10,000 வருமானமா? வாங்க சேமிக்கலாம்!
நாணயம் பரிந்துரைத்த பங்குகள்..!
குறைவான வருமானம் வாங்குகிறவர்கள் பங்குகளிலும் முதலீடு செய்யலாம் என்பதைச் சொல்லி, விலை குறைந்த அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளை பரிந்துரை செய்திருந்தோம். சில பங்குகள் இன்றைய நிலையில் நஷ்டம் தந்திருந்தாலும் இந்த பங்குகள் நீண்ட கால அடிப்படையில் லாபம் தர வாய்ப்பு இருக்கிறது.

ஓய்வுக்கால முதலீடு!
##~## |
உதாரணத்திற்கு 25 வயதுள்ள ஒருவர் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து மாதம் 1,000 ரூபாயை எடுத்து குறைந்தபட்சம் 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் அவரின் ஓய்வுகாலம் (60 வயது வரை) வரை முதலீடு செய்து வந்தால் 64.30 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது போக அரசாங்க உத்தியோகமாக இருந்தால் கிடைக்கும் பென்ஷன், அலுவலகங்களில் இருந்து வரும் பி.எஃப். மற்றும் பணிக்கொடை போன்றவற்றை வைத்து ஓய்வுக்காலத்தை சிறப்பாக கழிக்கலாம்!

ஹவுஸ் ஹோல்டர் பாலிசி!
மனிதனுக்கு எப்படி டேர்ம் இன்ஷூரன்ஸும், ஹெல்த் இன்ஷூரன்ஸும் அவசியமோ, அதேபோல் நமது சொந்த வீட்டுக்கும் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி அவசியம். சிறுக சிறுகச் சேமித்து வீடு வாங்கியவர்கள் இந்த ஹவுஸ் ஹோல்டர் பாலிசியை எடுக்க வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கு இயற்கை அல்லது செயற்கையாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்கும்.
வீட்டுக்கு மட்டுமல்லாமல் வீட்டினுள் இருக்கும் விலை உயர்ந்த தங்க நகைகள், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களுக்கும் சேர்த்து இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம் 50 ரூபாய்தான். உங்களுக்கு அருகில் இருக்கும் பொதுக் காப்பீடு நிறுவனங்களிடம் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ள முடியும்.
- செ.கார்த்திகேயன்