மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, முதலீட்டு உலகிலும் முன்னணியில் இருப்பவை வங்கிகள். நிஃப்டி 50-ல் இருக்கும் பங்குகளில் ஏழு பங்குகள் வங்கித் துறை பங்குகள்! எந்த ஒரு டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளை எடுத்துப் பார்த்தாலும், அதில் குறைந்தபட்சம் 10 சதவிகித அளவுக்கு வங்கிப் பங்குகள் இருக்கும். அவ்வளவு ஏன்? பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எந்த ஒரு முதலீட்டாளரும் ஏதாவது ஒரு வங்கிப் பங்கை வாங்கி வைத்திருப்பார்.

##~##
ங்கி, அதிலும் பொதுத் துறை வங்கிகளை அந்த அளவுக்கு நம்புகின்றனர் முதலீட்டாளர்கள். ஆனால், தற்போது சந்தையில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மெயிலை படித்தால் பொதுத் துறை வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் முதலீடு செய்ய நினைப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பன்னாட்டு புரோக்கிங் நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ. நிறுவனத்தின் அறிக்கைதான் மெயில் வடிவில் எல்லோரையும் சுற்றி வருகிறது. ''பொதுத் துறை வங்கிகளின் மதிப்பு கவர்ச்சிகரமாகத் தெரியும். ஆனால், அது ஒரு கானல் நீர்தான். மதிப்பீடுகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த பங்குகள் மேலே செல்லும் சாத்தியம் குறைவு'' என்று எச்சரித்திருக்கிறது சி.எல்.எஸ்.ஏ. புரோக்கிங் நிறுவனம். இந்த நிறுவனம் இப்படி சொல்ல என்ன காரணம்?

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?
பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

1. தகுதிக்கு மீறிய கடன்!

பொதுத் துறை வங்கிகள் தன்னுடைய சக்திக்கு மீறி கடன் கொடுத்திருக்கின்றன. பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளின் அசெட் ஈக்விட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதாவது, அதிகளவுக்கு கடன் கொடுத்திருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது.

பொதுத் துறை வங்கிகளின் சராசரி அசெட் ஈக்விட்டி 17 மடங்கு என்ற அளவில் இருக்கிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு இந்த விகிதம் 10 மடங்குதான் இருக்கிறது. கார்ப்பரேஷன் பேங்க், யூகோ பேங்க், சிண்டிகேட் பேங்க் போன்ற வங்கிகளுக்கு இந்த விகிதம் 20-க்கு மேல் இருக்கிறது. அதிகளவு லிவரேஜ் செய்திருக்கும்போது கடன்கள் சில சதவிகிதம் அளவுக்கு வரமுடியாமல் போனால்கூட வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. (பார்க்க அசெட் - ஈக்விட்டி விகிதம் பற்றிய சார்ட்)

2. ரிஸ்க்கான துறைகளில் கடன்!

தனியார்த் துறை வங்கிகளை ஒப்பிடும்போது பொதுத் துறை வங்கிகள் அதிக ரிஸ்க் இருக்கும் துறைகளான பவர், இன்ஃப்ரா, எஸ்.எம்.இ. டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக அளவில் கடன் தந்திருக்கிறது. இதிலும் அதிக ரிஸ்க் இருக்கும் புராஜக்ட்களுக்கு சில பொதுத் துறை வங்கிகள் கடன் தந்திருக்கிறது. சில வங்கிகள் தாங்கள் தந்திருக்கும் கடன்களில் 30% வரை ரிஸ்க்கான கடன்கள் இருக்கிறது.

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?
பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

குறிப்பாக, மின் துறைக்கு கொடுத்திருக்கும் கடன்களில் 10% வாரக் கடன்கள் என கொண்டால் சில வங்கிகளின் மொத்த நெட்வொர்த் (மதிப்பு) 15% அளவுக்கு சரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தனியார் வங்கிகள் மின்துறைக்கு கொடுத்திருக்கும் கடன்களில் 10% வாராக் கடன்கள் என்றால் அந்த வங்கிகளின் சொத்து மதிப்பு 2% தான் குறையும் என்று சொல்கிறது சி.எல்.எஸ்.ஏ.  இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது குறைந்தபட்சம் 14% ஒரு வங்கி வளர்ச்சி அடைந்தால்தான் இப்போது இருக்கும் நிலையிலே இருக்க முடியும். இதற்கும் கீழ் குறையும் போது சொத்தின் மீதான வருமானம் (ரிட்டர்ன் ஆன் அசெட்) குறையும் என்று சொல்லி இருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் சிறிய பொதுத் துறை வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணை வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அந்த ரிப்போர்ட் சொல்லி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த இரண்டு முக்கிய பிரச்னைகள் இல்லாமல் இன்னும் சில பிரச்னைகளும் பொதுத் துறை வங்கிகளுக்கு இருப்பதாகவே தெரிகிறது. கடன் கொடுத்த தொகைக்கு சமமான அளவுக்கு பல வங்கிகள் பிணையை வாங்கவில்லை. குறிப்பாக, கிங்ஃபிஷருக்கு 13 வங்கிகள் கடன் தந்தது. இதற்கு சரியான பிணையை வங்கிகள் வாங்கவில்லை. மேலும், பொத் துறை வங்கிகளில் இருக்கும் யூனியன் பிரச்னை, சமமான அளவில் ஊதியத்தை உயர்த்துவது போன்ற பிரச்னைகளும் வங்கிகளின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று அந்த ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது.

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

இதுகுறித்து சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்டின் செயல் இயக்குநர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.

''இந்த ரிப்போர்ட் சொல்லும் பிரச்னைகளை மறுக்க முடியாது. ஆனால், பேங்கிங் சிஸ்டம் தவறு என்றோ, அதில் பெரிய பாதகமான விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்றோ நான் நினைக்கவில்லை. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளின் நிகர வாராக் கடன் 7% என்ற அளவில்தான் இருந்தது. ஆனால், இப்போது அவை மிகவும் குறைந்துவிட்டது. பருவமழை சரியாக இருந்து, வட்டி விகிதம் குறைக்கப்படும்பட்சத்தில் ரிஸ்க்கான துறைகளில் இருந்து வருமானத்தைப் பெற முடியும். இருந்தாலும் இத்துறை குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்றார்.

இதுகுறித்து, கே.பி.எம்.ஜி. -யின் செயல் இயக்குநர் நாராயணன் ராமசாமியிடம் பேசினோம்.

''பொதுத் துறை வங்கி களையும் தனியார் வங்கி களையும் ஒப்பிடுவதே சரி இல்லை. பொதுத் துறை வங்கிகள் முன்னுரிமை கடன் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அந்த கட்டாயம் தனியார் வங்கிகளுக்கு இல்லை. மேலும், மின்துறை இன்றைக்கு வேண்டு மானாலும் வருமானம் கொடுக் காத துறையாக இருக்கலாம். ஆனால், நாளை கொடுக்கும். அதேபோல, எஸ்.எம்.இ.களுக்கு கடன் கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் மத்திய வங்கிகளுக்கு இருக்கிறது. அதற்காக எல்லா பொதுத் துறை வங்கிகளும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வில்லை. ஆனால் சில வங்கிகள் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது'' என்று முடித்துக் கொண்டார்.

பொதுத் துறை வங்கிகளில் பெரிய பிரச்னை இல்லை என்றாலும் எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்!

பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா?

- வா.கார்த்திகேயன்.