Election bannerElection banner
Published:Updated:

வீட்டுக் கடன் வாங்கியேத் தான் தீர வேண்டுமா?

வீட்டுக் கடன் வாங்கியேத் தான் தீர வேண்டுமா?

வீட்டுக் கடன் வாங்கியேத் தான் தீர வேண்டுமா?

ர் முழுக்க நாம சுத்தித் திரிஞ்சாலும் நினைப்பு மட்டும் எப்பவும் வீட்டைச் சுத்தியேதான் இருக்கும். எங்க போனாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் கடைசியா வீட்டுக்கு வந்து சேர்ந்தாதான் நிம்மதி. வீடுங்கிறது வாழ்க்கையோட அங்கம்.. அந்த அளவுக்கு வீட்டை நாம நேசிக்கிறோம். அதனாலதான் சொந்த வீடுங்கிறது எல்லாருடைய கனவா இருக்கு.

ஆனா, இப்போ இருக்கிற நிலைமையில ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பம் வாங்குற அளவுக்கா வீட்டோட விலை இருக்கு..? யானை விலை, குதிரை விலையைக் கூட உதாரணம் சொல்ல முடியாத அளவுக்கு விலை எகிறிக் கிடக்கு. வாடகை வேற ஒவ்வொரு வருஷமும் தாறுமாறா ஏறுது. கொஞ்சம், கொஞ்சமா பணத்தைச் சேர்த்து சொந்தமா ஒரு வீடு வாங்கலாம்னா, பிராக்டிக்-கலா அதுவும் முடியலை. ஏறிக்கிட்டே போற விலைவாசியில எங்கே-யிருந்து சேர்த்து வைக்கிறது.? மொத்தமா பணத்தைப் போட்டு வீட்டை வாங்குறது! பிறகு எப்படித்தான் கனவை நிறைவேத்தறது? கடன்தான். வீட்டுக்-கடன்தான்!

வீட்டுக்கடன் தப்பில்லை!

'மொத்தப் பணத்தையும் சேர்த்த பிறகுதான் வீடு வாங்குவேன்'னு நினைச்சிருந்தா இன்னைக்கு சொந்த வீட்டுல இருக்குறதுல பாதிப் பேரு வாடகை வீட்டுலதான் இருந்திருக்கணும். யாரும் பணத்தை கையில வச்சுகிட்டு எதையும் ஆரம்பிக்கிறதில்லை. சரியான நோக்கம், திட்டமிடல்... இது இருந்தா கடன் வாங்குறதுல தப்பு இல்லை.

வீட்டுக்கடனும் அப்படித்தான்! இப்போதைக்கு சுலப வழி இது ஒண்ணுதான்.

##~##
கடன் வாங்கும் முன்பு ஒரு நிமிஷம்...

வீட்டுக்கடன் வாங்குறதுக்கு முன்னாடி சில அவசியமான, அடிப்படை விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும். அதாவது வேற ஏதாவது தனி நபர்கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன்னு இருந்தா அதையெல்லாம் அடைச்சிட்டு வீட்டுக் கடன் பக்கம் வர்றது நல்லது. அப்பத்தான் கடன்ல வாங்குன வீட்டுல நிம்மதியா வாழமுடியும்.

வீட்டோட மதிப்புக்கு 100% கடன் தர்றாங்கன்னா, 'சிக்கிட்டாய்ங்-கடா'ன்னு நினைச்சு பூராத்தையும் வாங்கிடக்கூடாது. அது வட்டிச் செலவை அதிக-மாக்கிடும். அப்புறம், முத்திரைத்தாள் கட்டணம், கடனுக்கான இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கூடுதல் செலவுன்னு வரிசையா செலவுகள் வந்து நிக்கும். அதனால நம்மோட வருமானம், தேவை இதுக்குத் தகுந்தமாதிரி கடன் வாங்கணும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 1995-வது வருஷத்துல 17 சதவிகிதமா இருந்துச்சு. அது இடையில 7.5 வரைக்கும் குறைஞ்சு, இப்போ 10-12.5 சதவிகிதம்ங்கிற அளவுல இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்ததைவிட, இப்போ கடனுக்கு கட்ட வேண்டிய மாதத் தவணை குறைஞ்சிருக்கு. 17% வட்டி இருந்த காலத்துல 10 லட்ச ரூபாய் கடனை 15 வருஷத்-துல திருப்பிக் கட்டுறதா இருந்தா... மாதத் தவணை 15,390 ரூபாய். இதுவே 11% வட்டின்னா, மாதத் தவணை 11,370 ரூபாய்தான்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

நீங்க வாங்கப் போற அல்லது கட்டப்போற வீட்டுக்கான முழுச் செலவுக்கும் கடன் தர மாட்டாங்க. மொத்தத் தொகையில சுமார் 15-20 சதவிகிதப் பணத்தை நீங்க கையிலேர்ந்து போடவேண்டி வரும். இதை 'மார்ஜின் மணி' அப்படிங்கிறாங்க. இந்தப் பணத்தையும் கடனா வாங்கக்-கூடாது. அப்புறம் கடன் தொகை கூடுதலாகி, கட்டுறதுல சிரமமாயிடும். அதனால, இந்த மார்ஜின் தொகையை தயார் செஞ்சுகிட்டு, அதுக்கு அப்புறமாதான் கடன் வாங்கணும்.

கடன் தர்றதுக்கு வீட்டோட மொத்த மதிப்பை கணக்குப் பண்ணுறது ஒரு பக்கம் இருந்தாலும், கடன் வாங்குறவரோட மாத வருமானம் எவ்வளவுங்குறதும் முக்கியமான விஷயம். இதன் அடிப்படையிலதான் எவ்வளவு கடன் தர்றதுங்குறதை முடிவு செய்வாங்க. பொதுவா ஒருத்தரோட நிகர மாதச் சம்பளத்தை போல 40-லிருந்து 60 மடங்கு வரை வீட்டுக் கடனாக தருவாங்க. மாதச் சம்பளம் 15-20 ஆயிரத்துக்குள்ள இருந்தா 40-45 மடங்கும், 25-40 ஆயிரம் ரூபாய்ன்னா 50-55 மடங்கும் கடன் கிடைக்கும்.

இதை ஒரு உதாரணம் மூலமா பார்த்தா சட்டுன்னு புரியும். பிரபு, 20 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கப் போறார்னு வச்சுக்குவோம். இதுல 20% தொகையான 4 லட்ச ரூபாயை அவர் கையிலேருந்து போடணும். மீதி 16 லட்ச ரூபாய்தான் கடனா தருவாங்க! இந்தத் தொகையை கடன் வாங்க பிரபுவோட மாதச் சம்பளம் சுமார் 35,000 ரூபாயா இருக்கணும். இதுக்கு குறைஞ்சா 16 லட்ச ரூபா கடன் கிடைக்காது. 'அந்த வீட்டை வாங்கியே ஆகணும்'னு பிரபு விருப்பப்பட்டா, கடன் கிடைச்சது போக மீதித் தொகை-யையும் கையி-லேர்ந்துதான் போட்டாகணும்.

- சி.சரவணன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு