மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

குடும்ப நிதி ஆலோசனை

நேற்று... இன்று... நாளை!

சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து அரசு பணியாளரான ரமேஷ், ''நான் மாசம் 37,500 ரூபாய் சம்பாதிக்கிறேன். என் மனைவி மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இது போக, வீட்டை வாடகைக்கு விட்டிருப்பது மூலம் மாதம் 15,000 ரூபாய் கிடைக்கிறது.

நேற்று... இன்று... நாளை!

க, எங்களது குடும்பத்தின் மொத்த வருமானம் மாதம் 82,500 ரூபாய். குடும்பச் செலவுகள், வீட்டுக் கடன் இ.எம்.ஐ., லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் என்று பார்க்கும்போது மொத்தம் 39,500 ரூபாய் ஆகிறது. மீதி 43,000 ரூபாய் இருக்கிறது. அதே சமயத்தில் மிக முக்கியமான எதிர்காலத் தேவைகளான மகனின் கல்வி, திருமணம் மற்றும் எங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பையும் செய்ய வேண்டி யிருக்கிறது. எங்களுக்கு நிதி ஆலோசனை வழங்க முடியுமா?'' என்று கேட்டு வந்தார் ரமேஷ்.

46 வயதான ரமேஷின் மனைவி உமா ஒரு அரசு பணியாளர். இவர்களின் மகன் ரோஹித் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். ரமேஷ் கொடுத்த விவரங்களை அலசி ஆராய்ந்து நிதி ஆலோசனை சொல்ல ஆயத்தமானார் நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ்.

''கையில் நிலையான வருமானம் இருக்கிறது. தேவைகளுக்கு தக்கபடி முதலீட்டை முறையாகச் செய்து வந்தால், நிச்சயமாக அனைத்து எதிர்காலத் தேவைகளையும் எளிதாக சிரமமே இல்லாமல் பூர்த்தி செய்து கொள்ளலாம். முதலில் இவர் செய்ய வேண்டியது அவசரகாலத் தேவைக்கான பணத்தை முதலில் தயார் செய்வதுதான்..! வங்கி எஃப்.டி. அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டு களில் சுமார் 2.40 லட்ச ரூபாயை போட்டு வைக்க வேண்டும். இந்த பணத்தை இன்னும் சில மாதங்களில் சேமித்து வைப்பது அவசியம்.

நேற்று... இன்று... நாளை!


இன்ஷூரன்ஸ்!

##~##
ஏற்கெனவே தன் பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கிறார். இதற் காக வருடம் 12,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இதேபோல தன் மனைவி பெயரிலும் 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். இன்றைய நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். இது போதாது என்பதால் இன்னும் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது அவசியம். இதற்கு ஆண்டு பிரீமியம் 15,000 ரூபாய்.

மகனின் கல்விக்கு!

மகனை எம்.பி.ஏ. பட்டதாரி ஆக்க வேண்டும் என்கிறார். கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க இன்னும் நான்கு ஆண்டுகள் முழுமையாக இருக்கிறது. மகனை ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டும் என்பது இவரது ஆசை. அதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து 28 லட்சம் ரூபாயாவது இவரிடம் இருக்க வேண்டும்.

இந்த பணத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் எடுக்காமல் எப்படி ஈட்டுவது என்று யோசித்தால், வங்கி ஆர்.டி. முதலீட்டை இதற்காக பரிசீலிக்கலாம். இன்றைய நிலையில் வங்கி ஆர்.டி-க்கள் 10.5% வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. ஆர்.டி. என்பது பாதுகாப்பான முதலீடு என்பதால் எதிர்காலத் தேவை களுக்காக கையில் இருக்கும் 43,000 ரூபாயிலிருந்து மாதம் 20,000 ரூபாயை எடுத்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வங்கி ஆர்.டி.-யில் முதலீடு செய்து வரவேண்டும். இந்த முதலீட்டு முதிர்வின்போது இவருக்கு ஆர்.டி. மூலம் 12 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை!

அரசு பத்திரங்களில் 80,000 ரூபாயை முதலீடு செய்து வைத்திருக்கிறார். நான்கு ஆண்டுகள் கழித்து இதன் மூலம் கிடைக்கும் தொகையையும் மகனின் கல்விக்காகப் பயன் படுத்திக் கொள்ளலாம். பி.பி.எஃப். கணக்கில் 1.60 லட்சம் ரூபாயை தனது மகனின் பெயரில் சேமித்து வைத்திருக்கிறார். இதனுடன் மாதம் 2,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், நான்கு வருடம் கழித்து 3.70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஏற்கெனவே ஒரு லட்சம் கவரேஜ் கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசி களை எடுத்து வைத்திருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த பாலிசி முடிந்துவிடும் என்பதால் இதிலிருந்து 1.20 லட்சம் ரூபாயை எதிர்பார்க் கலாம். இந்த பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வைத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, ஆர்.டி., பி.பி.எஃப்., இன்ஷூரன்ஸ், பாண்டு முதலீடு என மொத்தம் 18 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதி தேவைப்படும் 10 லட்சம் ரூபாய் தொகைக்காக மாதம் 16,500 ரூபாயை 11% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய இன்கம் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு இன்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்தால் பத்து லட்சம் ரூபாயை ஈட்டி விடலாம்.

திருமணச் செலவுக்கு!

இன்றைய நிலையில் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இன்னும் 12 ஆண்டுகள் கழித்துதான் திருமணம் என்பதால் அன்றைய நிலையில் திருமணச் செலவுக்கு சுமார் 5.60 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த பணத்தை ஈட்ட மாதம் 2,000 ரூபாயை குறைந்தபட்சம் 11% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய இன்கம் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக் கூடிய ஆறு லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பாக முடிக்கலாம்.

ஓய்வுக்காலத்திற்கு!

ஓய்வுக்காலத்தில் மாதம் 70,000 ரூபாய் தேவை என்று சொல்லியிருந்தார். கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து ஓய்வுக்காலத்தில் மாதம் 45,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மீதி தேவைப்படும் 25,000 ரூபாய் வருமானத்திற்குத் தேவையான 67 லட்சம் ரூபாயை சேமிக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றைய நிலையில் மகனின் கல்விக்கு 38,500 ரூபாய், திருமணத்துக்கு 2,000 ரூபாய் என மொத்தம் 40,500 ரூபாய் முதலீடு செய்தது போக மீதி இருக்கும் 3,000 ரூபாய் புதிதாக எடுக்கப் போகும் ஆயுள் (மனைவிக்கு) மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் கட்டப் போதுமான தாக இருக்கும்.

இதனால் மகனின் கல்வித் தேவை முடிந்ததும் அதற்காக செய்து வந்த முதலீட்டுத் தொகை 38,500 ரூபாயை 11% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஓய்வுக் காலத்திற்காக பத்து ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக்கூடிய 82 லட்சம் ரூபாயை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் இவர் எதிர்பார்த்த தொகையைவிட அதிக வருமானம் கிடைக்கும்.

இது தவிர, பி.எஃப். மற்றும் பணிக்கொடை என 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால் ஓய்வுக்காலம் குறித்து கவலைப் படத் தேவையில்லை.''

- செ.கார்த்திகேயன்
படங்கள்: பா.சரவணகுமார்

நேற்று... இன்று... நாளை!