Election bannerElection banner
Published:Updated:

பால பாடம்: மியூச்சுவல் ஃபண்ட் விளக்கம்!

மியூச்சுவல் ஃபண்ட்!, தமிழில் பரஸ்பர நிதி.

பால பாடம்: மியூச்சுவல் ஃபண்ட் விளக்கம்!
##~##
சி
ம்பிளாச் சொல்லணும்னா பலபேர்கிட்ட பணத்தை வசூலிச்சு, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ... அதுல செஞ்சு பணத்தைச் சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட்!

வங்கிகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்-கள்னு பலர் இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை நடத்துறாங்க.

இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் 'மியூச்சுவல் ஃபண்ட்'னு பெயரே வந்திருக்கு.

நாம கொடுக்கிற பணத்தை பல திட்டங்கள்ல பிரிச்சு அவங்க முதலீடு செய்றாங்க. ஒண்ணுல லாபம் குறைஞ்சாலும் இன்னொண்ணு லிஃப்ட் பண்ணி விட்டுரும். அதனால, முதலுக்கே மோசமாயிடுமோங்கிற கவலையும் நமக்கு இருக்காது.

சும்மா, காலையில பத்து நிமிஷம், அப்படி இப்படி கம்ப்யூட்டரைத் தட்டி, போட்ட பணம், என்.ஏ.வி. இதெல்லாம் எப்படிப் பெருகியிருக்குதுனு பார்த்துட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடலாம்.

ஷேர் மார்க்கெட்டுல நேரடியாக நுழைஞ்சு நம்மோட திறமையின்மையால கையைச் சுட்டுக்கிடற நிலைமை எல்லாம் இதுல கிடையாது. ஆரம்பத்துல நமக்குப் பிடிச்ச திட்டத்தை செலக்ட் பண்றப்போ மட்டும் கொஞ்சம் அலர்ட்டா இருந்துட்டா, மார்க்கெட்டுக்கு சமமா லாபம் பார்க்கலாம்.

நம்ம ரேஞ்ச் என்ன... எதுவரைக்கும் ரிஸ்க் எடுக்கலாம்ங்கிறதையும் முன்கூட்டியே தீர்மானிச்சுக்கலாம். ஒருவேளை நம்ம முதலீடு சரியான டைரக்ஷன்ல போகலையோன்னு சந்தேகம் வந்தா ஈஸியா எஸ்கேப் ஆகி வெளிய வந்துடலாம்.

ரியல் எஸ்டேட் மாதிரி மொத்தமா முதலீடு செய்யணும்ங்கிற அவசியம் இல்லை. மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்ய-லாம். சில திட்டங்கள்ல (இ.எல்.எஸ்.எஸ்.) நாம பண்ற முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் விலக்கும் கிடைக்கும்.

மாசா மாசம் ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல போடலாமானு நீங்க யோசிச்சாலே போதும், 'சார்... ஏதோ முதலீடு பத்தி யோசிச்சீங்க போலிருக்கு'னு எதிரே ஒரு ஆள் வந்து நின்னுடுவார். அந்த அளவுக்கு துடிப்பா இருக்கிறாங்க மியூச்சுவல் ஃபண்ட் ஆளுங்க. ஒரு வார்த்தை சொன்னால் நம் வீட்டுக்கே ஓடிவரத் தயாராக இருக்கிறார்கள் ஏஜென்டுகள்.

தமிழ்நாட்டுல இருக்கிற பெரும்பாலான சிட்டிகள்ல இவங்களோட சர்வீஸ் இருக்குது. ஷேர் புரோக்கிங் ஆபீஸ்கள்லயும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைச் செய்யமுடியும். யூ.டி.ஐ. மாதிரியான அரசு நிறுவனங்களோட மியூச்சுவல் ஃபண்டுகளை போஸ்ட் ஆபீஸ்களிலேயே வாங்க-லாம். வங்கிகள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளை, அந்தந்த வங்கி-யிலேயே வாங்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிக்கே நேரடியாப் போயும் முதலீடு செய்யலாம். அல்லது அவங்களோட வெப்சைட்டுக்குப் போயும் முதலீடு செய்யலாம்.

- சி.சரவணன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு