Election bannerElection banner
Published:Updated:

வருமான வரி திட்டமிடல்: சென்னை பெண்கள் முன்ணனி!

வருமான வரி திட்டமிடல்: சென்னை பெண்கள் முன்ணனி!

வருமான வரி திட்டமிடல்: சென்னை பெண்கள் முன்ணனி!
##~##
பொ
துவாக சேமிப்பு உணர்வு என்பது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம். அதே போல் வீட்டு நிர்வாகத்தை பெண்களை போல் பொறுப்பாக கவனித்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

அந்த வகையில் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய உதவும் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல், ஆண்களை விட பெண்கள் வருமான வரியை மிச்சப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதே! டேக்ஸ் ஸ்பேனர் என்கிற நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 500-ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டதில் வருமான வரியில் அதிகமாக சேமிப்பவர்கள் பெண்களே என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் வருமான வரி சேமிப்பில் முதல் இடம் பிடித்திருப்பவர்கள் சென்னை பெண்கள். இவர்கள் தங்களுடைய ஆண்டு மொத்த வருமானத்தில் இரண்டு சதவிகிதம் தொகையைத்தான் வருமான வரியாக செலுத்தி வருகிறார்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லி நகர பெண்கள் மூன்று சதவிகித வருமான வரியையும், மூன்றாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு பெண்கள் நான்கு சதவிகிதம் வருமான வரியையும் செலுத்தி இருக்கிறார்கள்.

இதனால் நம் நாட்டிலேயே சென்னை பெண்கள்தான் வருமான வரி சேமிப்பில் மூத்தவர்கள் என்கிற பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

இன்றைய நிலையில் சென்னை பெண்களின் ஆண்டு சராசரி வருமானம் நான்கு லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது. இதில் இரண்டே இரண்டு சதவிகித தொகையைத்தான் வருமான வரியாக செலுத்தி வருகிறார்கள். இவர்கள் ஹெச்.ஆர்.ஏ, மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு கூட சரியாக வருமான வரிச் சலுகையை கிளைம் செய்து வருகிறார்கள். இதனால் மற்ற நகர ஆண்கள் மற்றும் பெண்களை விட சென்னை நகர பெண்கள் வருமான வரிச் சலுகைகளை முறையாக பயன்படுத்தி வருகிறார்களாம்.

சென்னை பெண்களுக்கு இனி கெத்துதான்!

- செ.கார்த்திகேயன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு