மை டியர் மணி!

''கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த எனது சித்தப்பா, தன்னிடம் வேலை பார்த்தவர்களுக்கு இரண்டு மடங்கு கூலி அதிகம் தருவார். அவர்கள் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவார். 35 வயதில் அவர் இறந்தபோது ஊரே அழுதது. இப்போதும்கூட என் கிராமத்தில் அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். அவர்தான் எனக்கு ரோல் மாடல்.
##~## |
இப்போதும் கல்வி உதவி என்று என்னைத் தேடி வருபவர்களுக்கு என் சம்பளத்திலிருந்து ஒரு தொகை கொடுத்து வருகிறேன். இது போன்றவர்களுக்கு அதிகம் உதவ முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதால் தேவையற்ற செலவு கிடையாது. எனவே, எந்த கடனும் வாங்கியதில்லை. பண விஷயத்தில் ஒழுக்கம் தவறக்கூடாது என்பதில் வைராக்கியத்துடன் இருக்கிறேன்.
பொதுவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற இலக்கு மட்டுமே கொண்டவர்களை நான் திறமைசாலியாக அங்கீகரிப்பதில்லை. பணம் மட்டுமே என்கிற இலக்கு, ஒருவருக்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய உறவுகளை உடைத்து விடுகிறது. சுயமுன்னேற்றம், தான் மட்டுமே உயர வேண்டும் என்கிற போக்கு இல்லாமல் அனைவரும் உயருவதற்கு உரிய எல்லா பண்புகளையும் எல்லோருமே கொண்டிருக்க வேண்டும்.
யாராலும் வள்ளுவத்தைப் பொய்யாக்க முடியாது. ஆனால், பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் சொன்னதைப் பொய்யாக்க வேண்டும் என்பதே என் ஆசை.
- நீரை.மகேந்திரன்.
படம்: ச.இரா.ஸ்ரீதர்