமாடிட்டி!

இந்திய மிளகிற்கு குறைந்த ஏற்றுமதி தேவை இருந்த காரணத்தால் கடந்த வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. இருந்தாலும் சப்ளை குறைவாக இருந்ததால் மேலும் விலை குறையவில்லை. கொச்சி சந்தையில் தின வரத்தாக 11 டன் இருந்தது.

வியட்நாம் நாட்டில் மிளகு அறுவடை முடிவடைந்துள்ளது. எனினும் விவசாயி கள் குறைந்த விலைக்கு மிளகை விற்பனை செய்ய முன்வரவில்லை. 2011-2012-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகு கடந்த வருடத்தைவிட 42% அதிகரித்து, 26,700 டன்னாக இருப்பதாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் மிளகு ஏற்றுமதி 129% கடந்த வருடத்தைவிட அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் மிளகு ஜூலை மாத கான்ட்ராக்ட் குவிண்டால் ஒன்றுக்கு 40,990 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கமாடிட்டி!

- பானுமதி அருணாசலம்,
படம்: ஜெ.வேங்கடராஜ்.

கமாடிட்டி!