Election bannerElection banner
Published:Updated:

2012: இது வரை எஃப்.ஐ.ஐ.கள் 55,380 கோடி ரூபாய் முதலீடு!

2012: இது வரை எஃப்.ஐ.ஐ.கள் 55,380 கோடி ரூபாய் முதலீடு!

2012: இது வரை எஃப்.ஐ.ஐ.கள் 55,380 கோடி ரூபாய் முதலீடு!
##~##
ஜெ
னரல் ஆண்டி அவாய்டனஸ் ரூல் என்கிற கார் பிரச்னை உள்ளிட்டவைகளால், நடப்பு 2012 ஆம் ஆண்டில் சுமார் 3 மாதக் காலத்துக்கு எஃப்.ஐ.ஐக்கள் (அந்நிய நிதி நிறுவனங்கள்) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து விலகி இருந்தார்கள். அந்த பிரச்னை இப்போதைக்கு இல்லை என்பதால் எஃப்.ஐ.ஐக்கள் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் முதலீட்டை கொட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டில் இதுவரை பங்குகளில் 1,000 கோடி டாலருக்கு (சுமார் 55,380 கோடி ரூபாய்) மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். இது தவிர கடன் ஆவணங்களில் 1429 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறார்கள்.

நடப்பு ஜூலை மாதத்தில் இது வரை, எஃப்.ஐ.ஐக்கள் 155 கோடி டாலர் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இனியாவது இந்திய சந்தை மேலேறுகிறதா பார்ப்போம்...!

- சேனா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு