பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் வளமே!
##~##
''நா
னும் என் மனைவியும் வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்க்குற வேலை பார்த்துட்டு வர்றோம். மனசுக்குப் புடிச்ச வேலைங்கறதால முழு ஈடுபாட்டோட செஞ்சுட்டு வர்றோம். அரசு உத்யோகம்ங்கறதால எனக்கு மாதம் 50,000 ரூபாயும், மனைவிக்கு 50,000 ரூபாயும் வருமானம் கிடைக்குது. எங்களுக்கு ஒரே ஒரு மகன் ரிஷிரமணன். ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கான். அவனோட வாழ்க்கைதான் இனி எங்க வாழ்க்கைன்னு வாழ்ந்திட்டு இருக்கோம். அவனோட கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்கணும். இப்போதைக்கு இதுதான் எங்களோட மிக முக்கியமான தேவை. இதற்கு எப்படி முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்வது என்பதை நீங்கள்தான் எங்களுக்குச் சொல்லணும்'' என்று கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் கால்நடை மருத்துவர் சரவணன்.

வரவு - செலவு விவரம்

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

சொத்து மற்றும் கடன் விவரம்!

இனி எல்லாம் வளமே!

• பூர்வீகச் சொத்தில் இவரின் பங்கு 50 லட்சம் ரூபாய்.

• சொந்தமாக இவரின் வசம் இருக்கும் நிலத்தின் தற்போதைய மதிப்பு 50 லட்சம் ரூபாய்.

• பெண்ணாடத்தில் உள்ள சொந்த வீடு - தற்போதைய மதிப்பு   40 லட்சம் ரூபாய்.

வங்கியில் வாங்கியிருக்கும் வீட்டுக் கடன் 20.80 லட்சம் ரூபாய். தற்போதைய இ.எம்.ஐ. 18,540 ரூபாய் (வட்டி 9%). இன்றைய நிலையில் இருக்கும் கடன் 15.30 லட்சம் ரூபாய். மூன்று ஆண்டுகள் கட்டி முடித்தாகிவிட்டது. இன்னும் 17 ஆண்டுகள் கட்ட வேண்டும். அக்டோபர் மாதத்திலிருந்து மாதம் இ.எம்.ஐ. தொகையாக 22,000 ரூபாய் (வட்டி 11.50%) கட்ட வேண்டும்.

இனி எல்லாம் வளமே!

என்ன தேவை?

• வேகமாக வீட்டுக் கடனை அடைப்பது.

• மகனை ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைக்க இன்றைய நிலையில் 30 லட்சம் ரூபாய் தேவை.

• மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் 10 லட்சம் ரூபாய் தேவை.

• தம்பதிகள் ஓய்வு பெறும்போது, சம்பளத் தொகையிலிருந்து 50% தொகை மாத பென்ஷனாக கிடைக்கும். தேவையான அளவு ஓய்வுக்கால செலவிற்கு இன்னும் எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம்?

டாக்டர் சரவணன் சொன்ன குடும்ப வரவு, செலவு, சேமிப்பு விவரங்களின் அடிப்படையில் அவர் கேட்டுக்கொண்ட எதிர்காலத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று நிதி ஆலோசனை சொன்னார் பஜாஜ் கேப்பிட்டல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் நிதி ஆலோசகருமான ராமகிருஷ்ணன் வி.நாயக்.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

அவசர கால நிதி மற்றும் இன்ஷூரன்ஸ்!

''முதலில் இவர் அவசர காலத் தேவைக்காக 60,000 ரூபாயை (ஆறு மாத குடும்பச் செலவுகளுக்கான தொகை) வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைக்க வேண்டும். இதை இன்னும் சில மாதங்களுக்குள் சேமித்து வைத்துவிடுவது நல்லது. ஏற்கெனவே தன் பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கிறார். இதற்கு வருட பிரீமியம் 9,716 ரூபாய். இதில் 42 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட தனிநபர் விபத்துக் காப்பீட்டு வசதியும் இருக்கிறது. கணவன், மனைவி இருவரும் அரசு பணியாளர்கள் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது.  

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

மகனின் கல்விக்கு..!

மகனை ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைக்க இன்றைய நிலையில் 30 லட்சம் ரூபாய் தேவை என்று சொல்லியிருந்தார். இன்னும் ஏழு ஆண்டுகள் கழித்து அது 45 லட்சம் ரூபாயாகத் தேவைப்படும். இந்த பணத்தை ஈட்ட மாதம் 40,000 ரூபாயை 10% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், வீட்டுக் கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தற்போதைய இ.எம்.ஐ. தொகையைவிட கொஞ்சம் அதிகமான தொகையைக் கட்டி ஆறு ஆண்டுகளில் வீட்டுக் கடனை அடைக்க வேண்டும். இதனால் எதிர்காலத் தேவைக்கு மீதமிருக்கும் தொகையில் 20,000 ரூபாயை எடுத்து 10% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 24.19 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை ஆரம்பத் தொகையாக பயன்படுத்திக்கொள்ளலாம். மீதி தேவைப்படும் தொகைக்கு ஏற்கெனவே செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, ஆர்.டி. போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பி.எஃப். கடன் மூலமும் கல்வித் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இனி எல்லாம் வளமே!
இனி எல்லாம் வளமே!

மகனின் திருமணத்திற்கு..!

மகனின் திருமணத்திற்கு இன்றைய நிலையில் 10 லட்சம் ரூபாய் தேவை. இன்னும் 16 வருடங்கள் கழித்து 29 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 4,400 ரூபாயை சுமார் 13.50% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

இனி எல்லாம் வளமே!

ஓய்வுக்காலத்திற்கு..!

சரவணனின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 18 ஆண்டுகளும், மனைவி வேங்கடலட்சுமிக்கு இன்னும் 22 ஆண்டுகளும் பாக்கி இருக்கிறது. இவர்கள் ஓய்வு பெறும்போது இருக்கும் சம்பளத் தொகையிலிருந்து 50% தொகை மாத பென்ஷனாக கிடைக்கும். தவிர, பி.எஃப். பணிக்கொடை என குறிப்பிட்டத் தொகை கிடைக்கும். இதிலிருந்து வருமானம் ஈட்டலாம். இதனால் ஓய்வுக்காலம் குறித்து இவர் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், கையில் தொகை இருப்பதால் மாதம் 8,400 ரூபாயை 13.50% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 18 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு மூலம் முதிர்வின்போது 72 லட்ச ரூபாய் கிடைக்கும். இதையும் ஓய்வுக்காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்!

இனி எல்லாம் வளமே!

முதலீட்டுத் திட்டம்

இனி எல்லாம் வளமே!

- செ.கார்த்திகேயன்,
படங்கள்: எஸ்.தேவராஜன், ச.இரா.ஸ்ரீதர்.

பிஸினஸ் டானிக்!
ஊழியர்களின் அபிப்பிராயம் என்ன?

சொந்தக் கம்பெனி நடத்துகிறீர்களா? உங்கள் முக்கிய பிரச்னை தனிமை. உங்கள் குணங்களில், செயல்பாடுகளில் ஏதாவது தவறு இருக்கிறதா, திருத்திக்கொள்ள வேண்டுமா என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள். இதற்கு, உங்களைத் தைரியமாக, பாரபட்சமில்லாமல் எடைபோடும் விமர்சனங்கள் தேவை.  

இந்த வசதியை இப்போது தருகிறது, failin.gs இணையதளம். உங்கள் ஊழியர்களும், உறவினர், நண்பர்களும், தங்கள் பெயரை ரகசியமாக வைத்துக்கொண்டு உங்களை தைரியமாக விமர்சிக்கலாம்.

- அத்வைத்

இனி எல்லாம் வளமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு