மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ளது போலவே, தினமும் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய அமைச்சகம் ஆயில் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறது. ''திடீரென பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதால் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. போராட்டங்கள் வலுப்படுகின்றன. பொது உடைமைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

##~##
து போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதவண்ணம்,  பெட்ரோல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறையை நம் நாட்டிலும் கொண்டு வரவேண்டும்'' என்று பெட்ரோலிய அமைச்சகம் நினைக்கிறது.  

இந்தத் திட்டம் நம் நாட்டில் சாத்தியப்படுமா? இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்களா? என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷனின் தலைவர் கண்ணனிடம் கேட்டோம்.

சாத்தியமில்லை!

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

''இன்று நம் நாட்டில் இருக்கும் வசதிகளைக் கொண்டு பெட்ரோல் விலையை தினசரி நிர்ணயம் செய்ய முடியுமா என்று கேட்டால், சாத்தியமில்லை என்றுதான் சொல்வேன். வாரம் ஒருமுறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆயில் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் பல மாதங்களுக்கு முன்பே  கோரிக்கை வைத்தன. அரசாங்கம் இந்த கோரிக்கை யையே இன்னமும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தாத போது, தினமும் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்குமா என்பது சந்தேகமே! வாரம் ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய முதலில் அரசாங்கம் அனுமதி தரட்டும். அதன்பிறகு தினசரி விலை மாற்றம் என்பதை நடைமுறைப்படுத்தலாம்.  

பெட்ரோல் விலை தினசரி நிர்ணயமாகும் முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சில விஷயங் களை கட்டாயம் செய்தாக வேண்டும். பெட்ரோல் விலை மாற்றத்தை அன்றன்றைக்கு அரசாங்கத்துக்குத் தெரியப் படுத்துகிற மாதிரி மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து பெட்ரோல் பங்கு களிலும் பெரிய டிஜிட்டல் போர்டுகளை பொருத்தி விலையை அறிவிக்க வேண்டும்.

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

இந்த டிஜிட்டல் போர்டு மனிதனின் இயக்கத்தில் இல்லாமல் ஒரே ஒரு சர்வரின் கீழ் இயங்குவதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, என்ன காரணத்தினால் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகிற மாதிரி மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

பாதகமில்லை, சாதகமே!

ஆனால், தினசரி பெட்ரோல் விலை நிர்ணய முறை வருவது வரவேற்கத்தக்க விஷயம்தான். பல மாத காலத்துக்கு விலையை உயர்த்தாமலே இருந்து, ஒரே சமயத்தில் திடீரென அதிக அளவில் விலை அதிகரிப்பதால் மக்களிடம் தேவையில்லாத பேச்சுக்கும்,  கோபத்திற்கும் ஆளாக வேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்படுகிறது. ஆனால், தினசரி விலை நிர்ணய முறை வரும்பட்சத்தில் மக்களுக்கு எந்த சுமையும் தெரியாது.

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

டூ வீலர் வைத்திருப்பவர்கள், பெட்ரோலை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் என பெரும்பாலானவர்களுக்கு வரும் பாதிப்பு குறையும். தினசரி விலை மாற்றம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பெட்ரோலின் விலையின் ஏற்ற, இறக்கம் நாள் ஒன்றுக்கு 25 பைசா என்கிற அளவில்தான் இருக்கும். இந்த மாற்றம் பலருக்கும்  பெரிய பொருட்டாக இருக் காது என்பதால், இதை ஒரு பிரச்னையாக நினைக்க மாட்டார்கள்'' என்றார் விளக்கமாக.

உள்ளபடி பார்த்தால், சாதாரண மக்களுக்கு இந்த புதிய முறையால் நல்லதே நடக்கும். இந்த முறையில் விலையேற்றம் பெரிய அளவில் இருக்காது என்பதால் காய்கறி விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, கூடிய விரைவில் இந்த கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதே சாதாரண மக்களின் கருத்து.

பெட்ரோல் விலை: இனி தினமும் ஷாக்!

- செ.கார்த்திகேயன்,
படங்கள்: க.கோ.ஆனந்த், ஜெ.வேங்கடராஜ்.